Showing posts with label சினிமா செய்திகள். Show all posts
Showing posts with label சினிமா செய்திகள். Show all posts

Sunday, 16 March 2014

பீட்ரு விடுறதல இந்த பொண்ண யாரும் ஜெய்க்க முடியாது...! - நீங்களே கேளுங்க...



சினிமாவில் நடித்த சில படங்களிலேயே பெரிய அளவில் பேசப்பட்டவர் நஸ்ரியா. ஆனால் தனுசுடன் நடித்த நய்யாண்டி படத்தில் தொப்புள் சர்ச்சையை ஏற்படுத்தி அவரது இமேஜை டேமேஜ் பண்ணி விட்டனர்.

அதனால் அதன்பிறகு நஸ்ரியாவை வைத்து படம் பண்ண தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பயந்து ஒதுங்கினர்.

இருப்பினும் காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் மட்டும் தமிழ், மலையாளத்தில் தான் இயக்கியுள்ள வாய் மூடி பேசவும் படத்துக்கு தைரியமாக அவரை புக் பண்ணி படத்தையும் முடித்து விட்டார்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது, படப்பிடிப்பு தளத்தில் நஸ்ரியா இருந்தால் கலகலப்பாக இருக்கும். யாரையும் பாரபட்சம் பார்க்காமல் அனைவருடனும் ஜாலியாக பேசிக்கொண்டேயிருப்பார்.

அந்தவகையில் ஒரு நிமிடம் அவரை பேசாமல் இருக்க வைப்பது நடக்காத காரியம். ஆனால் அப்படிப்பட்டவரையே இந்த படத்தில் அதிகம் பேசாமல் நடிக்க வைத்திருக்கிறேன். அது எனக்கு பெரிய சவாலாக இருந்தது என்றார் டைரக்டர் பாலாஜி மோகன்.

அதையடுத்து நஸ்ரியா பேசும்போது, நான் எப்போதுமே பர்பாமென்சுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கு முதலிடம் கொடுப்பேன்.

 அந்தவகையில் இந்த படத்தில் என் நடிப்புக்கு தீனி போடும் நல்ல வேடம் கிடைத்தது.

அதனால் இதற்கு முன்பு தமிழில் நான் நடித்து வெளியான நேரம், ராஜாராணி படங்களில் இருந்து மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன்.

கூடவே எனது கோ-ஸ்டார் துல்கர்சல்மானுடன் ஏற்கனவே மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன்.

இது அவருடன் எனக்கு இரண்டாவது படம். அதனால் அவரை பேலன்ஸ் பண்ணி நடித்திருக்கிறேன் என்று கூறிய நஸ்ரியா, நான் ஸ்பாட்டில் எப்போதும் பேசிக்கொண்டேயிருந்ததாக சொன்னார்கள்.

அது நிஜம்தான். என்னால் வாயை மூடிக்கொண்டு இருக்கவே முடியாது. எப்போதும் கலகலப்பாக இருக்கவே ஆசைப்படுவேன்.

அதோடு என்னை சுற்றியிருப்பவர்கள் மூடியாக இருந்தாலும் அவர்களையும் என்னைப்போன்றே கலகலப்பாக மாற்றி விடுவேன் என்கிறார் நஸ்ரியா.

அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய ஸ்ருதிஹாசன்...!



சிவாஜிகணேசன்-கமல்ஹாசன் இருவரும் அப்பா மகனாக நடித்த படம் தேவர்மகன்.


இந்த படத்தில் சிவாஜியை போற்றும்படியாக அமைந்த போற்றி பாடடி பெண்ணே என்ற பாடலை சில குழந்தைகளுடன் இணைந்து இளையராஜாவின் இசையில் பாடியவர் ஸ்ருதிஹாசன்.


அதிலிருந்து தொடர்ந்து பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி வந்த ஸ்ருதி, கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராகவும் பிரவேசித்தார்.


அதையடுத்து நடிகை என்ற அரிதாரத்தை பூசிக்கொண்டபோதும், தொடர்ந்து பின்னணியும் பாடிவரும் ஸ்ருதி, தற்போது அஸ்ஸாமை சேர்ந்த ஜோய் பரூவா என்பவருடன் இணைந்து ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார்.


பல மொழிகளிலும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆல்பத்திலுள்ள பாடலை தற்போது தமிழ் மற்றும அஸ்ஸாம் மொழிகளில் பாடியுள்ளனர்.


இதில் தமிழில் பாடல் எழுத கமலிடம், ஸ்ருதி கேட்டுக்கொண்டபோது, உடனே எழுதிக்கொடுத்து விட்டாராம்.


ஆக, கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், ஜோய்பரூவா ஆகிய மூவர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள அந்த மியூசிக் ஆல்பம், உலக அளவில் ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

தல, தளபதியோடு மட்டுமே டீல் வைக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் ....!



'தீனா' படம் மூலம் ஏ.ஆர்.முருகதாஸுக்கு இயக்குநர் அடையாளம் கொடுத்தவர் அஜித். இப்போது அஜித்தின் அடுத்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் கைகோர்க்கப்போகிறாராம்.


முருகதாஸ் தற்போது விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிலும், 'துப்பாக்கி'யின் இந்தி ரீமேக்கான 'ஹாலிடே' படத்தை ரிலீஸ் செய்வதிலும் மும்மரமாக இருக்கிறார்.


இதே நேரத்தில் முருகதாஸ் தெலுங்குப் படம் இயக்கப்போவதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது அடுத்தபடம் அஜித்துடன் தான் என தெளிவாகக் கூறிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்.


படத்தின் பெயர் 'தல' எனக் கூறப்படுகிறது. அஜித்திற்கு 'தீனா' படத்தில் தல என்ற பட்டப்பெயர் வைத்தது ஏ.ஆர்.முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜித் அதனை முடித்துவிட்டு 'தல' படத்தில் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரைலரில் நம் வாய்யை மூட வைத்தார் இயக்குனர் பாலாஜி மோகன்...!



காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்திற்கு பிறகு துல்கர் சல்மான், நஸ்ரியா நடிப்பில் வாய்யை மூடி பேசவும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் பாலாஜி மோகன்.


குறும்படத்திலே தனது திறமையை காட்டியவர் பாலாஜி பின் வெள்ளித்திரையிலும் அவரது திறமை வெளிப்பட்டதை காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.


அவரது இரண்டாவது படமான வாயைமூடி பேசவும் திரைப்படத்தின் இசைவெளியீடு நேற்று சத்யம் சினிமாஸில் வைத்து வெளியிட்டுள்ளனர்.


மணிரத்னம், தெலுங்கு நடிகர் ராணா, செல்வராகவன் ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர் காதல் கலந்த காமெடி படமான வாய்யை மூடி பேசவும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை எதிர்நோக்கியுள்ளது.


இதில் ட்ரைலரிலேயே படத்தின் சுவாரசியத்தை கூட்டியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன், மேலும் இப்படம் மலையாளத்திலும் இதே முக்கிய கதாபாத்திரங்களை வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது.

