Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Wednesday, 16 July 2014

ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்..!



பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக்கிறாரா, சந்தோஷமாக இருக்கிறாரா, எதையாவது நினைத்துக் கொண்டிருக்கிறாரா, அவரை நம்பலாமா, கூடாதா, கடவுள் நம்பிக்கை கொண்டவரா .. இப்படி ஏகப்பட்ட விஷயங்களை ஒரு பெண்ணின் முகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாமாம்.

ஆனால் ஆண்கள் முகத்தைப் பார்த்தால் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாதாம். காரணம் ஆண்களின் முகத்திற்கு ஏகப்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டும் திறமை கிடையாதாம்.

இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக ஒரு ஆயிரம் ஆண், பெண்களை எடுத்துக் கொண்டனர். அவர்களின் புகைப்படங்களை இணையதளத்தில் இடம் பெற வைத்தனர்.

ஏற்கனவே அவர்கள் குறித்த தகவல்களை வாங்கி வைத்துக் கொண்டனர். இது தவிர புகைப்படங்களைப் பார்த்து கருத்து சொல்வோருக்காக கேள்விகளையும் தயார் செய்தனர்.

பின்னர் புகைப்படங்களை இணையதளத்தில் பிரசுரித்து, அந்தப் பெண்களின் முகங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேள்வி கேட்டிருந்தனர். இந்த இணையதளத்திற்கு கிட்டத்தட்ட 6500 பேர் வருகை தந்து அதில் இடம் பெற்றிருந்த பெண்களின் முகத்தைப் பார்த்து அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள், அவர்களைப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறது என்பதைத் தெரிவித்திருந்தனர்.

Saturday, 7 June 2014

குரு பெயர்ச்சி காலத்தில் யாரைப் பணிவது..? - நவகிரக குருவையா, ஞான குருவையா..?

சமீப காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர் களில் 99  சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள். அதே நேரத்தில் நவகிரகங்களில் ஒருவரான குரு பக வானை வழிபடுவோரின்  எண்ணிக்கை மிகக் குறைவு.

குரு பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்வது  சரிதானா?இவர்கள் இருவருக்கும் உள்ள  வித்தியாசம் என்ன? தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள்.  அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர். நவகிரகங்களில்  ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு. திசையின் அடிப்படை யிலேயே இருவரும் வேறுபடுகின்றனர்.


அதே போல வியாழனுக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கொண்டைக் கடலை. தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற  ஆடையை  உடுத்தியிருப்பவர். (‘ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம்...’ என்று உரைக்கிறது வேதம். ஸ்வேதம் என்றால் வெள்ளை நிறம் என்று  பொருள்.) உண்மை  நிலை இவ்வாறு இருக்க வியாழனுக்கு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள், ஞான குருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலைகளும் சாற்றுகிறார்கள். இது,  தியானத்தில் ஆழ்ந்திருக்கும்
தட்சிணாமூர்த்திக்கு தொல்லை கொடுப்பது போல் அமைகிறது. ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை  முக்கியமில்லை.  வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தெளிவாகச் சொல்வதானால், வியாழக் கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குருவாக ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே   தட்சிணாமூர்த்தி. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார். இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று  போற்றப்படுகிறார்.  அதே நேரத்தில் தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர் வியாழன்  என்று அழைக்கப்படும் ப்ருஹஸ்பதி.  ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர்.

ஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. வியாழ பகவானுக்கு உரிய அதிதேவதை மருத்வந்தன்  என்றும், ப்ரத்யதி  தேவதை பிரம்மா என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம். எந்த விதத்திலும் தட்சிணாமூர்த்தியோடு வியாழ (கு ரு) பகவானை சம்பந்தப்படுத்தி  வேதத்திலோ, புராணங்களிலோ சொல்லப்படவில்லை. இந்த நிலையில் வியாழனுக்கு உரிய பரிகார த்தை தட்சிணாமூர்த்திக்கு செய்ய வேண்டிய  அவசியம் என்ன?  இந்தக்குழப்பத்திற்கு என்ன காரணம்? ஞானகுருவாம் தட்சிணா மூர்த்தியை வழிபடும் வகையில் பள்ளிக் குழந்தைகளும் இந்த  ஸ்லோகத்தினை எளிதாகச் சொல்கிறார்கள்:

“ குருப்ரஹ்மா: குருர்விஷ்ணு: குரு தேவோ மஹேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மைஸ்ரீ
குருவே நம: ’’

- இந்த ஸ்லோகத்தில் இடம்பெறும் ‘குரு’ என்ற வார்த்தையை வைத்து குரு பகவானும் இவரும் ஒன்று என நினைத்திருக்கலாம். குரு  பகவானுக்கு  உரிய பரிகாரத் தலமாக ஆலங்குடி தட்சிணாமூர்த்தி ஸ்வாமி பிரபலம் அடைந்திருப்பதும் கூட காரணமாக இருக்க லாம். இறைவன் இட்ட பணியைச்  செய்பவர்களே நவகிரகங்கள். ஒன்பது கோள்களுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு. இவர் களில் சுபகிரகமாகவும், வேண்டுகின்ற நன்மையைச்  செய்பவராகவும் விளங்குபவர் வியாழ (குரு) பகவான். குரு பார்க்க கோடி நன் மை என்பது பழமொழி. ஜென்ம ராசியை குரு பார்த்தால் நினைத்த  காரியம் கைகூடும்.

