Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts

Thursday, 24 July 2014

மிளகின் அற்புதமான மருத்துவக் குணங்கள் மற்றும் சத்துக்கள் - தினம் ஒரு தகவல்...!



மிளகின் அற்புதமான மருத்துவக் குணங்கள்:

வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி கிமு 3000 ஆம் ஆண்டுகளிலிருந்து சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு.

மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்தது.


மிளகில் உள்ள சத்துக்கள்:

தாது உப்புகள்

1. கால்சியம்
2. பாஸ்பரஸ்
3. இரும்பு


வைட்டமின்கள்

1. தயாமின்
2. ரிபோபிலவின்
3. ரியாசின்


சளித் தொல்லைக்கு:

மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.

கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.


பற்களுக்கு:

மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.


தலைவலி:

மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.


இரத்தசோகைக்கு:

கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும் .


பசியின்மைக்கு:

ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.

மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.

Wednesday, 23 July 2014

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரிபழம்...!

முந்திரி வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு பயிர் செய்யப்படுகிறது. ஒரு எக்டேரில் முந்திரி கொட்டையின் விளைச்சல் 500 கிலோவாகும்.

நம்மிடையே முந்திரி கொட்டைகளை போல முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு. நாட்டில் உற்பத்தியாகும் 500 டன் முந்திரி பழங்களில் 10 சதவிகிதம் கூட பயன்படுத்துவதில்லை.


ஏனெனில் பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப்பொருளே காரணம். இதனால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது. இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிடலாம். மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம். முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிபழத்தில் ஐந்து மடங்கு அதிகமுள்ளது.

வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது. பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின்றது. ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குணமாக்குகின்றது. மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.

மேலும், பழத்தில் டானின் உள்ளதால் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படுகின்றது. இச்சிறப்புமிக்க பழத்தில் இருந்து ஜூஸ், சிரப், ஜாம், மிட்டாய் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து பயன்படுத்தலாம்.

Tuesday, 8 July 2014

கழுத்துவலி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்...? - இதப்படிங்க...!

கழுத்துவலி இளம் வயதினரையும் பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் உணவுப்பழக்கவழக்கம் மற்றும் நவீன  வாழ்க்கை முறை, பைக், கார் போன்றவற்றில் மோசமான ரோட்டில் பயணம் செய்வது, அதிகநேரம் குனிந்து அமர்ந்து கம்ப்யூட்டர் டைப் செய்வது,  எடையுள்ள பொருட்களை திடீரென தூக்குவது, உயரமான தலையணை வைத்து அதிக நேரம் படிப்பது, டிவி பார்ப்பது போன்ற செயல்களால் கழுத்து  பகுதியில் சவ்வு பலகீனமடைந்து வலி ஏற்படுகிறது.


கழுத்துவலி வராமல் இருக்க உயரமான தலையணை, சமனில்லா படுக்கையை உபயோகப்படுத்தக்கூடாது. இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோவில்  நீண்டதூர பயணங்களை தவிர்க்க வேண்டும். அதிக எடை தூக்க கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி சில உடற்பயிற்சிகள் செய்யலாம். இது  கழுத்தை சுற்றியுள்ள தசைகளை பலப்படுத்தும்.

அதிக நேரம் ஒரே இடத்தில் குனிந்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.

Thursday, 3 July 2014

காலி பிளவரின் குணங்கள்... - உங்களுக்காக...!




கால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

அதிக எடை போடாமல் இருக்க உதவுவது.

பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும்.

இவை எல்லாம் எதன் குணம்? காலி பிளவரின் குணங்கள்.

 வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது.

சேலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது போன்றவை காலி பிளவரில் செய்யக் கூடிய உணவு வகைகள்.

 காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து உள்ளது.

பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம்.

 காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொந்தரவு அதிகம் ஏற்படாமல் தடுக்கலாம்.

Thursday, 26 June 2014

தாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி...!



அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம் என்ற நூல் இந்த தாம்பத்திய உறவை எப்படியெல்லாம் விவரிக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

சுரங்கத்துக்குள் தங்கம் இருக்கிறது ஆனால் பூமியை வெட்டி சுரங்கம் ஏற்படுத்தி மூலப்பொருள்களில் இருந்து தங்கத்தை பிரித்து எடுக்க தெரியாதவனுக்கு அந்த தங்க வயல் கிடைத்து என்ன பயன்? மலருக்கு மணம் எவ்வளவு அவசியமானதோ, வண்டுக்கு தேன் எவ்வளவு அவசியமோ, அது பேல் கொக்கோக அறிவு இல்லாது மேற்கொள்ளும் தாம்பத்திய உறவும் இன்பம் தருவதாக அமையாது என்கிறது கொக்கோகம்.

பெண் மற்றும் ஆண் உடலில் எந்தெந்த உறுபப்களை மீட்டினால் இன்ப ஒலி பரவும் என்பதை விலாவரியாக விவரிக்கிறது இந்த நூல். காதலுடன் மனந்து இன்பம் அனுபவிக்கும் தம்பதியர்களுக்கும் சில ஆண்டுகளில் வாழ்க்கை கசந்துவிடுவது உண்டு. அதற்கு காரணம் அவர்கள் செவ்வனே காமத்தை கற்றுக்கொண்டு அதை நடைமுறைபடுத்தாதது தான் என்கிறார் அதிவீரராம பாண்டியன்.

பெண்களில் பத்தினி, சித்தினி, சங்கனி, அத்தினி என நான்கு வகை உண்டு. இவர்களில் பத்தினி என்பவள் மான் போன்றவள். அன்னம் போல் நடை உடையவள். பெண்களில் இவள் முதல் தரமான இவளை எல்ல காலங்களிலும் கூடுதல் இனிது. சித்தினி என்பவள் பெண் யானையை போன்றவள். சங்கினி என்பவள் வடிவமான உடல் அமைப்பு பெறாதவள். அத்தினி என்பவள் முரட்டுத் தன்மை நிறைந்தவள்.

அமுதம் எனப்படுவது காம உணர்ச்சி பெருகுவதை குறிப்பதாகும். அது உடலில் பதினைந்து இடங்களில் இருக்கிறது. பெருவிரல், புறந்தாள், கணுக்கால், முழந்தாழ், பெண் உறுப்பு, தொப்புள், மார்பு, கொங்கை, கைம்மூலம், கழுத்து, கபோலம், வாய், கண், நெற்றி, உச்சி, போன்ற உறுப்புகளைச் சரியான அளவில் தூண்டும் போது காமம் பெருகும்.

உச்சி முடியைக் கையால் பிடித்து நகத்தால் ஊன்றிக் கோதுதல், கண்களைக் கனியைப்போல் சுவைத்து நாக்கால் நீவுதல், உதட்டை சுவைத்து நாக்கில் பற்களை மெதுவாக ஊன்றுதல், நாபியை நாக்காலும், கை£லும் தடவுதல், பெண் உறுப்பையும், உறுப்பின் மீது இருக்கும் மணியையும் சுவைத்தல் போன்றவை மன்மத கலையாகும்.

இந்த மன்மத கலையை ஆண்கள் அறிந்து எந்த நிலையில் என்ன மாதிரியான முன் விளையாட்டுகளை செய்ய வேண்டுமோ அதைச் செய்து நாயகியுடன் உறவு கொண்டால் அவள் பரவசமாகி உள்ளம் நெகிழ்ந்து உச்சகட்டத்தை அடைந்து காமநீரை பெருக்குவாள் என்கிறது கொக்கோகம்.
ஆடவர்களை முயல், காளை, குதிரை, என்றும், பெண்களை மான், பெண் குதிரை, பெண் யானை என்றும் மூன்று வகையாக பிரிக்கலாம். ஆண், பெண் உறுப்புகளின் அளவுகளை வைத்து இந்த பிரிவு ஏற்படுத்தபட்டிருக்கிறது.

மான் சாதிப் பெண்ணுடன் முயல் சாதி ஆண் கூடுதல், குதிரை சாதிப் பெண்ணுடன் காளை சாதி ஆண் சேர்தல், பெண் யானை சாதிப் பெண்ணுடன், குதிரை சாதி ஆண் சேர்தல் இருவருக்கும் ஒத்த இன்பம் தருவதாக இருக்கும்.

குறைந்த ஆழம் உள்ள உறுப்பு பெண்ணுடன், நீளமான உறுப்பு உள்ள ஆண் இணைவது உச்ச சேர்க்கை எனப்படுகிறது. இதில் ஆண்களுக்கு இன்பம் ஏற்படலாம். ஆனால் பெண்களுக் குஇன்பம் கிடைக்காது. அது போல அதிக ஆழம் உள்ள உறுப்பு பெண்ணுடன் நிளம் குறைந்த  உறுப்பு உள்ள ஆண் இணைவது நிச்ச சேர்க்கை எனப்பமு. இதில் ஆண் - பெண் இருவருக்கும் போதுமான இன்பம் கிடைப்பது இல்லை. நீள, ஆழம், மிகவும் வேறுபடுவதால் இதை அதி உச்சம், அதி நீசம் என்கிறார்கள்.