பாலாவின் பேச்சால் கலங்கிய விஷால்...!



விஷால் நடிப்பிலும் தயாரிப்பிலும் இயக்குனர் திரு இயக்கியிருக்கும் ’நான் சிகப்பு மனிதன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(13.03.14) காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.


இயக்குனர்கள் பாலா, ஹரி, விஷ்ணுவர்தன், விஜய் மற்றும் விஷாலின் நெருங்கிய நண்பர்களான விஷ்ணு, விக்ராந்த், சாந்தனு, ஜித்தன் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்ட இவ்விழாவில், வழக்கமான வாழ்த்துகள் மட்டுமல்லாமல் சுவாரஸ்யமான பேச்சுக்களும் இடம்பெற்றன.


இயக்குனர் பாலா பேசியபோது “நான் சிகப்பு மனிதன்’ திரைப்படத்தின் ஹீரோ எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கிறார். எனக்கென்னவோ இது என்னை பழிவாங்க விஷாலும், திருவும் இணைந்து யோசித்த திட்டம் என்றே தோன்றுகிறது.


நான் தான் எப்பொழுதும் தூங்கிக்கொண்டே இருப்பேன். காலையில் ஷூட்டிங்கிற்கு ஸ்பாட்டிற்கே 11 மணிக்குத் தான் செல்வேன். இரவு 7.30 மணிக்கு ஷூட்டிங் என்றால் விடியற்காலைக்கு சற்று முன்பு தான் செல்வேன்” என்று கலகலப்பாக பேசினார்.


விஷால் பேசியபோது “ இயக்குனர் பாலாவுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அவன் - இவன் படத்தில் நடித்த சமயத்தில் நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். நான் இரண்டு ஹீரோக்களில் ஒருவனாக நடித்தேன் என்பதை விட 17 நாட்கள் ஒரு ஹீரோயினாக வாழ்ந்தேன் என்று சொல்லலாம்.


ஆரம்பத்தில் எதுவும் தெரியாவிட்டாலும் நாளாக நாளாக நான் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டேன். ஷூட்டிங்கின் போது கொஞ்சம் கிளாமராக தெரியவேண்டும் என்று கேமராமேன் சில கரெக்‌ஷன் செய்யச்சொன்னபோது,


நடிகைகள் இந்த சமயத்தில் எப்படி உணர்கிறார்கள் என்பதை மனமாற உணர்ந்தேன். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் நடிகைகளுக்கும் சரி, முன்பு நடித்த நடிகைகளுக்கும் சரி... அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன்” என்று கூறினார்.

லிப் லாக் காட்சிகளில் நடிப்பதில் எனக்கு ஒன்றும் கவலை இல்லை..!



குடும்பப்பாங்கான நடிகையாக அடையாளம் காணப்பட்ட தான் ‘நான் சிகப்பு மனிதன்' படத்தில் விஷாலுடன் லிப் லாக் காட்சியில் நடித்தது, கதைக்கு தேவைப்பட்டதால் தான் என விளக்கமளித்துள்ளார் லட்சுமிமேனன்.

கும்கி, குட்டி புலி, சுந்தரபாண்டியன்,பாண்டிய நாடு என லட்சுமிமேனன் நடிப்பில் வெளி வந்தது என்னவோ நான்கே படங்கள் தான். ஆனால், அதற்குள் ரசிகர்கள் அவரை முன்னணி நடிகைகளுள் ஒருவராக்கி விட்டனர்.

தற்போது நான் சிகப்பு மனிதன் படத்தில் மீண்டும் விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ளார் லட்சுமிமேனன். இப்படத்தில் விஷாலுடன் லிப்லாக் காட்சியில் நடித்தது பற்றியும், தனது அனுபவங்களை செய்தியாளார்களுடன் பகிர்ந்து கொண்டார் லட்சுமிமேனன். அப்போது அவர் கூறியதாவது :-

நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் உதட்டுடன் உதடு முத்தம் கொடுப்பது போன்று காட்சி படமாக்கப்பட்டது. படத்தின் இயக்குநர் திரு சார் இந்த காட்சி படத்தின் கதைக்கு மிகவும் தேவைபடுவதால் அவசியம் நடிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

நானும் தொழில்முறையில் தான் இதை ஏற்றுக்கொண்டேன்.அதனால் எந்த பிரச்சனையும் இல்லை நான் இது போன்ற காட்சிகளில் நடிப்பது பற்றி எனக்கு ஒன்றும் கவலை இல்லை.

சுந்தரபாண்டியன், குட்டிபுலி பாண்டிய நாடு போன்ற திரைபடங்கள் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. என் வாழ்வில் இது ஒரு முக்கிய பகுதியாகும்.

திரை உலகில் நேர்மறையான எதிர்மறையான கருத்துகள் வந்து கொண்டுதான் இருக்கும்.இது போன்ற கருத்துகளை நாம் எடுத்துகொள்ள கூடாது எல்லாம் பாசிடிவ்வாக எடுத்துகொண்டால் நல்லது.

படபிடிப்பில் சில வேடிக்கையான விஷயங்கள் கூட நடந்து இருக்கிறது.கும்பகோணம் படபிடிப்பில் இருந்தபோது தமிழ் ரசிகர்கள் என்னை பார்த்து ஆரவாரம் செயதனர் சிலர் என்னிடம் வந்து கைகுலுக்கி தங்களது மகிச்சியை தெரிவித்தனர்.

சென்னையில் நான் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த போது பொறியாளர் ஒருவர் வந்து நான் தீவிர ரசிகன் என்னுடைய வீட்டில் உங்களது போட்டவை தான் மாற்றி வைத்துள்ளேன் என்று கூறினார் என்னுடைய செல்போனிலில் கூட உங்களது புகைபடத்தைத் தான் வைத்து உள்ளேன் என்று கூறினார்.

இதை பார்த்த நான் வியந்துபோனேன்.எனக்கு இவ்வளவு ரசிகர்களா என பார்த்து மெய்சிலிர்த்து போனேன்.

நான் தமிழ் படங்களில் நடிப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் இது ஒரு வெற்றியாக கருதுகிறேன் இது போன்ற ரசிகர்கள் எனக்கு கிடைத்துள்ளதால் நான் தற்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்' என இவ்வாறு லட்சுமிமேனன் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டாருக்கு நான் வில்லனா..? யாருமே இதுவரை கூப்பிடளங்க..!



ரஜினிக்கு வில்லனாக நடிக்க அழைப்பு வரவில்லை என்றார் சுதீப். ‘நான் ஈ‘ படத்தில் நடித்தவர் சுதீப். தற்போது கன்னட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக சுதீப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

 இதுகுறித்து சுதீப் கூறியதாவது: டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் புதிய ஸ்கிரிப்டுடன் என்னிடம் கால்ஷீட் கேட்டு அணுகியது உண்மைதான்.

 நானும் நடிக்க ஒப்புக்கொண்டேன். இதற்கான ஏற்பாடுகள் தொடங்குவதற்கு முன்பே ரஜினியை வைத்து படம் இயக்க ரவிகுமார் முடிவு செய்துள்ளார்.

