Saturday, 1 March 2014

குழந்தை வளர்ப்பில் முக்கியமானவை..!



லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்று சொல்கிறார்கள்.எதிரில் நிற்பவன் ஏழை என்று தெரியும்.அவன் கடன் வாங்கித்தான் கொடுக்கவேண்டும்.அடுத்தவன் கஷ்டம் நமக்கு முக்கியமல்ல்! பாலியல் தொல்லைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.வன்கொடுமைகளுக்கு முடிவில்லை.

தங்களது கீழ்த்தரமான ஆசைகளுக்காக உயிர்களைப் பலியாக்குவது பற்றி கவலைப்படுவதேயில்லை.இன்னும் இன்னும் இருக்கிறது.இத்தகைய பிரச்சினைகளுக்குப் பின்னால் உள்ள விஷயம் இதுதான் –நாம் சக மனிதனை எந்திரமாகவே பார்க்கிறோம்.நமது விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாக இருக்கவேண்டுமென்று கருதுகிறோம்.


பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எந்திரமாக நினைத்துக்கொள்வதில் பிரச்சினை துவங்குகிறது.நான் விரும்பும் படிப்பை படிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.தாங்கள் சொல்லும் பையனை,பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

அவர்களுக்கு நல்லது எது என்று எனக்குத்தெரியும் என்பார்கள்.குடும்பங்களைக் கவனிக்கும் பலருக்குத்தெரியும்.பெரும்பாலும் இவையெல்லாம் தந்தையால் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கும். தனது மனைவிக்கு,குழந்தைகளுக்கு மனம் என்று ஒன்று இருக்கிறது என்பது அவர்களுக்கு பொருட்டே அல்ல!

மனத்தினை மறுத்து எந்திரமாக மட்டுமே கருதி வளர்க்கப்பட்ட ஒருவர் சக மனிதனையும் அப்படியே கருதுகிறார்.இன்னொரு மனிதனை புரிந்து கொள்வதில் பிரச்சினை இருக்கிறது.இதன் முதல்படியாக கவனமாக கேட்பது பற்றி சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.நம்மைச்சுற்றி உள்ளவர்களை புரிந்து கொள்ள அவர்களது உணர்வுகளை நாமும் உணரவேண்டும்.இன்றைய மனிதனின் ஆகப்பெரிய துக்கமெல்லாம் என் உணர்வுகளை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்பதாக இருக்கிறது.


ஆங்கிலத்தில் empathy என்ற சொல்வார்கள்.தமிழ் அகராதிகளில் சில இடங்களில் பச்சாதாபம் என்று போட்டிருக்கிறார்கள்.கற்பனையாக இன்னொருவரின் உள்ளக்கிளர்ச்சியை உணர்தல் என்று சில இடங்களில் இருக்கிறது.இன்று வளர்த்தெடுக்க வேண்டிய திறமை என்பது இதுதான்.குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் தேவைப்படும் ஒரு திறமை.

I feel how you feel என்று புரிந்து கொள்ளலாம்.கணவன்,மனைவி ஆகட்டும்,பெற்றோர் குழந்தைகள் ஆகட்டும்,நண்பர்கள்,உடன் பிறந்தவர்கள்என எல்லா உறவுகளிலும் இதுவே முக்கியமானது.ஆமாம்,நீங்கள் உணர்வதை நானும் உணர்ந்தால்? பிரச்சினைகளின் தீர்வு இங்கேதான் இருக்கிறது.நம்மால் அப்படி உணரமுடியாமல்தான் அவர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

கற்பனையாக மற்றவர் உணர்வதை உணரும் திறமையை குழந்தைகளிடம் வளர்க்கவேண்டும். அப்படியானால் நாம் கற்பனைவளத்தை குழந்தைகளிடம் உருவாக்கவேண்டும்.