ஆண் பெண் சேர்க்கை காலமானது அற்பகாலம். மத்திம காலம், அதிக காலம், என்று பிரிக்கபடுகிறது. பெண்ணுடன் ஆண் கூடும் போது அவளும் உச்சம் முந்தவும், தன்னுடைய உச்சம் பிந்தவும், நேருமாறு சேர்வதை விட ஆண் - பெண் இருவரும் ஒரே காலத்தில் உச்சம் நிகழுமாறு இன்பம் சுகிப்பதே மேலான பேரின்பமாக வருணிக்கப்படுகிறது.

ஆண் மற்றும் பெண்களின் காம வேகம் மந்தவேகம், மத்தி வேகம், சண்ட வேகம் என்று பிரிக்கப்படுகிறது. அந்தந்த வேகமுடைய ஆண் - பெண் ஒன்று சேரும் போது தான் இருவரும் உச்சகட்ட இன்பத்தை எளிதில் அடைய முடியும். இல்லாத பட்சத்தில் இருவரில் ஒ-ருவர் ஏமாற்றத்தையே அடைய முடியும்.

கலவி இன்பம் அனுபவிப்பதில் வயது ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. அதனால் வயது இங்கே பிரிக்கப்படுகிறது. பெண்களை பொருத்த வரை பதினாறு வயது வரை வாலை, பதினாறுக்கு மேல் முப்பது வரை தருணி, முப்பதுக்கு மேல் ஐம்பத்தைந்து வரை பேரிளம் பெண், ஐம்பத்தைந்துககு மேல் விருத்தை எனவும் சொல்லலாம்.

மேற்கூறிய பிரிவுகளில் வாலையுடன் கூடினால் வலு உண்டாகும். தருணி, பேரிளம் பெண்களுடன் கூடும் போது விதவிதமான சுகபோகங்களை அனுபவிக்க முடியும். முதிய பருவத்திலான விருத்தையுடன் கூடினால் நோய் உண்டாகும்.

Sunday, 22 June 2014

ஒரே படுக்கையில் `ஒன்றாக’ இருக்கிறீர்களா..? - எச்சரிக்கை...!

கணவன்-மனைவியர் ஒரே படுக்கையில் ஒன்றாக படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால், அவர்களது உடல்நலம் பாதிக்கப்படலாம் என்று கூறி அதிர வைக்கிறது ஒரு ஆய்வு.


இதுகுறித்து இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பரிசோதனைக்கு தம்பதியரில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் சரியான தூக்கமில்லாமல் அவதிப்பட்டதாக தெரிவித்து உள்ளனர்.

இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது, கணவர் அல்லது மனைவியர், தங்கள் துணைக்கு கொடுக்கும் சில தொல்லைகள்தான் என்பதும் அப்போது தெரிய வந்தது. அதாவது, குறட்டை, பற்களைக் கடித்தல், படுக்கையில் புரள்தல் போன்றவற்றை அவர்கள் தொல்லைகளாக குறிப்பிட்டனர்.

இதுபோன்ற தொல்லைகளால் ஆரம்பக் காலங்களில் தூக்கம் கெட்டாலும், நாளடைவில் இதய நோய் போன்றவை தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன், தம்பதியருக்குள் ஒரே படுக்கையறையில் தூக்கம் கெட்டால், அவர்கள் `டைவர்ஸ்’ வரை போய்விட நிறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் எச்சரித்தனர் அந்த ஆய்வாளர்கள்.

பின்குறிப்பு : இந்த ஆய்வு முடிவு, திருமணம் ஆகி குழந்தை பெற்ற தம்பதியருக்கு மட்டும்தான் பொருந்தும். மற்ற இளஞ்ஜோடிகள் தாராளமாக படுக்கையில் உருளலாம், புரளலாம்!

Saturday, 21 June 2014

எப்போதும் இளமை வேண்டுமா...? - இதப்படிங்க...


கறிவேப்பிலை...

கறிவேப்பிலை இருவகைப்படும். “நாட்டுக் கறிவேப்பிலை மற்றும் காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகின்றன. நாட்டுக் கறிவேப்பிலையில் இனிப்பும், துவர்ப்பும், நறுமணமும் ஒருங்கே அமைந்திருக்கும். காட்டுக் கறிவேப்பிலை கசக்கும்.

கறிவேப்பிலையில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, தாது சத்துக்கள் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்க¢ன்றன. சுண்ணாம்புச் சத்தும் நிறைய இருக்கிறது. இந்தச் சத்துக்கள் உடல் பலத்தை அளிக்கவும் எலும்புகளுக்கு சக்தியூட்டவும் பயன்படுகிறது.

'வாயினருசி வயிற்றுளைச்ச னீடு சுரம்
பாயுகின்ற பித்தமுமென் பண்ணுங்காண் - தூய
மருவேறு காந்தளங்கை மாதே உலகிற்
கருவேப்பிலை யருந்திக் காண்'

என்ற பாடலால் கறிவேப்பிலையை உண்டு வர வாயில் சுவையின்மை, பழஞ்சுரம், சீதக்கழிச்சலால் வரும் வயிற்றுளைச்சல், பித்தம், பைத்தியம் ஆகியவை குணமாகும் என்பது தெரிய வருகிறது.

கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகிறது. ஔடத குணமுள்ள இந்தக் கறிவேப்பிலை பல வியாதிகளையும் தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது.

பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.

வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.

கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.

கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.

அரோசிகம் எடுபட..

எந்த பதார்த்தத்தைச் சாப்பிட்டாலும் அது மண் போல ருசியறிய முடியாமலிருப்பதையே அரோசிகம் என்பர். அதாவது நாவில் ருசியறியும் உணர்ச்சி இழைகள் மறத்துப்போவதே இதற்குக் காரணம். இதைப் போக்க கறிவேப்பிலைத் துவையல் நன்கு பயன்படும்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும்.

இதற்குத் தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்து, அதைச் சுத்தம் பார்த்து, அம்மியில் வைத்து தேவையான அளவு இஞ்சி, சீரகம், புளி, பச்சை மிளகாய், உப்பு இவைகளை வைத்து மை போல துவையல் அரைத்து, சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நாவில் ருசியறியும் தன்மை ஏற்படும்.

அடிக்கடி இந்த துவையலை சாதத்துடன் ருசித்துச் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது. உடல் உறுதி பெறும்.\

பைத்தியம் தெளிய....

புத்திசுவாதீனமில்லாமல் இருப்பவர்களின் புத்தியை ஸ்திரப்படுத்தி ஒரு நிலையில் நிறுத்தி, அறிவில் தெளிவை உண்டாக்க கறிவேப்பிலை நன்கு பயன்படும்.

சுத்தமாக ஆய்ந்து எடுத்த கறிவேப்பிலையை அம்மியில் மை போல அரைத்து, அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் விட்டுக் கலக்கி, தினசரி காலையிலும் மாலையிலும் சாதத்தில் போட்டுக் கலந்து சாப்பிடக் கொடுத்து விட வேண்டும். இந்த விதமாக புத்தி சுவாதீனம் அடையும் வரை கொடுத்து வர வேண்டும்.

கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால், பதார்த்தங்களில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும்.

இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது கறிவேப்பிலைத் துவையலை சாப்பாட்டுடன் சேர்த்து வந்தால் உடல் நலம் பெறும்.

நீர் சிகிச்சை...! - தெரிந்துகொள்வோம் வாங்க....


1. காலையில் எழுந்தவுடன் காலை டீ, காபியை தவிர்த்து, மறுத்து மாற்றாக சுத்தமான குடிநீ¢ர் ஒன்று முதல் மூன்று டம்ளர் நீர் அருந்திட இரவு மிச்சமீதி மன அழுத்தம், மன உளைச்சல் அந்நீரில கரைந்திடும். சரியாகிவிடும். மலச்சிக்கல் நீங்கும்.

2. அடிக்கடி நீரில் முகம் கழுவ மன அழுத்தம் விலகும். புதிய சுறுசுறுப்பு வரும். முகம் கழுவிய பின் துணயால் துடைக்கக்கூடாது. அப்படியே விட வேண்டும்.

3. ஈரத்துணி பட்டி நெற்றியில் அடிக்கடி போடலாம். அதனால் தலை பாரம், மூளைச்சுடு, மனஉளைச்சல், மனசோர்வு கணிசமாகக் குறையும். புத்துணர்ச்சி தோன்றும். இது உறுதி. வயிற்றிலும் போடலாம்.