 ரஜினியின் உடல்நலன் கருதி நான் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு முன்பாகவே ரஜினி படத்தை தொடங்க உள்ளதாக கூறினார்.

 ஓ.கே சொல்லிவிட்டேன். இப்படத்தில் நான் ரஜினியின் வில்லனாக நடிக்க உள்ளதாக என்னுடைய பெயர் இணைய தளங்களில் வெளியான வண்ணம் உள்ளது.

ஆனால் ரஜினி படத்தில் நடிக்க வேண்டும் என்று இதுவரை யாரும் என்னிடம் கேட்கவில்லை.

ரவிகுமாருடன் எனது பட ஷூட்டிங் மே அல்லது ஜூனில் தொடங்கும். முன்னதாக ரஜினி படத்தை தொடங்குகிறார் ரவிகுமார்.

 இவ்வாறு சுதீப் கூறினார் 

தனுஷை பழிக்கு பழி வாங்கிய ஹீரோயின்..!



காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகன் தற்போது வாயை மூடி பேசவும் என்ற படத்தை எடுத்துமுடித்துவிட்டார்.

அடுத்ததாக ஒரு ஜாலியான காதல் கதை ஒன்றை தயார் செய்து தனுஷிடம் சென்று கதையை சொல்லி கால்ஷிட் கேட்டுள்ளார்.

கதையை கேட்டதும் மிகவும் ஆர்வமான தனுஷ், இதுமாதிரியான கதையைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். திரைக்கதையை தயார் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் மிகவும் குஷியான பாலாஜி மோகன் தற்போது திரைக்கதை அமைக்கும் பணியில் மும்முரமாக இருக்கின்றார்.

இந்நிலையில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை அணுகியிருக்கிறார் பாலாஜி மோகன்.

கதையையும், ஹீரோவையும் கேட்ட காஜல் அகர்வால் தன்னுடைய கேரக்டர் நன்றாக இருக்கிறது. ஆனால் தனுஷுக்கு ஜோடியாக நான் நடித்தால் கெமிஸ்ட்ரி செட் ஆகாது.

தனுஷையும் என்னையும் அருகில் வைத்து பார்த்தால் தனுஷ் என் தம்பி மாதிரி இருபார். அதனால் ஹீரோவை மாற்றிவிடுங்கள். அப்படி மாற்றினால் கண்டிபாக இந்த படத்தில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் பொல்லாதவன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தது காஜல் அகர்வால்தான் என்றும் திடீரென அப்போது காஜலை அந்த படத்தில் இருந்து தூக்கிவிட்டதற்கு தனுஷ்தான் காரணம் என்று சொல்லப்பட்டது.

அதற்கு பழிவாங்கவே இவ்வாறு சொன்னாரா காஜல் அகர்வால்..?

இதனால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி மோகன் செய்வதறியாது திகைத்து உள்ளார்.

 தனுஷ் அல்லது காஜல் இவர்களில் யாரையாவது ஒருவரை மட்டும் ஏற்றுக்கொண்டு இன்னொருவரை படத்தில் இருந்து நீக்கவேண்டும்.

 என்ன செய்யப்போகிறார் பாலாஜி மோகன் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நம்ம கவுண்டரின் கலகலப்பான பேட்டி - உங்களுக்காக...!



பேட்டி’ என்றாலே விலகிச்செல்லும் அல்லது விரட்டிவிடும் நம்ம கவுண்டரேதான். ”ஒரு ஃப்ரெண்டா வா… ரசிகனா வா… எவ்வளவு நேரம் வேணும்னாலும் எது வேணும்னாலும் பேசலாம். ஆனா, பத்திரிகைக்காரனா வராத!” என்று அன்பாக அதட்டும் அதே கவுண்டமணி. ‘இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கிறது’ முதல் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ வரை சாகாவரம் பெற்ற பன்ச்களின் நாயகன் இதோ என் முன் அமர்ந்திருக்கிறார்.

பல மாதத் துரத்தல், வற்புறுத்தல், ஏகப்பட்ட உரையாடல்களுக்குப் பிறகு நிகழ்ந்த பேட்டி இது. அரியலூர் அருகே அங்கராயநல்லூர் கிராமத்தின் ’49ஓ’ படத்தின் படப்பிடிப்பு இடைவேளைகளில் கவுண்டமணியிடம் பேசியது அப்படியே இங்கே…

”தம்பி… பேட்டினு உக்காந்துட்டேன். ஆனா, நீ பாட்டுக்குக் கேள்வி கேட்டுட்டே இருந்தா எனக்குப் பிடிக்காது. நானா மனசுல தோணுறதைச் சொல்றேன். நீ குறிச்சுக்க. அதுல குறுக்குக் கேள்விலாம் கேட்டா, நான் எனி செகண்டு எந்திரிச்சுப் போயிடுவேன் ஓ.கே-வா!” – அவரின் அதே அக்மார்க் அதட்டல்!

”ரொம்ப வருஷம் கழிச்சு நடிக்கிறீங்க. இந்தக் கதையை எப்படி…” (கேள்வியை முடிக்கவிடாமல்)

”பார்த்தியா… பத்திரிகைகாரன் வேலையைக் காட்டுற. ரொம்ப வருஷம் கழிச்சுலாம் இல்லைப்பா. ரெண்டு, மூணு வருஷம் இருக்கும். அவ்ளோதான்! இது ஒரு சின்ன கேப். இதுக்கே, ‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு’னு நீட்டி முழக்கி பில்ட்-அப் குடுத்துருவீங்களே! ஏதோ 14 வருஷம் ராமர் வனவாசம் போன மாதிரி ஃபீல் பண்ணாதீங்க.

2010-ல ‘ஜக்குபாய்’, ‘பொள்ளாச்சி மாப்ள’னு நான் நடிச்ச படங்கள் ரிலீஸ் ஆச்சு. இப்போ ’49ஓ’ல நடிக்கிறேன். ஒரு நடிகன்னு இருந்தா நடுவுல திடீர்னு கொஞ்சம் கேப் விடுவான். பிறகு, சரசரனு நடிப்பான். அவ்வளவுதான். இதை ஏதோ உலக கின்னஸ் சாதனை கணக்கா விளக்கம் கேட்டுக்கிட்டு இருக்கிறதா?

அப்புறம் இந்தப் படத்துல நடிக்கணும்னு ஏன் முடிவெடுத்தேன்னு கேக்க வந்தீங்கள்ல! இந்தப் பட டைரக்டர் தம்பி ஆரோக்கியதாஸ் விடாமத் துரத்தித் துரத்திக் கதை சொன்னார். ‘உங்களை மனசுல வெச்சுதான் எழுதினேன்’னு சொல்லி ஒவ்வொரு சீனையும் விளக்கினார். பன்ச், காமெடி, டயலாக் டெலிவரினு யோசிச்சா, எனக்கும் அப்படித்தான் தோணுச்சு. அதுவும்போக படத்தோட சப்ஜெக்ட் விவசாயம். இப்பவும் நமக்குள்ள ஒரு விவசாயி ஒளிஞ்சிட்டு இருக்கான். அதான் உடனே நடிக்கச் சம்மதிச்சுட்டேன்!”