ஏழை,எளியவர்களுக்காக பரிந்து பேசுபவர்களைப் பார்த்திருக்கிறோம்.அவர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு பேசுகிறார்கள்.சமூகத்தின் பல விஷயங்களை விவாதிக்கிறார்கள்.அவர்கள் எங்கிருந்து அந்த்த் திறமையை பெற்றார்கள்? அவர்கள் பாடப்புத்தகங்களைத்தாண்டி பல்வேறு விஷயங்களை படிக்கிறார்கள்.

Empathy  என்பதை கூடுவிட்டுக்கூடு பாய்வது என்றும் நாம் சொல்லலாம்.நம்முடைய எழுத்தாளர்களை நாம் இப்படி சொல்கிறோம்.அவர்கள் இத்திறமையை எங்கிருந்து பெற்றார்கள்? கவனித்துக்கேட்பதன் மூலமாகவும்,பள்ளிப்படிப்பைத்தாண்டி ஏராளமான நூல்களைப் படித்தும் பெற்றார்கள்.

கலை இலக்கியம் தவிர்த்து இத்திறமையை வளர்த்துக்கொள்வது சாத்தியமானதல்ல! பலருக்கு இந்த அனுபவம் இருக்க முடியும்.சினிமா பார்த்து உணர்ச்சிவசப்படுகிறோம்.நடிப்பவரின் துயரத்தில் நாமும் பங்குபெறுகிறோம்.நாவலில் கதை மாந்தர்களின் உணர்ச்சியை நாமும் அனுபவிக்கிறோம்.நிஜத்தில் அப்படி ஒரு சூழ்நிலையை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

குழந்தைகளுக்கு கதை சொல்வதுதான் முதல்படி.அத்தைகளும் பாட்டிகளும் இதை சிறப்பாக செய்து வந்தார்கள்.இன்றைய சூழல் அப்படி இல்லை.சிறுவர்களுக்கான இலக்கியம்,கலை வளராத சமூகம் ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.உரிய நேரத்தில் புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

பாதி கதை சொல்லிவிட்டு மீதி கதையை அவர்களாக உருவாக்கத் தூண்ட வேண்டும்.குழந்தைகள் கற்கும் திறனில் கற்பனை வளம் நல்ல மாற்றத்தைக்கொண்டு வரும்.சென்ற பதிவில் கூறியவாறு கவனித்துக்கேட்கவும்,சக மனிதர்களின் உணர்வுகளைப்புரிந்து கொள்ளும் திறனும் பெற்றுவிட்டால் போதுமானது.எத்தகைய சூழ்நிலையிலும் ஒருவரால் சிறப்பாக இயங்க முடியும்.

மார்ச் 3 முதல் பேஸ்புக் மசெஞ்சர் செயலிழப்பு..!



கணனிகளில் விண்டோஸ் மூலமாக பேஸ்புக் பயன்படுத்தும் போது மசெஞ்சர் மூலம் தகவல்களைப் பறிமாறிக்கொள்ளும் வசதி, மார்ச் 3ம் திகதி முதல் செயலிழந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்டோஸ் போன் 8 கருவிகளில் பேஸ்புக் மசெஞ்சர் அறிமுகப்படுத்தப்படும் என்று மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்ததற்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


உலகம் முழுவதும் 1 பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பேஸ்புக் வலைத்தளத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.


கணனிகளில் பேஸ்புக்கைப் பயன்படுத்தும் போது வலது பக்கத்தில் மசெஞ்சர் காணப்படும்.

மொபைல் போன்களில் பேஸ்புக்கைப் பயன்படுத்துபவர்கள் தகவல்கள் பக்கத்திற்கோ அல்லது பேஸ்புக் மசெஞ்சர் என்ற மொபைல் சேவையைத் தரவிறக்கம் செய்தோ தகவல்களைப் பறிமாறிக்கொள்ள வேண்டும்.


தற்போது மொபைல் கருவிகள் மூலமாக பேஸ்புக் வலைத்தளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், அதில் கவனம் செலுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.