4. காலை மாலை இருநேரம் குளியல் எடுக்கலாம். சாதாக்குளியலை விட ஷவர்பாத், அருவி, மழைக்குளியல் மிக நல்லது. மன அழுத்தம் உடன் சீர்படும்.

5. இடுப்புக் குளியல் தொட்டியிலும், முதுகுத் தண்டு தொட்டியிலும், ஜெட் குளியலிலும் தினமும் அல்லது வாரம் இருமுறை குளித்திடலாம். இத்தொட்டிகளை வாங்கி வீடுகளில் அல்லது இயற்கை மருத்துவ முகாம்களில், இயற்கை மருத்துவ மனைகளில் இத்தொட்டிகள் கிடைக்கும். 20 முதல் 30 நிமிடம் குளித்திட வேண்டும்.

6. கடல் குளியல், குளக் குளியல், நீச்சல் குளியல்கள் அனைத்தும் மன அழுத்தம் சீர்பட எளிய குளியல் முறைகள்.

7. மன அழுத்தம், மன உளைச்சல், மன குழப்பம், கோபம், சினம், எரிச்சல், மன பொருமல், நிலையற்ற மனம் உள்ளவர்கள் தம்மிடம் எப்போதும் எங்கும் குடிநீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
சினம், கோபம் தொடங்கும் சமயமே குடிநீர் குடித்து மட்டுப்படுத்தலாம்.
குடிதண்ணீர் நமது சினத்தை சில நிமிடத்தில் கரைத்தும மாயமாக்கும். இது உண்மை.

நமது உடலில் அச்சமயம் அளவுக்கு மீறி ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் ஏற்படும். உருவாகும் அமிலங்களையும் உடம்பில், இரத்தத்தில் கலக்காமல் நீர்த்திடச் செய்யும். எனவே நீரை நாம் சிறப்பாக, சரியாக, நன்றாக பயன்படுத்தி மன அழுத்தத்திலிருந்து எளிதில் இலகுவாக விடுபடலாம்.

8. மலச்சிக்கல்: பல மணி நேரம் பஸ், ரயில் பயணம், வேலைப் பளு, தொடர்ந்து அமர்ந்த நிலைப் பணி, அதிக சூடு உள்ள சூழல், பணி, தவறான அமில உணவுகள் மிகுதல் மூலம் மலச்சிக்கல், மலக்கட்டு, மலம் கெட்டிப்படுதல் இறுகுதல் உண்டாகும் சமயம் உடல் இரத்தம் அமிலமாகி, அசுத்தமாகி உடலில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு திசுக்கள், காந்தசக்தி தறி கெடும் சமயம் மன அழுத்தம் மாறுபாடு அடைகிறது. வேறுபாடு அடைகிறது. எரிச்சல், கோபம், சினம் உச்சநிலையை எட்டுகிறது. அச்சமயம்.

1. காலையில் குடிநீர் ஒன்று முதல் மூன்று டம்ளர் நீர் குடிக்கலாம்.

2. இரவில் கனி உணவுகள் மட்டும் சாப்பிடலாம். தோலுடன் சாப்பிட்டுப் பழக வேண்டும்.

3. சில உடற்பயிற்சிகள், யோகா செய்யலாம்.

4. இடுப்புக் குளியல், வயிற்றில் மண்பட்டி, வயிற்று ஈரத்துணி பட்டி எடுக்கலாம்.

5. இரவில் 5 கிராம் ( 1 டீஸ்பூன்) அளவில் திரிபலா பொடி, அல்லது கடுக்காய் பொடி, அல்லது நிலவாரைப் பாடி,அல்லது முருங்கைக்கீரைப் பொடியை நீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிட இருவேளையில் மலக்கட்டு விலகும்.

6. இவை ஐந்தும் செய்ய இயலாமல் செய்தும் பலன் இல்லாதவர்கள் மட்டும் அஹிம்சை எனிமா எனப்படும் கருவி மூலம் 200 முதல் 300 மி.லிவரை நல்ல சுத்த நீரை மலவாய், குடல் மூலம் ஏற்றினால் இரு நிமிடங்களில் திரும்ப நீருடன் கெட்டி மலம் இளகி வெளியேறும். தேவைப்படும் சமயம் மட்டும் எனிமாக் கருவியை பயன்படுத்தலாம். தினமும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

எனவே நீரை சரியாகப் பயன்படுத்தும் கலையை அறிந்தாலே நமது மன அழுத்தம் பாதி குறைந்துவிடும். விலகி விடும்.

அதுபோல் உண்மைப் பசியை அறிவதற்கும் நீர் நல்ல நண்பனாக வழிகாட்டியாக, டெஸ்டராக உள்ளது.

உடலில் பசி ஏற்படும் சமயம், பசி நரம்புகள் சுண்டப்படும் சமயம் 50 முதல் 60 மி.லிட்டர். அரை டம்ளர் நீர் அருந்திடும் சமயம் குறைந்தது 15 நிமிடமாவது உச்சப் பசி ஏற்படவில்லை எனில் அது பொய் பசியே. நீர் அருந்திய ஐந்து நிமிடத்திற்குள் உச்சப் பசி தோன்றிய அது உண்மைப் பசி எனலாம். உணவிற்கு முன் ஆசமனம் எனப்படும் ஒரு மடக்கு நீரை கையில் ஊற்றி உறிஞ்சிட பசியின் தன்மை, உடலின் காந்தை சமப்பட்டு ஜீரணம் மேம்படும் தன் மயமாதல் சிறப்படையும். உணவுடன், உணவு முடித்தவுடன் நீர் குடிப்பதைத் தவிர்க்கவும். உணவு முடித்து 30 நிமிடம் கழித்தக் குடிக்கும் நீர் நல்ல பலனைத் தரும்.

Friday, 20 June 2014

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய்...! - உங்களுக்காக...


நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம். பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.

இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.

இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

ஜீரண சக்தியைத் தூண்ட 

நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.

நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.

நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.

அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

இது மூளைக்கு சிறந்த டானிக்.

நெய்யில்....

Saturated fat - 65%

Mono - unsaturated fat - 32%

Linoleic - unsaturated fat -3%

இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.
நெய் உருக்கி மோர் பெருக்கி....

அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.

தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம். மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

* ஞாபக சக்தியை தூண்டும்
* சரும பளபளப்பைக் கொடுக்கும்
* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.

உடல் வலுவடைய 

சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே...
இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

குடற்புண் குணமாக

குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.

இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன்டும்.

Saturday, 7 June 2014

நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம் - தெரியுமா உங்களுக்காக..?

கோடை காலங்களில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, நுங்கு போன்றவை பல இருந்தாலும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால்  அது மாம்பழம் தான். அதிலும் முக்கனிகளில் முதல் கனியான மாம்பழத்தை பார்த்ததும் அனைவருக்குமே நாவிலிருந்து எச்சில் ஊறும். மேலும்  மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன.

மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு  தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும். மாம்பழத்தில் கெட்ட கொலட்ராலை குறைக்கும்  பொருள் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் தங்கி, உயர் இரத்த  அழுத்தம், இதய நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். ரத்தத்தை ஊறவைக்கும். மாம்பழச்சாறு  நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாங்காய் அமிலத்தன்மை  கொண்டது. இதனை ஊறுகாயாகச் செய்து உண்ண, வைட்டமின் சி பற்றாக்குறை நீங்கும். மாங்காயை நறுக்கி, வெயிலில் உலர்த்தி, மோரில் ஊற  வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண, வைட்டமின் குறைபாட்டால் ஏற் படும் ஸ்கேவி நோய் குணமாகும்.

மாங்காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்த ரத்த பேதி நிற்கும். வயிற்று உள்ளுறுப்புக்கள் பலப்படும்.  மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும். மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து, உலர வைத் துச்  சாப்பிட்டால் பசி ஏற்படும். குமட்டல் நீங்கும். மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியமாகும். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால் இதனை சாப்பிட்டால் தெளிவான கண் பார்வையை பெறலாம்.

நுரையீரல் புற்றுநோயை தவிர்க்கும் காய்கறிகள்...!



காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின், கனிம சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன. காய்கறிகளை உண்பதால் உடல் எடை அதிகரிக்காது. கலோரி அளவும் குறைவாகவே இருக்கும். பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால் தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோட்டின், உடலுக்கு வைட்டமின் ஏ சத்தினை அளிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன.

பீட்டா கரோடினானது புற்றுநோய் தடுக்கக்கூடியது. கேரட், இனிப்பு உருளைகிழங்கு, காலிப்ளவர் நூல்கோல் போன்றவை இந்த வகை காய்கறிகளில் அடங்கும். நெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் இவற்றை சாப்பிடுவதாலும் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம். மிளகு, முட்டைகோஸ், தக்காளி, கீரைகள் உள்ளிட்ட பயிறு வகைகள், பீட்ருட், உருளைகிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. வேறு சில காய்கறிகளில் இரும்பு சத்துகள் அதிகம் இருக்கும்.