”ரீ-என்ட்ரில காமெடி ஸ்கோப் உள்ள படம் நடிப்பீங்கனு நினைச்சா, விவசாயம்னு எதிர்பார்க்காத கோல் அடிக்கிறீங்களே?”

”நல்லா இருந்துச்சேனு போன தீபாவளிக்கு பண்ண அதிரசத்தை இன்னைக்குத் திங்க முடியுமா? அப்போ பண்ணது நல்லா இருந்தா, அதை ரசிச்சுக்கலாம். அதே மாதிரி திரும்ப நடிக்கணும்னு என்ன கட்டாயம்?

’49ஓ’ படத்துல விவசாயம்தான் கதை. கதிர் அறுக்கலாம்னு நினைச்சா, மழை பெஞ்சி கெடுத்திருக்கும். நடவு நடலாம்னு நினைச்சா, வெயில் காய்ஞ்சு கெடுத்திருக்கும். வட்டிக்கு மேல வட்டி வாங்கிப் போட்ட காசை கடைசிவரைக்கும் எடுக்க முடியாமப்போனாலும், அவன் விவசாயத்தை விட மாட்டேங்கிறான். ஏன்? என்னைக்காவது நல்லது நடக்கும்னு காத்திருக்கான். ஆனா, நல்லது நடக்கிற சூழ்நிலையா இங்கே இருக்கு?” என்று நிறுத்திவிட்டு இளநீர் ஒன்றை வாங்கி அண்ணாந்து குடிக்கிறார்.

சட்டென்று பாதியில் நிறுத்திவிட்டு, ”ஏய்ய்… இரப்பா! நான் சொன்னதை வெச்சு அரசாங்கத்தைக் குத்தம் சொல்ற படம்னு வம்பு கொளுத்திப்போட்டுராதீங்க. இயற்கை விவசாயத் துக்கு ஆதரவா நிறைய விஷயம் பேசும் படம். மத்தபடி அரசையோ, அரசியல்வாதியையோ குத்தம் சொல்றது கதையோட நோக்கம் கிடையாது. இயற்கை விவசாயி நம்மாழ்வாருக்குப் படத்துல மரியாதை பண்ணியிருக்கோம்!”

”நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் ’49ஓ’-னு தலைப்பு வெச்சு, ‘யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை’னு சொல்றீங்களா?”

”பார்த்தியா… மறுபடி மறுபடி பத்திரிகைக்காரன் வேலையைக் காட்டுற! இதை ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்கணும்? இந்தக் கேள்வியில இருந்து தப்பிக்கணுமேனு இதைச் சொல்லலை. விவசாயம் பாதிக்கப்படுறது மட்டும்தான் படத்தோட மையம். அதுல நிறைய காமெடியும் கொஞ்சம் சென்ட்டிமென்ட்டும் சேர்த்திருக்கோம். அவ்வளவுதான். கொஞ்சம் வெயிட் பண்ணு… நான் ஒரு ஷாட் நடிச்சுட்டு வர்றேன்” என்று எழுந்து செல்கிறார்.

தான் தேர்தலில் நிற்கவைக்கும் சுயேட்சை வேட்பாளருக்காக சங்கு சின்னத்தில் கவுண்டமணி ஆதரவு திரட்டுவது போன்ற காட்சி. அப்போது குவியும் பத்திரிகையாளர்களிடம் சரமாரியாகப் பேட்டி அளிக்கிறார் கவுண்டர். அந்தக் காட்சி நான்கைந்து டேக்குகள் கடக்க, வேடிக்கை பார்க்கும் கூட்டத்தைப் பார்த்து, ”பார்த்தீங்களா… இப்படித்தான் ஒரே சீனை நாள் பூரா எடுத்துட்டு இருப்போம். இப்பவே பார்த்துப் போரடிச்சுட்டா, அப்புறம் படம் பார்க்க வர மாட்டீங்க. கிளம்புங்க… கிளம்புங்க” என்று கவுண்டமணி செல்லமாக அதட்ட, ‘அட… சினிமால இதெல்லாம் சாதாரணமப்பா’ என்று ‘கவுன்டர்’ கொடுக்கிறது கூட்டம்.

”ஏ ஆத்தி… எமகாதப் பயலுகளா இருக்கானுங்கப்பு!” என்று சிரித்துக்கொள்கிறார் கவுண்டமணி.

”நீங்க ஹீரோ மாதிரி படம் முழுக்க வருவீங்களா?”

”மாதிரி என்ன மாதிரி… ஹீரோவே நான்தான்! ஆனா, தொடர்ந்து இப்படியே நடிப்பேன்னு சொல்ல முடியாது. இந்தப் படத்தோட கதைக்கு நான் ஹீரோ. அவ்வளவுதான்!”

”ஒருத்தருக்குப் பட்டப் பேர் வெச்சுக் கலாய்ச்சு காமெடி பண்ணி, கிண்டல் அடிக்கிற உங்க ஸ்டைலைத்தான் இப்போ எல்லாருமே காப்பி அடிக்கிறாங்க!”

”பண்ணிட்டுப் போகட்டுமே! ‘நான் மட்டும்தான் மத்தவங்களைக் கிண்டல் அடிப்பேன்’னு உரிமை வாங்கி வெச்சிருக்கேனா என்ன? எல்லாரும் எல்லாரையும் கலாய்க்கட்டும்!”

” ‘ஜூனியர் கவுண்டர்’னு பேர் வாங்கிட்டார் சந்தானம். ‘கவுண்டரைச் சந்திப்பது உண்டு’னு அவர் பேட்டிகள்ல சொல்லிட்டு வர்றார்!”

”உண்டுனு சொன்னார்னா உண்டுனு போட்டுக்கங்க. அவர் என்ன பொய்யா சொல்லப்போறார்?”

”வடிவேலு, சந்தானத்தைச் சந்திச்சா என்ன பேசிப்பீங்க?”

”எல்லா நடிகர்களுமே நமக்கு ஃப்ரெண்டுதான். அதனால அப்பப்ப எப்பயாச்சும் போன்ல பேசிப்போம். அதுல விசேஷமா சொல்ல என்ன இருக்கு?”

”எண்பதுகளில் மணிவண்ணன், சத்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன்னு ஒரு டீம்ல வேலை பார்த்ததுக்கும், இப்போ இளைய தலைமுறை இயக்குநர்களோட வேலை பார்க்கிறதுக்கும் என்ன வித்தியாசம்?”

”எல்லாமே சினிமாதானே. எல்லா படத்தையும் தியேட்டர்லதானே போடுறாங்க. அப்புறம் என்ன வித்தியாசம் இருந்துடப்போகுது. நான் எப்பவும் வசனங்களை ஸ்பாட்லகூட இம்ப்ரூவ் பண்ணுவேன். பேப்பர்ல இருக்கிறதைவிட சமயங்கள்ல ஸ்பாட்ல பளிச்னு ஏதாவது தோணும். அதைச் சேர்த்துக்குவோம். அந்தச் சுதந்திரம் இப்பவும் இருக்கு!”