இதனால் வரும் மார்ச் 3ம் திகதி முதல் கணிப்பொறி விண்டோஸ் மூலமாக பேஸ்புக் மசெஞ்சர் பயன்படுத்துவது நிறுத்தப்படுகிறது.


எனினும் தகவல் பக்கங்களுக்குச் சென்று தகவல்களைப் பறிமாறிக்கொள்ளலாம்.

மனைவியை ஏமாற்றுவதில் இத்தாலி, பிரான்ஸ் ஆண்கள் முதலிடம்...!



மனைவிக்கு துரோகம் செய்வதில் பிரான்ஸ், இத்தாலி நாட்டு ஆண்கள் முதலிடத்தில் இருப்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் கருத்துக் கணிப்பு நிறுவனம், மனைவிக்கு துரோகம் செய்யும் ஆண்கள் குறித்த கருத்து கணிப்பை பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நடத்தியது.

4500 ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்த தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டன.

அதன்படி, வேறு பெண்களுடன் தொடர்பு வைத்து மனைவிக்கு துரோகம் செய்வதில் முதலிடத்தில் இருப்பவர்கள் பிரான்ஸ், இத்தாலி ஆண்கள்தான்.

இரு நாடுகளிலும் 55 சதவீதம் பேர், மனைவிக்கு துரோகம் செய்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டே, நடிகையும் காதலியுமான ஜுலி கயாத்துடன் இருப்பது போன்ற படங்கள் வெளியாயின.

இந்த படங்களால் ஹோலண்டேவுக்கும் அவரது மனைவி வலாரிக்கும் இடையிலான உறவு முறிந்தது.

இந்த சூழ்நிலையில் வெளியாகி உள்ள கருத்து கணிப்பு முடிவு அதிபரும் விதிவிலக்கு அல்ல என்பதையே காட்டுகிறது.

இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமரும் அரசியல் தலைவருமான பெர்லுஸ்கோனியும் பல பெண்களுடன் தொடர்பு வைத்து புகாரில் சிக்கியவர்தான்.

சிறுமிகளுடன் உறவு வைத்ததாக கடந்த ஆண்டு அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெண்களை காதலிப்பது, உண்மையாக நடந்து கொள்வதில் இங்கிலாந்து ஆண்கள் முதலிடத்தில் உள்ளதாக கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும் 42 சதவீதம் பேர் மனைவியை ஏமாற்றுவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஜெர்மனியில் 46 சதவீதம் பேர் மனைவியை ஏமாற்றுகின்றனர் என்று தெரியவந்துள்ளது.

உலக நாயகனின் ‘உத்தம வில்லன்’ ஹீரோயின்கள் யார் தெரியுமா..?



விஸ்வரூபம்-2 படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் மே மாதம் தான் ரிலீஸ் என்பதாக முடிவு செய்திருக்கிறார்களாம்.இதைத் தொடர்ந்து கமல் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் ‘உத்தம வில்லன்’. இந்தப்படத்தை கமலின் நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் தான் இயக்குகிறார்.

இயக்குனர் லிங்குசாமி தயாரிக்க இருக்கும் இந்தப்படத்தின் வசனங்களை கமலின் ஆஸ்தான வசனகர்த்தாவான கிரேசி மோகன் எழுதுகிறார்.ரமேஷ் அரவிந்த் ஏற்கனவே கமலை வைத்து ‘சதிலீலாவதி’ படத்தின் ரீமேக்கை கன்னடத்தில் இயக்கி இருக்கிறார். இந்நிலையில் மீண்டும் தமிழுக்கு வர சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ் அரவிந்துக்கு ‘உத்தம வில்லன்’ படத்தை இயக்குவதன் மூலம் தமிழிலும் இயக்குனராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பை உடனடியாக ஆரம்பித்து விடலாம் என முடிவு செய்து படத்தை நாளை மறுநாள் (மார்ச்-3) படத்தை பூஜை,விழா எதுவும் இன்றி ஆரம்பிக்க இருப்பதாக ரமேஷ் அரவிந்த் தெரிவித்துள்ளார். மேலும் இதன் படப்பிடிப்பை வரும் ஜூன் மாதத்திற்குள் முடித்துவிட்டால் அடுத்ததாக கமிட்டாகியுள்ள ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் நடிக்க வசதியாக இருக்கும் என்று கமல் திட்டமிட்டுதாக தெரிகிறது.