இவற்றால் உடலின் ரத்தம் தூய்மையாவதுடன் உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்கிறது. மிக குறைவான இரும்பு சத்து இருப்பின் அனீமியா எனப்படும் ரத்த சோகை நோய் ஏற்படும். பட்டாணி, கொண்டை கடலை உள்ளிட்ட பயிறு வகைகள், பீட்ருட், உருளைகிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. முட்டைகோஸ் உள்ளிட்ட கரும்பச்சை நிறத்தில் உள்ள காய்கறிகளில் அதிகளவு கால்சியமும் உள்ளதால் ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களுக்கு அவை அவசியமாகிறது.

அனைத்து காய்கறிகளுமே நார்ச்சத்தினை கொண்டிருக்கின்றன. காய்கறிகள் மற்றும் பழங்களில் ஃப்ளேவனாய்ட்ஸ் காணப்படுகிறது. மிளகாய், பூசணி, கத்தரிக்காய், கேரட், தக்காளி, செர்ரி, அனைத்து வகை வெங்காயம், பச்சை கீரைகளில் ஃப்ளேவனாய்ட்ஸ் அதிகம் உள்ளது. அதிக காய்கறிகள், பழங்கள், கீரைகள், சாப்பிடுங்கள் ஆரோக்கியமாக இருங்கள்.

காணாமல் போகட்டும் கருவளையம்...! - இதைப்படித்த பிறகு...


செதுக்கி வைத்த சிற்பம் போல முகம்... வசீகரிக்கும் நிறம்... லட்சணமான சிரிப்பு... இப்படி எல்லாம் இருந்தாலும் ஒரு சின்ன விஷயம் இவை  அனைத்தையும் காணாமல் போகச் செய்துவிடும். அதுதான் கண்களுக்கடியில் தோன்றுகிற கருவளையங்கள். ராத்திரி, பகல் பார்க்காமல், தூக்கம்  தவிர்த்து உழைக்கிற வர்களுக்குத்தான் முன்பெல்லாம் கருவளையங்கள் வரும். இன்றோ அது பரவலாக எல்லோருக்கும் வருகிறது. கருவளையங்கள்  தோன்றக் காரணங்கள் என்ன? அதற்கான தீர்வுகள், வராமல் தவிர்க்கும் வழிகள் என எல்லாவற்றையும் பற்றி விவரமாகப் பேசுகிறார்  அரோமாதெரபிஸ்ட்டும் அழகுக்கலை நிபுணருமான கீதா அஷோக்.

கருவளையங்கள் வர முக்கியமான காரணங்கள் மூன்று... ஊட்டச் சத்துக் குறைபாடு, மரபு வழி, ஸ்ட்ரெஸ் மற்றும் கண்களுக்கு அதிக வேலை  கொடுப்பது. காரணத்தைக் கண்டுபிடிக்க ஒரு எளிய டெஸ்ட் உள்ளது. கண்ணாடி முன் நின்று கொண்டு, உங்கள் கண்ணுக்கு அடியிலான பகுதியை  லேசாகக் கீழே இழுத்துப் பாருங்கள். உடம்பு சரியில்லை எனப் போனால் மருத்துவர்கள் உங்கள் கண்களை டெஸ்ட் செய்வார்களே, அதே மாதிரிதான்.  கண்ணுக்குள் பார்க்காமல், கண்ணுக்கடியிலான தோல் பகுதியைப் பாருங்கள்.

அது வெள்ளையாக இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடுதான் காரணமாக இருக்கும். அதிலும் குறிப்பாக இரும்புச் சத்தும் ஆக்சிஜனும் குறைவாக  இருக்கும். கருப்பாக இருந்தால், கருவளையத்துக்கு மரபு வழியோ, ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தமோ காரணமாக இருக்கலாம்.

ஊட்டச்சத்து குறைபாடு...

ஆரோக்கியம் என நினைத்துக் கொண்டு, வெறுமனே ஓட்ஸாகவோ, கார்ன்ஃப்ளேக்ஸாகவோ சாப்பிடுகிறார்கள். குறிப்பிட்ட ஒரு உணவையே தொடர்ந்து  சாப்பிடு கிற போது, உடலுக்குத் தேவையான எல்லா சத்துகளும் கிடைப்பதில்லை. சருமமோ, கூந்தலோ ஆரோக்கியமாக இருக்க, எல்லா சத்துகளும்  அவசியம். முந்தைய காலங்களில் கருவளையப் பிரச்னைகளைப் பற்றியெல்லாம் யாரும் கேள்வியே பட்டிருக்க மாட்டார்கள். காரணம், அவர்களது  சரிவிகித, சத்தான சாப்பாடுதான்!

கருவளையங்கள் இருப்பது தெரிந்ததும் நீங்களாகவே கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி உபயோகிக்க வேண்டாம். எந்த ஒரு க்ரீமும் மேலோட்டமாகவும்  தற்காலிகமாகவும் உங்கள் பிரச்னையை சரி செய்யுமே தவிர, நிரந்தரத் தீர்வைத் தராது. முதல் வேலையாக ரத்தப் பரிசோதனை - அதில்  ஹீமோகுளோபின், இரும்புச்சத்து அளவுகளை தனித் தனியே சரிபார்க்க வேண்டும். சிலருக்கு கருவளையங்களுடன் சேர்ந்து, கண்களுக்கடியில்  சுருக்கங்களும் இருந்தால், அவர்கள் ரத்தத்தில் புரதத்தின் அளவையும் சரிபார்க்க வேண்டும். குறைபாட்டின் அளவு தெரிந்து, அதற்கேற்ப உங்கள்  உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி, உணவு மற்றும் சப்ளிமென்ட் என இரண்டின் மூலமும் சத்துகள் உடலுக்குள்  சேரும்போது, பிரச்னை சீக்கிரமே சரியாகும்.

என்னென்ன உணவுகள் உதவும்?

ப்ளூபெர்ரி, பசலைக்கீரை, பீர்க்கங்காய், சிவப்பு முளைக்கீரை, காளான், உலர்ந்த திராட்சை, பன்னீர் திராட்சை, சப்போட்டா, அவகேடோ, கொய்யா,  கொள்ளு, குதிரைவாலி அரிசி, கருப்பு உளுந்து, ராஜ்மா, ஆட்டீரல், காட்டு சீரகம் (வைல்ட் கியூமின்), சீஸ் - இவை அத்தனையும் கருவளையங்களை  விரட்டும் சக்தி கொண்டவை.

மரபு வழியால் வந்திருந்தால்?

அம்மா, அப்பாவுக்கு கருவளையங்களே இல்லாமல் இருக்கலாம். ஆனால், உங்களுக்கு இருக்கும். ஆண் குழந்தைகளாக இருந்தால் அவர்களது அப்பா  அல்லது தாய்மாமாவுக்கு கருவளையங்கள் இருந்தாலும், பெண் குழந்தைகளாக இருந்தால் அம்மா அல்லது அத்தைக்கு கருவளையம் இருந்தாலும் அது  மரபு வழியே வரும். பொதுவாக மரபு வழிப் பிரச்னைகளை சரியாக்குவது சிரமம். ஆனாலும், நவீன மருத்துவ முன்னேற்றத்தில் அவற்றுக்கும் தீர்வுகள்  உண்டு.

மரபுவழி கரு வளையம் எனத் தெரிந்தால், ஆரம்ப நிலையிலேயே அதைக் கண்டறிந்து, சிகிச்சை மற்றும் உணவு முறையின் மூலம் சரி செய்யலாம்.  மேலே சொன்ன உணவுகளை இவர்கள் இன்னும் சற்று அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மரபு வழியில் பிரச்னைகள் இருக்கும் போது,  உணவிலோ, பராமரிப்பிலோ சின்ன அலட்சியம் வந்தாலும், அதுதான் சாக்கு என கருவளையம் எட்டிப் பார்க்கும்.

மன அழுத்தம் மற்றும் கண்களுக்கு அதிக வேலை கொடுப்பதால் வந்தால்...

அளவுக்கதிகமாக டி.வி. பார்ப்பது, புத்தகம் படிப்பது, கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பது, இரவு ஷிஃப்ட் என்கிற பெயரில் தூக்க முறையையே மாற்றிக்  கொள்வது போன்றவை கருவளையங்களுக்கு முக்கிய காரணங்கள். எப்போதுமே, அது பகலோ, இரவோ... தூங்கி எழுந்த பிறகு பார்த்தால்  எல்லோருடைய முகமுமே அழகாக இருப்பதை உணரலாம். தூக்கத்தின் போதுதான் உறுப்புகள் ஓய்வெடுப்பதுடன், ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.  மேலே சொன்ன விஷயங்களால் ரத்த ஓட்டம் தடைப்படும். ரத்தக் குழாய்கள் சுருங்கும். அதன் வெளிப்பாடு முடி உதிர்வாகவோ, கண்களுக்கடியிலான  கரு வளையங்களாகவோ தெரியும்.