”சமீபத்துல பார்த்ததுல என்ன படம்லாம் பிடிச்சது?”

”உண்மையைச் சொல்றேனே… தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம்னு எந்த இந்திய மொழிப் படங்களையும் பார்க்கிறதே இல்லை. படம் பார்க்கணும்னு நினைச்சா ஹாலிவுட் படங்கள்தான் பார்ப்பேன்!”

”தமிழ் படங்களைக்கூட பார்க்காம இருக்க என்ன காரணம்?”

”நான் ஏன் பார்க்கணும்னு நீங்க காரணம் சொல்லுங்க. நான் ஏன் பார்க்கிறதில்லைனு அப்புறம் பதில் சொல்றேன்!”

”நீங்க நடிச்ச படங்களைக்கூட பார்க்க மாட்டீங்களா?”

”பார்க்க மாட்டேன்! நாம பேட்டி கொடுத்தாலும் கொடுக்காட்டியும் நம்ம படங்கள் டி.வி-ல ஓடுது. காமெடி சேனல்லயும் அதுதான் ஓடுது. அதைத் தாண்டி நான் பேட்டில என்னத்தைச் சொல்லிடப்போறேன். ஒரு நடிகர் சும்மா இருக்கார்னா சும்மா இருக்கார்னு எழுதிடுவீங்க. நடிக்கிறார்னா நடிக்கிறார்னு எழுதிடுவீங்க. இப்படி நீங்களே எல்லாத்தையும் எழுதின பிறகு, தனியா நான் எதுக்குப் பேசணும்? இப்பவே ரொம்ப பேசிட்டேன்னு நினைக்கிறேன். போதும்!”

சொகுசு பங்களாவில் ஜோவின் அக்கா வி.ஐ.பிக்களுடன் விபரீத ஆசையில்...!



பாட்ஷா, காதலன், சிட்டிசன், வில்லாதி வில்லன், போன்ற பல படங்களில் நடித்த நடிகை நக்மா தீவிர அரசியலில் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.


காங்கிரஸ் கட்சியின் மூலம் தனது சேவையை செய்து வரும் நக்மா, வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிற்க வாய்ப்பு கேட்டிருந்தார். நேற்று வெளியிட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பட்டியலில் நக்மாவுக்கு மீரட் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.


நக்மா காங்கிரஸ் தலைமையிடம் ராஞ்சி தொகுதியைத்தான் கேட்டிருந்தார். ராஞ்சி தொகுதியில் தொடர்ச்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளபடியால் மிக எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று அந்த தொகுதியை குறிவைத்திருந்தார்.


ஆனால் காங்கிரஸ் தலைமை அவருக்கு மீரட் தொகுதியை அளித்துள்ளது.


மீரட் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு குறைவாக இருந்த போதிலும் நக்மா தனது அதிரடி பிரச்சாரத்தின் மூலம் தொகுதியை கைப்பற்றிவிடுவார் என்று உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள்.



 நக்மா பிரச்சார வேலையை இப்பொழுதே ஆரம்பித்துவிட்டாரம். மீரட் நகரில் ஒரு சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்துள்ளாராம்.


 அந்த பங்களாவிற்கு நகரத்தில் உள்ள முக்கிய வி.ஐ.பிக்களை அழைத்து தேர்தலில் வெற்றி பெறும் வியூகங்கள் குறித்து டிஸ்கஸ் செய்கிறாராம்.


 அவருடன் டிஸ்கஸ் செய்ய தினந்தோறும் முக்கிய வி.ஐ.பிக்கள் அவருடைய பங்களாவை நோக்கி படையெடுத்தவண்ணம் இருக்கின்றார்கள். இந்த டிஸ்கஷன் எந்த அளவுக்கு பயன் கொடுக்கும் என்பதை தேர்தல் முடிவின்போதுதான் தெரியும்.

அஞ்சலியின் திருமணம் - திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின...!



சித்தி பாரதிதேவியுடன் பிரச்சனை ஏற்பட்டு ஆந்திராவில் செட்டிலான அஞ்சலி இப்போது எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லையாம். இதனால் அவர் எங்கே போனார் என்பது மர்மமாகவே உள்ளது.

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த அஞ்சலி திடீரென்று ஒருநாள் தனது சித்தி பாரதிதேவி கொடுமைப்படுத்துவதாக பரபரப்பு புகார் கூறினார். உடனே தனது சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு எஸ்கேப் ஆனார்.

சில நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் பின்னர் ஹைதராபாத் போலீசில் ஆஜரானார். அதன் பிறகு ஹைதராபாத்திலேயே தங்கி இருந்தார். முன்பு போல் பட வாய்ப்புகளும் கிடைக்காததால் நடிக்காமல் இருந்தார். அவர் கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு மசாலா என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.

அவர் உடல் எடை கூடிப்போய் விட்டதால் தொடர்ந்து நடிக்க விருப்பம் இல்லாமல் இருந்ததாகவும் சொன்னார்கள். மேலும் தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவின.

இந்த நிலையில் சமீபகாலமாக அஞ்சலியை ஹைதராபாத்திலும் காணவில்லை. மீண்டும் அவர் மாயமாகி விட்டதாக செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளன.

அவருடைய இரண்டு மொபைல் போன்களுக்கு தொடர்பு கொண்டால் எப்போதும் பார்த்தாலும் அது சுவிட்ஸ்-ஆப் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. இதனால் தெலுங்கு திரையுலகினர் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் திணறி வருகிறார்கள்.

ஆனால் அஞ்சலிக்கு ஹைதராபாத்தில் இருக்க பிடிக்கவில்லை என்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெரிய தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரம் மேற்படி தகவல்கள் எதுவுமே நம்பும்படியான தகவல்களாக இல்லாததால் அஞ்சலியை தேடித்திரியும் அவரது நெருங்கிய நண்பர்கள் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்

அஇஅதிமுக'வின் ராஜதந்திரம் இந்த முறை எடுபடவில்லை..- பாவம்...!

ஆயிரத்தில் ஒருவன் 'பிளாப்'... அதிர வைத்த மதுரை....3 பேரே பார்க்க வந்த பரிதாபம்..!

மதுரை: பெரும் எதிர்பார்ப்புடன் மறு வெளியீடு செய்யப்பட்ட எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மதுரையில் தோல்வி அடைந்துள்ளதாம். படத்தைத் திரையிட்ட தியேட்டர்களில் தற்போது அவற்றை எடுத்து வருகின்றனராம்.

தேர்தல் ஆணையத்தின் கடும் கெடுபிடிகளுக்கிடையே நேற்று முன்தினம் வெளியானது டிஜிட்டலில் புதுப்பிக்கப் பட்ட ‘ஆயிரத்தில் ஒருவன்' படம். இப்படத்தை ஒருமுறைப் பார்ப்பதென்பது பத்து பொதுக்கூட்டங்களைப் பார்ப்பதற்குச் சமம் என அதிமுக தொண்டர்கள் தெரிவித்து வந்தனர்.