அதற்கிடையில் இந்தப்படத்தில் காஜல் அகர்வால், தமன்னா மற்றும் த்ரிஷா என மூன்று முன்னணி கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது அவர்கள் இல்லையென்றும் விஸ்வரூபம் தோழிகளான ஆண்ட்ரியாவும் பூஜாகுமாரும் ஒருவேளை நடித்தாலும் நடிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரேஞ்சில் உள்ள நடிகர் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் சொல்லும் இந்த படத்தில் கமலின் குருநாதர் கே பாலசந்தர் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம்

ஆரோகியமாக இருக்க எப்படி நடக்க வேண்டும்..!




நடைப்பயிற்சி இன்றைய காலக்கட்டத்தில் சிறந்த பயிற்சியாகும். இது இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புச் சத்தின் (Low-density lipoprotein – LDL) அளவைக் குறைத்து, நரம்புகளுக்குப் புத்துணர்வு தந்து, எலும்புகளையும் உறுதியாக்குகிறது. எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும், உடலுக்கு வலுவான கட்டமைப்பு அளித்து ஆரோக்கியமானதாக இருக்க விரும்புபவர்களுக்கும் நடைப் பயிற்சி ஓர் எளிய உடற்பயிற்சியாக உள்ளது.

வேகமாக நடத்தல் எனும் பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் இதர இதயநோய்களின் தாக்குதல்கள் இப்பயிற்சியை மேற்கொள்ளாதவர்களோடு ஒப்பிடுகையில் பாதிக்கும் மேலாக குறைவாக உள்ளது என்று சமீபத்திய ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.


நீங்கள் வேலைக்கு செல்லும் பயணத்தில் அதிகமாக நடக்க முனையுங்கள், ரயிலுக்கோ, பேருந்துக்கோ நடந்து செல்லுங்கள் , கடைகளுக்கு நடந்து செல்லுங்கள்., நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தூய்மையான காற்று வீசும் பகுதிகளில் நீண்ட நடை பயணம் சென்று நல்ல நேரத்தை செலவழித்து மகிழுங்கள்.

நடக்கும் முறைகள் :

1. நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கிப் பார்த்தவராக (தரையை பார்க்காமல்) இருபது அடி முன்னோக்கியவாறு நடங்கள்.

2. நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களைச் சாதாரணமாகவும் கைகளைத் தளர்வாகவும் வைத்திருங்கள்.

3. கைகளை முன்னும் பின்னும் ஒரே சீராக ஆட்டியவாறு (பக்கவாட்டில் ஆட்டாமல்), அதேவேளை நெஞ்சுப் பகுதியை விட உயர்த்திவிடாமல் நடந்து செல்லுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் கால்களும் பின் தொடரும்..

4. உங்கள் அடிவயிற்றை கெட்டியாகவும் உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன்புறம் சாய்த்தவாறு நடங்கள்.

5. ஒரு நேர்கோட்டில் நடப்பதை போல் நினைத்து கொண்டு, அடிகளை சற்று அதிகமாக எட்டி வைத்து நடப்பதைக் கட்டுப்படுத்துங்கள். வேகமாக செல்ல வேண்டுமானால், காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடங்கள்.

6. இயல்பாக சுவாசியுங்கள். நடக்கும் போது ஆழமாக ஒரே சீரான வேகத்தில் சுவாசித்து ஆக்ஸிஜனை அதிகமான அளவில் உட்செலுத்திக்கொள்ளுங்கள். நடக்கும் போது வேகமாகவும் அதே நேரத்தில் மூச்சிறைக்கும் அளவிற்கு இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.