என்ன செய்யலாம்?

* உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரியில் உள்ள ஸ்டார்ச் கருவளையங்களுக்கு மிக நல்ல மருந்து. அவற்றை நறுக்கிய உடனேயே கண்களின் மேல்  வைத்துக் கொண்டால்தான் பலன்.

* உபயோகித்த டீ பைகளை கண்களின் மேல் வைப்பது முழுமையான பலன் தராது. திக்கான டீ டிகாக்ஷனை எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.  அதில்  பேப்பர் மாதிரி மெலிதாக வெட்டிய பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக்கொண்டு 5 முதல் 7 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். கிரீன் டீயாக  இருந்தால் இன்னும் சிறப்பு.

* கார்போக அரிசி, கருஞ்சீரகத்தை தலா 2 டீஸ்பூன் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் நன்கு வேக வைக்கவும். அது ஆறியதும் அதில் 10 மி.லி.  சுத்தமான பன்னீர் கலந்து, அப்படியே 3 மணி நேரம் வைக்கவும். பிறகு வடிகட்டி. பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைக்கவும். உடனடியாக ஒரு  போட்டோ செஷனுக்கு தயாராக வேண்டும், வெளியே பார்ட்டிக்கு போக வேண்டும், கருவளையங்கள் தெரியக்கூடாது என நினைக்கும் போது இந்த  சிகிச்சை இன்ஸ்டன்ட் பலன் தரும்.

* 2 கைப்பிடி சாமந்திப்பூவின் இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும். 100 மி.லி. தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் இந்தப் பூக்களைப்  போட்டு, உடனே மூடி வைக்கவும். 24 மணி நேரம் அப்படியே ஊறட்டும். பிறகு அந்தத் தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு, அவ்வப்போது  பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைக் கூட விரட்டும். அதிக எண்ணெய் பசையை  நீக்கும்.

* பிங்க் நிற தாமரைப்பூ இதழ்களை மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். அதில் 10 மி.லி. விளக்கெண்ணெயும், 10 மி.லி. தேனும் கலந்து 7  மணி நேரம் வெளியே வைக்கவும். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு, கண்களைச் சுற்றி பேக் போலத் தடவி, 1 மணி நேரம் கழித்துக் கழுவவும்.

* முள்ளங்கிச் சாறு, கேரட் சாறு, பீட்ரூட் சாறு (தண்ணீர் விடாமல் அரைத்துப் பிழிந்தது) இந்த மூன்றையும் கலந்து, 5 மி.லி. கிளிசரினும் 5 மி.லி.  எலுமிச்சைச் சாறும் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது பஞ்சில் நனைத்துக் கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம்.

பார்லரில் என்ன செய்யலாம்?

பைட்டோதெரபி என்ற சிகிச்சை எத்தனை ஆழமான கருவளையங்களையும் போக்கும். கண்களுக்கு உகந்த தாவரங்களின் சாரங்களைக் கொண்டு  செய்யப்படுகிற இந்த சிகிச்சையில் லோட்டஸ், கேமமைல், பெர்கமாட், ஜெரேனியம், யிலாங் யிலாங், சைப்ரஸ், ஃபிரான்கின்சென்ஸ் உள்ளிட்ட  அரோமா ஆயில்களின் கலவை அடங்கியிருக்கின்றன. பொதுவாகவே அரோமா ஆயில்களுக்கு சருமத்தின் 2வது அடுக்கு வரை ஊடுருவும் சக்தி  உண்டு. கருவளையமானது சருமத்தின் 2வது அடுக்கு வரை பரவியிருந்தால், இந்த சிகிச்சை வெறும் இரண்டே நாட்களில் 70 சதவிகித அளவுக்குப்  பலனைக் காட்டும்.

வீட்டில்...

    கண்களுக்குப் போடுகிற எந்த மேக்கப்பையும் நீக்காமல் தூங்கக் கூடாது.

    இரவில் கண்களுக்கடியில் தரமான நைட் க்ரீம் தடவிக் கொள்ளலாம்.

    சுத்தமான பன்னீரில் பஞ்சை நனைத்துக் கண்களின் மேல் வைத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாம்.

    வைட்டமின் சி சத்துள்ள தக்காளி, மாங்காய், கொய்யா, குடைமிளகாய், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை அதிகளவில் சேர்க்க வேண்டும். வைட்டமின் சி  சத்து உடலில் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வேறு ஏதேனும் உடல் நலக் கோளாறு காரணமாக கண்களுக்கடியில் கருவளையம்  வராமலிருக்கவும் இது உதவும்.

Friday, 6 June 2014

உருளைகிழங்கு சாறு குடித்தால் மூட்டு வலியை விரட்டலாம்..!

உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். இத்தகைய மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் ஏற்படுகிறது. பெரும்பாலும் மூட்டு வலி வருவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால் மூட்டுவலி ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். மூட்டுவலி ஏற்பட்டால் நடக்க முடியாது. உட்கார்ந்து எழ முடியாது. இரவில் தூங்கி எழுந்தால் பாதத்தை தரையிலேயே வைக்க முடியாது போன்ற அவஸ்தைகளால் மிகவும் வேதனை ஏற்படும்.


மேலும் அதிக எடை உள்ள பொருட் களை தூக்கினால் தோள்பட்டை, முழங்கை, முழங்கால், கழுத்து, இடுப்பு போன்றவற்றில் வலி அல்லது சுளுக்கு ஏற்பட்டு பாடாய் படுத்திவிடும். ஆகவே இத்தகைய இடங்களில் வலிகள் ஏற்படாமல் இருக்க, ஒரு சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த முழங்கால் மூட்டு என்பது தொடை எலும்பின் கீழ்ப்பகுதியும், முழங்கால் எலும்பின் மேல்பகுதியும் இணையும் இடமே முழங்கால் மூட்டு ஆகும். தொடை முழங்காலுக்கான முக்கிய ‘ஜங்ஷன் இது. நமது உடலில் அமைந்திருக்கும் பெரிய மூட்டும் இதுதான். வயதாக வயதாக தொந்தரவு தரும் மூட்டும் இதுதான்.

தொப்பிபோல் தட்டுப்படுகிறதே அதுதான், knee cap (Patella) எனப்படும் மூட்டுச்சில்லு. முழங்கால் மூட்டின் முக்கிய பகுதிகள் இந்த மூட்டுச்சில்லுக்கு பின்னால்தான் இருக்கின்றன. தொடை எலும்பு கீழே செல்லச்செல்ல அகன்று தடித்து, கொண்டைபோல் இருக்கும். அதன் கீழ்ப்பகுதி முழுவதையும் குருத்தெலும்பு போர்த்தியுள்ளது. இந்த கொண்டைப் பகுதி இரண்டாகப் பிரிகிறது. அவற்றின் நடுவே உள்ள சற்று பள்ளமான பகுதியில்தான் மூட்டுச்சில்லு அமைந்து மேலும் கீழுமாய் அசைகிறது.

முழங்கால் மூட்டின் உள்ளமைப்பு வித்தியாசமானது. பிணைப்பு நாண்களும் (cruciatel Ligament) மெனிஸ்கஸ் எனப்படும் குஷன்களும்  இந்த மூட்டில் உள்ளன. மூட்டை சுற்றி மிக மிருதுவான   எலும்புகள் அதிகம் இருக்கின்றன. மேலும் இந்த மூட்டில் சைனோவியம் என்கிற மூட்டுச் சுரப்பிப் படலம் அதிகம் உள்ளது. அதனால் அதை சார்ந்த நோய்களும் மூட்டில் வர வாய்ப்புண்டு. சிறுநீரகத்தில் ஏதாவது தொற்றுநோய் ஏற்பட்டால் கூட இந்த மூட்டில் வீக்கம் ஏற்படலாம். அவ்வளவு ஏன், நம் ஈறுகளிலோ தொண்டையிலோ பாதிப்பு ஏற்பட்டால் உடனே அதை எதிர்கொள்ள உடல், ‘காக்கும் எதிர்வினைப்பொருட்களை‘ (Antibodies) தோற்றுவிக்கும். அவை இந்த மூட்டில் வந்து தங்கி வலியை (reactive arthritis) ஏற்படுத்தும்.