வார இறுதியில் கூட்டம் குவியும் என எதிர்பார்த்த தியேட்டர் ஓனர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளதாம். காரணம் படம் ரிலீசான பெரும்பான்மையான தியேட்டர்கள் ஈயோடிக் கிடக்கின்றனவாம்.

1965ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம்தான் ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படத்தை தற்போது டிஜிட்டல் முறையில் புதுப்பித்து வெ்ளியிட்டுள்ளனர்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த இப்படம் மதுரையில் தோல்வி அடைந்துள்ளது. இது திரையுலகினருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.

காரணம், பாக்ஸ் ஆபீஸில் ஒரு படம் ஹிட்டாகுமா இல்லையா என்பதை நிர்ணயம் செய்யும் முக்கிய மார்க்கெட் தளமான மதுரையிலேயே, அதுவும் எம்.ஜிஆருக்கும், அதிமுகவுக்கும் பெரும் திரளான ரசிகர் பட்டாளம் உள்ள ஊரில் இப்படம் தோல்வி அடைந்திருப்பதால் தியேட்டர்காரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.

மதுரையில் இந்தப் படம் ஐந்து தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம் வந்ததோ விரல் விட்டு எண்ணும் அளவில்தானாம்.

இதில் ஒரு தியேட்டரில் படம் மறு வெளியீடு செய்யப்பட்ட அடுத்த நாளே ஒரு காட்சிக்கு போதிய அளவில் ஆட்கள் வராததால் அந்த ஷோவையே ரத்து செய்யும் நிலை ஏற்பட்டதாம்.

இதுகுறித்து தமிழ் ஜெயா தியேட்டரின் மேலாளர் பாண்டியன் கூறுகையில், நூன் ஷோவுக்கு வெறும் 3 பேர் வந்திருந்தனர். சரி, தொடர்ந்து வருவார்கள் என்ற நம்பிக்கையில் படத்தைப் போட்டோம். ஆனால் யாருமே வரவில்லை. இதனால் அரை மணிநேரத்திலேயே படத்தை நிறுத்தி விட்டு ஷோவைக் கேன்சல் செய்து 3 பேரிடமும் பணத்தைத் திரும்பக் கொடுத்து அனுப்பி விட்டோம்.

பழம்பெரும் இயக்குநர் பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் உருவான படம்தான் ஆயிரத்தில் ஒருவன். இதில் சர்வாதிகார முதலாளியை எதிர்த்துப் போராடி கொத்தடிமைகளை மீட்கும் கதாபாத்திரத்தில் எம்.ஜிஆர். நடித்திருப்பார். நம்பியார்தான் வில்லன்.

இந்தப் படம்தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படமும் ஆகும். எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் இது. மேலும் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஜோடி முதல் படத்திலேயே ஹிட் ஆனதும் இதில்தான்.

தமிழகம் முழுவதும் இந்தப் படம் 120 தியேட்டர்களில் போடப்பட்டுள்ளது. ஆனால் அதில் எத்தனை தியேட்டர்களில் தற்போது இது ஓடி வருகிறது என்பது தெரியவில்லை.

இந்தப் படத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்ததும் நினைவிருக்கலாம். எனவே அதிமுகவினர் பெருமளவில் படத்தைப் பார்க்க வருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் மதுரைக்காரர்கள் கைவிட்டு விட்டது திரையரங்குகளை அதிர வைத்துள்ளது.

மற்ற ஊர்களின் நிலவரம் தெரியவில்லை. ஆனால் நிலைமை சரியில்லை என்றே செய்திகள் வருகின்றன.

உத்தமமான கமல் இவர் தாங்க...!



'உத்தம வில்லன்' படத்தில் கமல் டபுள் ரோலில் நடிக்கிறார்.

உத்தமன் என்ற எட்டாம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் கேரக்டரிலும்,

மனோரஞ்சன் என்ற 21ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரம் கேரக்டரிலும் நடிக்கிறார்.


மனோரஞ்சனின் குருவாக இயக்குநர் கே.பாலசந்தர் நடிக்கிறார்.

மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசி நடிக்கிறார்.


எட்டாம் நூற்றாண்டில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமார் நடிக்கிறார்.

 21ம் நூற்றாண்டில் சினிமா ஸ்டார் கமலின் காதலியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.


சர்வாதிகாரி கேரக்டரில் நாசரும், ஜேகப் ஜக்காரியா கேரக்டரில் ஜெயராமும், ஜேயராம் வளர்ப்பு மகளாக பார்வதி மேனனும் நடிக்கிறார்கள்.


எம்.எஸ்.பாஸ்கர் சொக்கு செட்டியார் என்ற முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

Saturday, 15 March 2014

ஹன்சிகாவால் வாலு பட ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு...!



வாலு படத்தினை எந்த நேரத்தில் ஆரம்பித்தார்களோ தெரியவில்லை. தொடர்ந்து பிரச்னை மேல் பிரச்னைகளாக வந்து கொண்டிருக்கிறது.


 எல்லா பிரச்னைகளையும் சமாளித்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புக்களில் ஹன்சிகா ஒரு பிரச்னையைக் கிளப்பியுள்ளதாகப் பேசப்ப்படுகிறது.


சிம்புவும் ஹன்சிகாவும் வாலு படத்தின் மூலமே இணைந்து நடிக்கும் வாய்ப்பினையும், அதன் மூலம் சினிமாவில் மட்டுமல்லாது நிஜத்திலும்
காதலர்களாக மாறினர்.


எவ்வளவு வேகத்தில் காதல் வந்ததோ அதை விட வேகமாக காதல் முறிவும் ஏற்பட்டது.

இந்நிலையில் வாலு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு, இறுதியாக ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருக்கிறது.


 இப்பாடல் காட்சியினை வெளிநாட்டில் படமாக்க இயக்குனர் விஜய் சந்தர் முடிவெடுத்து, அதனை ஹன்சிகாவிடம் கூற, ஹன்சிகா தான் வெளிநாட்டுப் படப்பிடிப்பிற்கெல்லாம் வரமாட்டேன் என்று கூறுகிறாராம்.


 அப்பாடல் காட்சியினை உள்ளூரிலேயே படம்பிடிக்குமாறும் வற்புறுத்துகிறாராம்.

வெளிநாடு வந்தால் எங்கே சிம்பு மீண்டும் தன்னை வற்புறுத்துவாரோ என்ற பயம்தான் ஹன்சிகாவின் இந்த முடிவிற்குக் காரணம் என்று கிசுகிசுக்கள் பரவிவருகின்றன.

அம்மாவான முத்தழகி - அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகம் - கதறும் நடிகை..!




‘பருத்தி வீரன்’ மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற பிரியாமணியை சமீபகாலமாக தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை.

கன்னடத்தில் ஓரிரு படங்களில் நடிக்கிறார்.

மலையாள படமொன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா, அமலாபால், சமந்தா, காஜல் அகர்வால் போன்றோர் தமிழ் பட உலகை நிலையாக ஆக்கிரமித்து கொண்டதால் பிரியாமணிக்கு படங்கள் குறைந்து விட்டது.