நமது எலும்புக்கூட்டில் எலும்புகள் கூடி இருக்கிறதே அந்த இடம்தான் மூட்டுகள். அதில் அசையும் மூட்டு, அசையாமூட்டு என்று இருவகை   உண்டு. தலையில் எலும்புகள் கூடி இருக்கும் இடம் அசையா   மூட்டு. நாம் பேசும்போது கீழ்தாடை மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு. ஓடுகிறோம். விளையாடுகிறோம். வேலைகளைப் பார்க்கிறோம். இவைகளில் நமது அசையும் மூட்டுகள் அதிக பங்காற்றுகிறது. இந்த மூட்டுகளில் தோள்மூட்டு, முழங்கைமூட்டு, மணிக்கட்டு மூட்டு, இடுப்பு மூட்டு, முழங்கால் மூட்டு போன்றவை முக்கியமானவை. மூட்டுகளில் இத்தனை இருந்தாலும், நாம் முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியைத்தான் பெரும்பாலும் மூட்டுவலி என்று சொல்கிறோம்.

முழங்கால் மூட்டில் பாதிப்பு ஏற்பட்டால் மூட்டு வசதியாக மடிந்து கொடுக்காது. கடும் வலி ஏற்படும். வீக்கம் தோன்றும். இடுப்பில் உள்ள மூட்டு சரியாக இயங்கவில்லை என்றால் முதுகெலும்பின் மூலம் ஓரளவு அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். மூட்டுவலிக்கு முக்கியமான   காரணம் அதில் ஏற்படும் தேய்மானம். இந்த மூட்டுகளில் வழுவழுப்பான திசுக்களான   குருத்தெலும்பின் வழவழப்புத்தன்மை   குறைந்துவிட்டால் மூட்டை அசைக்கும்போது சோர்வும் வலியும் ஏற்படும். அதைத் தான் தேய்மானம் என்கிறோம். பெண்களுக்குத்தான் இத்தகைய தேய்மானம் அதிகம் ஏற்படுகிறது.

முன்பெல்லாம் 65 வயதுக்கு மேல் எட்டிப்பார்த்த மூட்டு தேய்மானம், இப்போது 35 வயதை கடக்கும்போதே தோன்றி தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. இதுபோன்ற வலியின்றி, நாம் நலமுடன் வாழவும் வழி உள்ளது. சரியான வாழ்க்கை முறை, உணவு முறை,உடற்பயிற்சி போன்றவைகளில் அக்கறை கொள்ள வேண்டும். அதையும் மீறி வலி வந்துவிட்டால் முறையான சிகிச்சை பெற்று மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

தடுக்கும் முறைகள்...

1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு (பச்சையாக) ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி தேன், ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினம் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5. இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை சாப்பிட வேண்டும். (இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும்). இதை தொடர்ந்து 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். பிறகு 3 வாரங்கள் கழித்து மீண்டும் 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். இதை சாப்பிடும்போது காரமான உணவு, புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

6. ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

உணவுப் பழக்கம்

1. வாழைப்பழம் அதிகமாக சாப்பிட வேண்டும்.
2. காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.
3. கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும் தவிர்க்க வேண்டியவை காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.

காது வலி தீர்க்க வீட்டில் இருக்கு மருந்து - உங்களுக்கு தெரியுமா..?


காது வலி பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான ஒன்று. இந்த காது வலி பெரும்பாலும் சளி  பிடிப்பதால் வரும்.  மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி காரணமாகவும் வரலாம். அப்படி  காதுவலி வந்தால் உடனே காதுக்குள்  எதையாவது போட்டு நுழைக்க கூடாது.


இதனால் காதுக்குள் கிருமித்தொற்று தான் ஏற்படுமே தவிர சரியாகாது. மேலும் இந்த காதுவலி இரவிலேயே வருவதால் என்ன  செய்வதென்று  தெரியாமல் விழிக்கும் நேரத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய வீட்டு மருத்துவம் நமக்கு கைக்கொடுக்கும். காது  வலி வந்தால் தேங்காய்  எண்ணெயை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு மிதமான சூட்டில் காதில் விட்டால் காதில் இருக்கும்  புண் ஆறி வலி குறையும்.

தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரைக்குடித்தால் காது வலி குறையும். தாழம்பூவை நெருப்புத் தணலில் காட்டி கசக்கி  சாறு பிழிந்து  அதில் சில துளிகளை காதில் விட்டால் காது வலி காதில் தோன்றும் கட்டி ஆகியவை குணமாகும். கொஞ்சம் நல் லெண்ணெயில் ஒரு கிராம்பை  போட்டு சூடு செய்து பின் அந்த எணணெயை வலி உள்ள காதில் விட்டால் விரைவில் வலி கு றையும்.

சுக்கு, மிளகு, பெருங்காயம் ஆகியவைகளை அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து  குளித்து  வந்தால் காது இரைச்சலும் அகலும். கரிசலாங்கண்ணி சாறு, நெல்லிக்காய் சாறு இரண்டையும் பால் மற்றும் அதிமது ரப்பொடி சேர்த்து தைலம் செய்து  தலைக்கு தேய்த்து குளித்து வர காது நோய் குணமாகும்.

அலர்ஜிக்கு 1000 காரணங்கள்...! - தெரிந்துகொள்ளுங்கள்




ஒவ்வாமை... இது எப்போது வேண்டுமா னாலும் யாருக்கும் வரலாம். நேற்று வரை நன்றாக இருந்த ஒருவருக்கு இன்று திடீரென ஏதோ ஒன்று  அலர்ஜியாகி அவதியைக் கொடுக்கலாம்.


அலர்ஜிக்கான காரணங்கள் ஆயிரக்கணக்கானவை. சின்ன தூசியிலிருந்து, சூரிய ஒளி வரை எது, யாருக்கு,  எப்போது அலர்ஜியை தரும் என்று சொல்வதற்கில்லை. பரவலாக காணப்படுகிற சில வகையான ஒவ்வாமை பற்றியும் அவற்றின் அறிகுறிகள் மற்றும்  தீர்வுகள் பற்றியும் விரிவாகப் பேசுகிறார் சரும மருத்துவ நிபுணர் தலத் சலீம்.

‘‘கல்லூரியில் படிக்கிற மாணவி அவர். ‘ஒரு வாரமா கையெல்லாம் பயங்கர அரிப்பு டாக்டர்... அங்கங்க சிவந்து போயிடுது. ராத்திரியில இந்த அரிப்பு  ரொம்ப அதிகமாகுது. இத்தனைக்கும் நான் புதுசா எந்த காஸ்மெட்டிக்ஸும் யூஸ் பண்ணலை. பாத்திரம் தேய்க்கிற பவுடர்லயோ, துணி சோப்புலயோ  கூட கை வைக்கலை. திடீர்னு ஏன் இப்படி ஆகணும்? நானும் ஏதேதோ கிரீம், ஆயின்மென்ட்டெல்லாம் ட்ரை பண்ணிப் பார்த்துட்டேன். சரியாகலை’  என்றார்.

அந்தப் பெண்ணின் கைகளைப் பரிசோதித்த போது, வலது கையில் 2 விரல்களிலும், இடது கையில் ஒரு விரலிலும் சிவந்து, அலர்ஜியாகி இருந்தது  தெரிந்தது. அந்தப் பெண்ணிடம் நீண்ட நேரம் பேசியதில் அவரது திடீர் சரும அலர்ஜிக்கான காரணம், அவர் புதிதாக ஓட்ட ஆரம்பித்திருக்கிற டூவீலர்  என்பதும், அதன் கைப்பிடியில் உள்ள ஸ்டீல் பகுதியும்தான் என்று தெரிந்தது.

அடிக்கடி டூ வீலரின் கைப்பிடியைத் தொட்டதால் உண்டான அலர்ஜி அது. வண்டி ஓட்டும் போது கைகளுக்கு கிளவுஸ் அணிந்து கொள்ளச்  சொல்லிவிட்டு, அலர்ஜியை குறைக்க சில மருந்துகளையும் பரிந்துரைத்ததில், சில நாட்களில் பிரச்னை சரியானது. இதைத் தான் ‘கான்டாக்ட்  டெர்மாடைட்டிஸ்’ என்கிறோம். சருமத்துக்கு ஒவ்வாத ஏதோ ஒரு அந்நியப் பொருள் அதன் மீது படுவதன் விளைவாக, அரிப்பும் தடிப்பும் ஏற்படும்.  சருமத்தின் மேல் லேயரான எபிடெர்மிஸ் மற்றும் அதற்கடுத்த லேயரான டெர்மிஸில் உள்ள திசுக்களில் இப்பாதிப்பு தென்படும்.