இந்த நிலையில் பிரியாமணி ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், கர்ப்பமாக இருப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:–

என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன.

மனம் போன போக்கில் எழுதுகிறார்கள். கர்ப்பமாக இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது. இவற்றையெல்லாம் நான் பொருட்படுத்துவது இல்லை.

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக நடிக்கவில்லை.

நிறைய வாய்ப்புகள் வந்தன.

ஆனால் கதைகள் பிடிக்காததால் நடிக்கவில்லை.

 நல்ல கேரக்டர்கள் அமைந்தால் நடிப்பேன்.

எதிர்காலத்தில் படங்கள் டைரக்டு செய்ய ஆர்வம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முக்கிய சாலைகளில் ஸ்ருதிஹாசனின் ஆபாசப்படம் - படுஜோர்...!



அல்லு அர்ஜுன், ஸ்ருதிஹாசன் நடித்த Race Gurram” என்ற படத்தின் ஹாட் போஸ்டர் ஒன்று, இன்று ஆந்திர தலைநகர் ஐதராபாத் முழுவதிலும் சுவரில் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போஸ்டரை ஐதராபாத்தின் பல சாலைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பார்த்துக்கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Race Gurram” படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நடப்பதாக இருந்தது.

ஆனால் திடீரென நாளை இந்த விழா நடக்கும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தகவல் வந்துள்ளது.

இந்த படத்தில் அல்லு அர்ஜூன், ஸ்ருதிஹாசனோடு சலோனி என்ற நடிகை முக்கிய கவர்ச்சி பாத்திரத்தில் நடித்துள்ளார்.

சுரேந்திர ரெட்டி இயக்கியுள்ள இந்த படத்தை Nallamalupu Sreenivas என்பவர் தனது லட்சுமி நரசிம்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இதுபோன்ற மிகவும் கவர்ச்சியான போஸ்டர்களை போக்குவரத்து மிகுந்த சாலையோரத்தில் ஒட்டி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், பெண்களை ஆபாசமாக காட்டியிருப்பதாகவும், இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது ஐதராபாத்தில் உள்ள மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது

Friday, 14 March 2014

இது தேவை வற்புறுத்திய இயக்குனரால்,மகிழ்ச்சியில் ஹீரோ,மனம் நொந்த நடிகை...!



இலியானாவுக்கு பாலிவுட் ஹீரோ அழுத்தமான லிப் டு லிப் முத்தம் கொடுத்தார். ‘நண்பன்‘, ‘கேடி‘ உள்ளிட்ட தமிழ் மற்றும் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துவந்தவர் இலியானா.

 கடந்த 2012ம் ஆண்டு ‘பர்பி‘ என்ற படம் மூலம் பாலிவுட்டுக்கு சென்றார். படம் வெற்றி பெற்றாலும் வாய்ப்புகள் குறைவாகவே வந்தன. ‘ஹேப்பி என்டிங்‘, ‘மெயின் தேரா ஹீரோ‘ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

மெயின் தேரா... படத்தில் வருண் தவானுடன் நடித்து வரும் இலியானாவுக்கு அவருடன் லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தென்னிந்திய படங்களிலேயே லிப் டு லிப் காட்சிகளுக்கு தயாராகி இருந்த இலியானா சாக்குபோக்கு சொல்லி தட்டிக்கழிக்க பார்த்தார்.


ஆனால் இயக்குனர் டேவிட் தவான் லேசில் விடவில்லை. நிச்சயமாக இது கதைக்கு தேவை என்று வற்புறுத்தியதை அடுத்து ஒப்புக்கொண்டார். ஹீரோவும் சான்ஸை நழுவவிடாமல் பயன்படுத்திக்கொண்டார். இலியானாவுக்கு லிப் டு லிப் அடித்து அசத்தினார்.

இதுதான் வருணுக்கு கிடைத்த முதல் முத்தக்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இக்காட்சி படமானபோது குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களே ஷூட்டிங் தளத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டனர்.

வா ராசா...உன் சேவை நாட்டுக்கு தேவை...!



பாராளுமன்ற தேர்தல் பற்றி நடிகர் மன்சூர் அலிகான், நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘இந்த பாராளுமன்ற தேர்தலில், மக்களுக்கு அதிக ஆர்வம் இல்லை. எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.கோடி கோடியாக பணம் உள்ளவர்கள் மட்டுமே அரசியல் நடத்த முடியும் என்கிற நிலை உள்ளது.

சொத்துக்களை காப்பாற்றிக் கொள்வதற்காக சிலர் அரசியலுக்கு வருகிறார்கள். இந்த மண்ணின் மைந்தர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக யாரும் வரவில்லை. தமிழ்நாட்டில் இருந்து 40 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி போவார்கள்.

அவர்களில், 5 பேர் மந்திரிகளாகி விடுவார்கள். அந்த ஐந்து பேரும் இதற்கு முன்னால் மந்திரிகளாக இருந்தவர்கள் என்ன செய்தார்களோ, அதையே தான் இவர்களும் செய்வார்கள். தமிழர்களின் நலனுக்காக யாரும் உழைக்கப் போவதில்லை. இந்த தேர்தலில், சில நடிகர்நடிகைகள் தேர்தல் பிரசாரத்துக்கு போகிறார்கள்.

சில நடிகர்நடிகைகள் அரசியல் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள். எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. வரவேற்கிறேன். நக்மா, நமீதா, சோனா மூன்று பேருக்கும் வாழ்த்துகள். நடிகர்கள் சிலர் அரசியலுக்கு வருகிறார்கள்.

முதலில் மிகுந்த கட்டுப்பாட்டோடு கட்சி ஆரம்பிக்கிறார்கள். போகப்போக அந்த கட்சிக்குள்ளும் குடும்ப அரசியல் நுழைந்து விடுகிறது. அப்புறம் ஊழல் என்கிறார்கள். ஊழலை ஒழிப்போம் என்கிறார்கள்.

அந்த ஊழல் எங்கே இருக்கிறது? என்று தெரியவில்லை. என் மீது நம்பிக்கை வைத்து சிறந்த இயக்கத்தில் இருந்து அழைப்பு வந்தால், நான் இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.’’

இவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் கூறினார்.

ஸ்டைல் மட்டுமல்ல… நடிப்பும் கூடப் பிறந்ததுதான்..! - நெகிழ வைத்த ரஜினி



கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு தலைவரின் ஆறிலிருந்து 60 வரை படம் பார்த்தேன், இன்று (நவம்பர் 23, திங்கள்). எத்தனையாவது முறை..?
தெரியவில்லை…

அவருடைய படங்களைப் பார்க்க மட்டும்தான் என்னைப் போன்றவர்களுக்குத் தெரியும். எத்தனை முறை என்பதை கணக்கில் வைத்துக் கொள்வதில்லை.

ஸ்டைல் இல்லை, நிமிடத்துக்கொரு முறை முடிகோதும் அந்த மேனரிஸம் இல்லை, காற்றில் பறந்து பந்தாடும் சண்டைகள் இல்லை, அறிமுகப் பாடலோ, பஞ்ச் வசனமோ இல்லை… ஆனால் ‘தலைவர்’ வருகிற ஒவ்வொரு காட்சியிலும் மனசு அதிர்ந்து அழுதது.

வாழ்க்கை இத்தனை வலி மிகுந்ததா..! இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பலருக்கும் தெரியாத ஒரு உலகத்துக்குப் போய்வந்த உணர்வு.

தன் சொந்த தம்பியிடம் பணம் கேட்கக் கூச்சப்பட்டு ரஜினி தயங்கி நிற்கும் ஒரு காட்சியில் அவரது தன்மானத்துக்கும் வறுமைக்கும் நடக்கிற போராட்டம்…

“அண்ணா… ஒரு 5000 ரூபா பணத்துக்காக உன் வாழ்க்கையை அடகு வச்சிக்கிறது சரிதான்னு எனக்குப் படல…” என்று தம்பி பேசும்போது, தலைவர் ஒரு ஞானி மாதிரி ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சொல்வார்..

“கண்ணா.. மாடு மனை மண்ணு பொன்னு இதெல்லாம் அதுவா அமையறதுப்பா… அதைத் தீர்மானிக்கிறது நாம இல்லை”

தோல்வி மேல் தோல்வி, அடி மேல் அடி விழும்போது, அப்படியே இறுகி இறுகி தன்னையே மறுவார்ப்பு செய்து கொள்ளும் காட்சிகளில்…

“தான் நல்லாருக்கணும்னு நினைக்கிறவங்க என்னைச் சுத்தி இருக்காங்க… நான் நல்லாருக்கணும்னு நினைக்கிறவங்க வெளியே இருக்காங்க” என உறவுகளுக்கான அர்த்தம் சொல்லும்போதும்…

-நண்பர்களே, இந்தப் படம் வெளியான வருடம் 1979!

ரஜினி அந்தக் காட்சிகளிலெல்லாம் நடித்த மாதிரியே தெரியவில்லை.

பணம் தருவதாகச் சொல்லி ஏமாற்றிவிட்ட ஆத்திரம் மேலிட முதலிரவில் கோபித்துக் கொண்டுபோய், சில நிமிடங்களில் மனச் சமாதானமடைந்து திரும்பி வந்து மனைவியுடன் அவர் இயல்பாகப் பேசும் காட்சி, ஏனோ மனதில் ஆணியறைந்தது மாதிரி பதிந்துவிட்டது.

படத்தில் ஒரே கமர்ஷியல் விஷயம் கண்மணியே பாட்டு. பெரிய டெக்னிக்கல் உத்தி எதுவும் இல்லாத சாதாரண காட்சியமைப்புதான்.

ஆனால் கேட்கும்போதெல்லாம் நினைவுகளை ஈரப்படுத்தி கண்களைக் கசிய வைக்கிற ஒரு பாடலாகத் தந்துவிட்டார் இசைஞானி. அதுவும் பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கிற அந்த இசை (அது ஒரு அற்புதமான பாஷை மாதிரியே படும் எப்போது கேட்டாலும்!), ‘எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா… பல்சுவையும் சொல்லுதம்மா…’ என்ற வரிகளுக்கு தலைவர் நடித்திருக்கும் அழகு, அந்த இணையில்லாத, முகம் கொள்ளாத மந்தகாச சிரிப்பு… இணையில்லாத பாடல் அது!

தலைவரின் இந்த 60வது பிறந்த நாளுக்கு இந்தப் பாடலையே அவருக்கு டெடிகேட் செய்ய விரும்புகிறேன். இந்தப் பாடலுக்கு ஏதாவது ஸ்டில் அனுப்பணும் என்று நினைத்த போது, அந்தப் பாடலையே ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொண்டால் என்னவென்று தோன்றியது. அதையும் பயன்படுத்துங்கள்.

இறுதியாய் ஒரு வார்த்தை… திரைத்துறை தாண்டி பொதுவாழ்க்கையில் ரஜினி உறுதியாக ஒரு முடிவை எடுக்கவில்லை என்பது போல சிலர் விமர்சனங்கள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ரஜினி தீர்க்கமான மனிதர். தன் கருத்தில் எப்போதும் மாறாத உறுதியுடன் இருக்கும் அசாதாராண நபர். தேடி வந்த முதல்வர் பதவியை வேண்டாம் என்று சொல்ல எத்தனை தன்னம்பிக்கையும், மன உறுதியும் வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

இப்படிப்பட்ட ஒருவர் அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்ற விவாதமே இனி வேண்டாம். அவர் விருப்பம் அது. ஆனால் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக, ஒரு குருவாக இருக்க அவரைத் தவிர சிறந்த ஒருவர் தமிழகத்தில் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

ஒரு ரஜினி ரசிகனாக சில நேரங்களில் சிலரது ஏளனத்துக்கு ஆளாகிருக்கிறேன். ஆனால் வருத்தப்பட்டதில்லை. ‘போகட்டும் கண்ணனுக்கே’ என சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பேன்.
அன்று சொன்னதுதான் இன்றும்… ரஜினி ரசிகன் என்பதில் பெருமையாக இருக்கிறது!

Thursday, 13 March 2014

எனக்கும் அரசியல் தெரியும்..- நமீதாவுக்கு போட்டியாக களமிறங்கும் கவர்ச்சி புயல்...!



பாராளுமன்ற தேர்தல் பற்றி நடிகை சோனா கூறியதாவது:-

‘‘பாராளுமன்ற தேர்தல் பரபரப்பு இப்போதே ஆரம்பமாகி விட்டது. பெண்களை பொருத்தவரை இந்த தேர்தல் முக்கியமான நேரத்தில் வருகிறது. இந்தியா, ஆணாதிக்கம் மிகுந்த நாடு. இங்கே பெண்கள் இன்னும் பின்தங்கியே இருக்கிறார்கள். அதனால் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நிறைய நடைபெறுகின்றன.

டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவம், சென்னை பெண் என்ஜினீயர் கற்பழித்து கொலை போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 60-க்கும் மேற்பட்ட கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. அரசியல்வாதிகள் இதுபற்றி பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு முடிவு எடுக்கவில்லை.

அரபு நாடுகளை போன்ற கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால், இதுபோன்ற வன்கொடுமைகள் இங்கேயும் நடைபெறாது.

அதற்கு ஆண்களுக்கு இணையாக, பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வரவேண்டும். பெண்களின் முன்னேற்றத்துக்கு எந்த கட்சி முக்கியத்துவம் கொடுக்கிறதோ, அந்த கட்சிக்கு பெண்கள் வாக்களிக்க வேண்டும்.

எனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது. நிச்சயமாக அரசியலுக்கு வந்து பெண்களுக்கு சேவை செய்வேன்.

ஆனால் அதற்கு இன்னும் சில வருடங்கள் போக வேண்டும். 40 வயதுக்கு மேல் நான் அரசியலுக்கு வருவேன். பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடுவேன்.''

இவ்வாறு சோனா கூறினார்.