அறிகுறிகள்

அரிப்பு, வலி, எரிச்சல், சிவந்து போதல், தடிப்பு, நடுவில் வெள்ளைப் புள்ளியுடன் கூடிய சிவந்த, வட்ட வடிவத் தடிப்புகள் போன்றவை தென்படும். இது சில நிமிடங்களில் இருந்து, சில மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒவ்வாமைக்குக் காரணமான பொருளுடன் மறுபடி தொடர்பு ஏற்படாத வரை  பிரச்னை இருக்காது. கான்டாக்ட் டெர்மாடைட்டிஸ் எனப்படுகிற இந்தப் பிரச்னைக்கு கிட்டத்தட்ட  30 ஆயிரம் காரணிகள் இருப்பதாக  சொல்லப்பட்டாலும், அவற்றில் 25 காரணிகள்தான் பெரும்பாலான அலர்ஜிகளை ஏற்படுத்துகின்றன.

அலர்ஜியின் வகைகள்

உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடை, உறைவிடம் வரை எது வேண்டுமானாலும் ஒருவருக்கு  ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.  உதாரணத்துக்கு... முட்டை, பால், பாதாம், இறால், சீஸ், மகரந்தம் மற்றும் குறிப்பிட்ட சில மருந்துகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.  சிலருக்கு  வாட்ச், கவரிங் நகைகள், நிக்கல், தங்கம், குரோமியம் உள்ளிட்ட உலோகங்கள் கூட ஒவ்வாமையை உருவாக்கலாம்.

கெமிக்கல் உபயோகத்தாலும் ஒவ்வாமை வரலாம். ஆல்கஹால், டர்பன்டைன், அசிட்டோன், கீடோன், லேட்டக்ஸ், மண்ணெண்ணெய் உள்ளிட்ட  ரசாயனங்களுடன் தொடர்புடைய வேலையில் இருப்போருக்கு இந்த அலர்ஜி வரலாம். வீட்டில் பாத்திரம் தேய்க்கவோ, துணி துவைக்கவோ  உபயோகிக்கிற சோப் மற்றும் டிடர்ஜென்ட் கூட ஒவ்வாமையைத் தரலாம். பியூட்டி பார்லர்களில் வேலை பார்க்கிற பெண்களுக்கு, சோடியம் லாரல்  சல்ஃபேட் உள்ளிட்ட குறிப்பிட்ட சில அழகுசாதனங்களைக் கையாள்வதன் மூலம் ஒவ்வாமை வரலாம்.

போட்டோ கான்டாக்ட் டெர்மடைட்டிஸ் என்பது  துணியால் மூடப்படாத சருமப் பகுதிகளில் உண்டாகக் கூடிய ஒருவித அலர்ஜி. எளிமையாகச்  சொல்வதானால் சூரிய வெளிச்சமும், யுவி கதிர்களும் சருமத்தில் பட்டு, அதன் விளைவாக ஏற்படுகிற ஒவ்வாமை இது. சிவந்த நிறத் தடிப்புகள்,  செதில் செதிலான தோற்றம், சின்னச் சின்ன கட்டிகள் போன்றவை இதன் அறிகுறிகள்.

எப்படிக் கண்டுபிடிப்பது..?

உணவுகளால் ஏற்படுகிற அலர்ஜியை கண்டுபிடிக்க ஒரு எளிமையான வழி உள்ளது. ஒவ்வாமை ஏற்படுகிற அன்று என்னவெல்லாம் சாப்பிட்டீர்கள்  எனப் பட்டியல் போட்டு வையுங்கள். இரண்டாவது முறை ஒவ்வாமை ஏற்படும்போதும் அன்றைய தினம் சாப்பிட்ட உணவுகளைப் பட்டியலிடுங்கள்.  இரண்டு நாளைக்கும் பொதுவான உணவு ஏதேனும் உண்டா எனப் பாருங்கள். மூன்றாவது முறையும் அப்படி இருந்து, மூன்று முறைக்கும் பொதுவான  உணவு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதுதான் உங்கள் அலர்ஜிக்கான காரணமாக இருக்கும்.

மிகவும் குறைந்த அளவு ஒவ்வாமை என்றால், ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். பிளெயின் கேலமைன் லோஷன் தடவலாம். அரிப்பும் எரிச்சலும்  சிவந்து போதலும் அதிக மானால், மருத்துவரிடம் ஆயின்மென்ட், ஆன்ட்டி ஹஸ்டமைன் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். எதற்கும் கேட்காமல்  தொடரும் அலர்ஜி என்றால் சரும மருத்துவரிடம் முழு ஆலோசனை மேற்கொள்வதே சிறந்தது. அவர் அலர்ஜிக்கான காரணத்தைக் கண்டறிய ரத்தப்  பரிசோதனையோ, பேட்ச் டெஸ்ட்டோ செய்யப் பரிந்துரைப்பார். அலர்ஜிக்கான காரணம் தெளிவாகத் தெரிந்ததும், அதற்கேற்ப சிகிச்சை ஆரம்பிக்கப்படும்.

தடுப்பு முறைகள்...

வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும். குறிப்பாக 11 முதல் 3 வரையிலான வெயிலைத் தவிர்க்கவும். பெரும்பாலான சன் ஸ்கிரீன் கிரீம் மற்றும்  லோஷன்களில் பிஏபிஏ என்கிற கெமிக்கல் இருக்கும். சூரிய வெளிச்சத்தால் அலர்ஜி ஏற்படுகிறவர்கள், அதைத் தவிர்க்க வேண்டும். பிஏபிஏ  கலப்பில்லாத சன் ஸ்கிரீனை கவனமாகத் தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும்.

சருமம் முழுவதும் மறைகிற மாதிரி உடையும், தலைக்குத் தொப்பியும் அணிவது பாதுகாப்பானது. கெமிக்கல் தொடர்பான வேலையில் இருப்போர்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். உதாரணத்துக்கு கைகளுக்கு கிளவுஸ் அணிவது, பாதுகாப்பான உடை அணிவது,  கெமிக்கல் பாதிப்பைத் தடுத்து நிறுத்தும் கிரீம் உபயோகித்து வேலை பார்ப்பது போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும்.  டிடர்ஜென்ட், சோப்  போன்றவற்றை வைத்து வீட்டுவேலை செய்கிற பெண்களும், ஷாம்பு, கலரிங், பிளீச் போன்றவற்றைக் கையாளும் பார்லர் வேலையில் ஈடுபடுகிற  பெண்களும் கைகளுக்கு கிளவுஸ் அணிய வேண்டும்.

வேலை செய்து முடித்ததும், கைகளை நன்கு கழுவித் துடைத்துவிட்டு, மாயிச்சரைசர் தடவ வேண்டும்.  அலர்ஜிக்கு காரணமான உலோகங்களை  உபயோகிப்பதைத் தவிர்க்கவும். சில நேரங்களில் சிலவித சத்துக் குறைபாடுகள் கூட ஒவ்வாமைக்கு இடம் கொடுக்கலாம். அதைத் தெரிந்து கொண்டு,  ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸும், வைட்டமின் ஏ, சி, இ, டி மற்றும் பி காம்ப்ளக்ஸ் உள்ள மல்ட்டி வைட்டமின் மருந்து களை எடுத்துக் கொள்வதன் மூலம்  இதிலிருந்து தப்பிக்கலாம். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தினமும் குறிப்பிட்ட அளவு வைட்டமின் சி மற்றும் டி சத்து நிறைந்த  மாத்திரைகளை எடுத்துக் கொள்வதும் நல்லது. நாள்பட்ட ஒவ்வாமையாகத் தெரிந்தால்,  சரும மருத்துவரைப் பார்த்து ஆலோசனையும்
சிகிச்சையும் எடுப்பதே சிறந்தது.’’

Thursday, 5 June 2014

நீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலை...! - தெரிந்துகொள்வோம்



பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல கொய்யாவோடு சேர்ந்த இலையும் மணம் பெறும். கொய்யாபழம் என்றதும் அதனுடைய  இலைகளையும் சேர்த்து தான் நமக்கு நினைவு வரவேண்டும்.

 அந்த அளவுக்கு கொய்யா இலை மருந்தாக பயன்படுகிறது.

நீரிழிவுநோயால்  அவதிபடுபவர்கள் அனைவருக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது கொய்யா இலை.

கொய்யாஇலை நீரிழிவுக்கு மட்டும் பயன்படுவது அல்ல., பல அற்புதமான குணாதிசயங்களை கொண்டுள்ளது. காயங்கள், பல் வலி ஈறு வீக்கம்  வயிற்றுபோக்கு, மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. கொய்யாஇலை கிருமிகளை அழித்து உடலை கட்டுக்குள்கொண்டு வந்துவிடும் சிறந்த  உணவாகும். இதயநோய், புற்றுநோய், அல்சைமர்நோய், கீல்வாதம், தசைபிடிப்பு போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

தேவையான கொய்யா இலைகளை சேகரித்து தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட  வேண்டும். பின்னர் இறக்கி குளிரவைக்கவும். இதை வாய் கொப்பளிக்க பயன்படுத்தலாம். மேலும் பெண்கள் தங்கள் உறுப்புகளை கழுகவும் பயன்படுத்தலாம். ஏனெனில் நோய் கிருமிகளை அழிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

கொய்யா இலையின் பயன்பாடுகள்:

நீரிழிவை கட்டுப்படுத்தும்: கொய்யாஇலை ஆரோக்கியம் தரும் சிறந்த உணவு என்று ஜப்பான் நாடு உறுதிப்படுத்தியுள்ளது. இது நிழிவுநோயை தடுக்க உதவுகிறது. கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரில் சுக்ரோஸ் மற்றும் மேல்டோஸ் ஆகிய இரண்டு விதமான சர்க்கரையை உறிஞ்சம் தன்மை கொண்டது. மேலும் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த விளைவை பற்றி நியூட்ரீஷன்- மேட்டாபாலீஷம் ஆகிய இரண்டு ஆய்வுகளும் விரிவுபடுத்தியுள்ளது.

குறுகிய கால பயன்கள்:  வெள்ளை சாதத்தை உட்கொண்ட பின் கொய்யாஇலை தேநீரை பருகினால் ரத்தத்தில் அதிகமாகக்கூடிய சர்க்கரை அளவு 30,  90 மற்றும் 120 நிமிடத்தில் குறைக்கக்கூடியதட தன்மையை கொண்டுள்ளது.  

நீண்ட கால பயன்கள்: இந்த கொய்யாஇலை தேநீரை நாம் தொடர்ந்து 12 வாரங்கள் பருகினால் தொடங்கும் போது இருந்த இரத்தத்தில் கலந்துள்ள  சர்க்கரையின் அளவு வெகுவாக குறைந்திருக்கும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கொய்யா இலை தேநீரை பருகக்கூடாது.

உஷ்ணம் குறைக்கும் வெந்தய - மோர் பானம்...!

உஷ்ணம் குறைக்கும் வெந்தய - மோர் பானம்:-


தேவையான பொருட்கள் :

  • வெந்தயம்- 1 கப் 
  • மிளகு-1/4கப் 
  • சுக்கு-சிறு துண்டு 
  • மோர் - 1 கப்


செய்முறை :

• வெந்தயம், மிளகு(4:1) சுக்கு சேர்த்து வெறும் கடாயில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.

• ஒரு டம்ளர் மோருடன் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்து அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.

• கோடை காலத்தில் இதை அவ்வப்போது அருந்திவர உஷ்ணம் குறையும்.

இரவில் பால் குடிக்கலாமா..? - தெரிந்துகொள்ள இதப்படிங்க...!


டாக்டர்களில் சிலர் இரவில் பால் சாப்பிடலாம் என்கிறார்கள். இன்னும் சில டாக்டர்கள் இரவில் பால் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். எது சரி?

'இரவில் தூங்கச் செல்லும் முன்பு யார், யார் பால் சாப்பிடலாம், யார், யார் பால் சாப்பிடக்கூடாது என்று தெளிவான விதிமுறைகள் உள்ளன.

என்ன சாப்பிட்டாலும் உடம்பு குண்டாகமாட்டேங்குதே என்று வருத்தப்படுகிறவர்கள், இரவு தூங்கச் செல்லும் முன்பு தாராளமாக ஒரு டம்ளர் பால் சாப்பிடலாம்.

வளரும் குழந்தைகள் நல்ல உடல் வளர்ச்சி பெற இரவில் தூங்கச் செல்லும் முன்பு, ஒரு டம்ளர் பால் சாப்பிடலாம்.

பால் என்பது ஒரு வகையில் மயக்கத்தைக் கொடுக்கிற பானம். வயதானவர்கள் இரவில் சாப்பிட்டால் நன்றாகத் தூங்கலாம்.

ஆனால், உடலில் கொழுப்புச் சத்து மிகுந்தவர்கள், உடல் இளைக்க வேண்டும் என்று நினக்கிறவர்கள், உடல் உழைப்பு நிறய செய்யாதவர்கள் இரவில் பால் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

வெற்றிலை போடுவது ஏன்..? - என்பதற்கான காரணம் இதோ உங்களுக்காக...!




பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

Tuesday, 3 June 2014

சூடாக காப்பி, டீ குடிப்பவரா...? - இதப்படிங்க...!




சூடாக குடிப்பவர் என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்!

“மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது’ என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.”

இந்த ஆய்வு முடிவை, சர்வதேச நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

காபி, டீ மற்றும் சில வகை பானங்களை சூடாக சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர்.

சிலர் தான், நன்றாக சூடு ஆறிய பின் குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இது ஒரு வகையில் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிகிறது.

தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ் நாட்டில் தான் காபி குடிக்கும் பழக்கம் பரவலாக உள்ளது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எடுத்துக்கொண்டால், எவருமே டீ குடிப்பதை தான் விரும்புகின்றனர்.

காலையிலும் டீ குடித்தால் தான் பத்திரிகை யையே படிக்க தோன்றும் சிலருக்கு; இன்னும் சிலருக்கு படுக்கையிலேயே டீ வந்தாக வேண்டும். “பெட் டீ’ குடித்தபின் தான் திருப்பள்ளியெழுச்சி நடக்கும். அந்த அளவுக்கு டீ மோகம் உள்ளது.

“காலையில் எழுந்தாலும் சரி, மற்ற நேரங்களிலும், சூடா ஒரு டீ குடித்தால் போதும்… உடல் இன்ஜினுக்கு பெட்ரோல் போட்ட மாதிரி; அப்புறம் தான் வேலையே ஓடும்’ என்று பலர் குறிப்பிடுவதை கேட்டிருப்பீர்கள்.

ஆபீசில் வேலை செய்வோரும், தொழிற் சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களும் மணிக்கொரு தரம் டீ குடித்தால் தான் சோர்வு நீங்கியது போல உணர்வர்; தம்மாத்தூண்டு டம்ளரில் கொடுத்தாலும், அதை குடித்தால் தான் சுறுசுறுப்பே வரும்.

அதிக சூடாக டீ குடிப்பதால் ஏற்படும் உடல் கோளாறு பற்றி கடந்த சில ஆண்டாக மேற்கொண்டு வந்த ஆய்வில் இந்திய நிபுணர்கள் ஆபத்தான சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர்.

ஆய்வு முடிவுகளில் அவர்கள் கூறியிருக்கும் சில தகவல்கள்:

* வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது; குறிப்பிட்ட அளவில் தான் சூட்டை அது தாங்கும். அதிகமானால், அதன் சுவர் அரிக்கத் துவங்கி விடும்.

* அதிகமான சூட்டுடன் டீ குடித்தால் , உணவுக்குழாய் சுவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன; அதன் சுவர்கள் அரிக்கப்பட்டு, திசுக்கள் பலவீனம் அடைகின்றன.

* இதனால், சுவர்ப்பகுதியில் உணவுக்குழாய் கேன்சர் கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளது. மற்றவர்களை விட, சில பழக்க வழக்கங்களை கடைபிடிப்பவர்களுக்கு கேன்சர் ஆபத்து அதிகம்.

* பான் பராக், புகையிலை போன்றவற்றை சுவைப்பவர்களுக்கு 1.1 மடங்கு கேன்சர் வாய்ப்பு அதிகம்.

* பீடி குடிப்போருக்கு 1.8 மடங்கு கேன்சர் ஆபத்து உள்ளது.

* சிகரெட் பிடிப்போருக்கு இரண்டு மடங்கு கேன்சர் அபாயம் உள்ளது.

* மது குடிப்போருக்கு கேன்சர் அபாயம் 1.8 மடங்கு.

* அதிக சூட்டுடன் டீ குடிப்போருக்கு, கேன்சர் வரும் வாய்ப்பு இவர்களை விட, நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.

* வெயில் பருவத்தை விட குளிர்காலத்தில், குளிர் பிரதேசத்தில் உள்ளவர்கள் சூடாக டீ குடித்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம்.

* சூடான பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு ஓரளவு பாதிப்பு வாய்ப்பு குறைவு தான்.

இவ்வாறு ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனை நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இவர்களின் ஆய்வு முடிவுகளை சர்வதேச நிபுணர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

டாடா நிபுணர்கள்,தங்கள் ஆய்வுக்கு காஷ்மீரில் 1,500 பேரிடம் சர்வே எடுத்துள்ளனர். அவர்களில் அதிக சூடாக டீ குடிப்போருக்கு கேன்சர் ஆபத்து உள்ளதை உறுதி செய்தனர்.

ஆண்டுக்கு, இப்படிப்பட்டவர்களில் சராசரியாக 800 பேருக்கு கேன்சர் வருவதும் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் சர்வதேச கேன்சர் ஆராய்ச்சி இதழ், “இன்டர்நேஷனல் கேன்சர் எபிடமாலஜி’யில் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

அது சரி, நீங்கள் அதிக சூடாக டீ குடிப்பவரா? அப்படீன்னா, இனி குடிக்க மாட்டீங்கல்ல.