இந்த உலகத்தில் நாம் ஆனந்தமாய் வாழ்ந்திடத் தேவையான அனைத்து சுகங்களையும் அருள்பவர் குரு பகவான். குரு பலம் இருந் தால் திருமணம்  நடைபெறும். குருவின் அனுக்ரகம் இருந்தால் பிள்ளைப்பேறு கிட்டும்.  திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம்  கிட்டவும், உயர் கல்வியில் இடம்  பிடிக்கவும் குருவின் அருள் வேண்டி பரிகாரம் செய்ய விழைகின்றனர். அவ்வாறு பரிகாரம் செய்ய  விரும்புபவர்கள் இந்த குரு பெயர்ச்சி நாளிலும்,  இனி வரும் வியாழக்கிழமைகளிலும் நவகிரகங்களில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும்  வியாழ பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றியும்,  கொண்டைக் கடலை மாலை அணிவித்தும் வழிபடலாம்.

கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்யம் செய்து, வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். வியாழன்தோறும் விரதம் இருந்து  வடக்கு முகமாய்  நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம்.அதே நேரத்தில் ஞானமார்க்கத்தை நாடும் அன்பர்கள் தட்சிணாமூர்த்தியை  வழிபடலாம். வியாழக்கிழமைதான்  என்றில்லை, எந்த நாளிலும் அவரை வழிபடலாம். மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும் எந்த நேரத்தி லும் தட்சிணாமூர்த்தியின் சந்நதியில் அவருக்கு  முன்பாக அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுங்கள். குழப்பங்கள் அகன்று  மனம் தெளிவடையும். இந்த குரு பெயர்ச்சி நாளன்று ஞான குரு  வேறு, நவகிரக குரு வேறு என்ற உண்மையைப் புரிந்துகொள் வோம். அந்தந்த தேவதைகளுக்கு உரிய பரிகாரத்தைச் சரியாக செய்து முழுமையான  பலனை அடைவோம்.

Friday, 6 June 2014

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா..? - எச்சரிக்கை...!



உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா..?

கட்டாயம் படிக்க வேண்டியது அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்...!!!

எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது.

எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.

பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள்.

அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.

அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்...

Thursday, 5 June 2014

மும்பை பெண் கண்டக்டர் ஆடையை கிழித்து மானப்பங்கம் : வேடிக்கை பார்த்த பயணிகள்..!




தானே: மும்பை அருகே அரசு போக்குவரத்துக் கழக பேருந்தின் பெண் கண்டக்டரை பயணி ஒருவர் அடித்து உதைத்து, ஆடையை கிழித்து மானப்பங்கம் செய்ததை மற்ற பயணிகள் வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையை அடுத்துள்ள தானே மாவட்டத்தில் அமைந்திருக்கும் கல்யாணிலிருந்து  பன்வேல் செல்லும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இன்று காலை 8.30 மணி அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்றது. அந்த பேருந்தில் 34 வயது பெண் கண்டக்டர், அப்பொழுதுதான்  தனது முதல் டிரிப் பணியை தொடங்கினார்.

இங்குள்ள பேருந்துகளில், பயணிகள் பின்பக்கமாக ஏறி, முன்பக்கமாக இறங்குவதுதான் நடைமுறையாக உள்ளது. இந்நிலையில் 30 வயதுடைய அபிஷேக் சிங் என்பவர் வழியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணிகள் வழக்கமாக ஏறும் பின்பக்க வாசலுக்கு பதிலாக முன்பக்கமாக ஏறியுள்ளார். அவர் அவ்வாறு ஏறியதை பார்த்த டிரைவர் சத்தம் போட்டுள்ளார். ஆனால் அவரை அபிஷேக் சிங் மரியாதைக்குறைவாக பேசியுள்ளார்.

இதனையடுத்து பெண் கண்டக்டர் அபிஷேக் சிங்கை பார்த்து, ' உனது தந்தை வயதுடைய டிரைவரை மரியாதைக் குறைவாக பேசுகிறாயே...?' என கண்டித்து, பேருந்தைவிட்டு இறங்குமாறு கூறியுள்ளார். உடனே ஆத்திரமடைந்த அபிஷேக் சிங், அந்த பெண் கண்டக்டரை தாக்கி, ஆடையை கிழித்து மானப்பங்கப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் கண்டக்டர் கூறுகையில், ' பேருந்திலிருந்து இறங்குமாறு நான் கூறியதும் அந்த நபர் எனது காலை பிடித்து பேருந்திலிருந்து கீழே இழுத்து போட்டார். பின்னர் எனது ஆடைகளை கிழித்து என்னை அடித்து உதைத்தார். எனது பேருந்துக்கு பின்னால் மற்றொரு பேருந்து நின்றுகொண்டிருந்தது. என்னை அடித்து உதைத்தை பார்த்து, அந்த பேருந்திலிருந்த பெண் கண்டக்டர் என்னை காப்பாற்ற ஓடிவந்தார். ஆனால் அவரையும் அந்ந நபர் அடித்து தாக்கினார். இந்த சம்பவம் நடந்தபோது ஏராளமான பயணிகள் அங்கு நின்றனர். ஆனால் அவர்கள் வேடிக்கை பார்த்தனரே தவிர என்னை காப்பாற்ற வரவில்லை.

பின்னர் அங்கு ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தை பார்த்து, அங்கு அப்போதுதான் வந்த சில மாணவர்கள்தான் ஓடிவந்து என்னை  காப்பாற்றி,அந்த நபரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்' என நடந்ததை நடுக்கத்துடன் விவரித்தார். இந்த சம்பவத்தில் பெண் கண்டக்டரை பயணி ஒருவர் மானப்பங்கப்படுத்தியது ஒருபுறம் வேதனையான சம்பவம் என்றால், அதனை தடுக்க முயற்சிக்காமல் மற்ற பயணிகள் வேடிக்கை பார்த்தது அதைவிட கொடுமையாக உள்ளது.

Sunday, 23 March 2014

செருப்பு வாங்கும்போது கவனிக்க வேண்டியவை...!



தேர்ந்தெடுக்கும் போது, அழகு மற்றும் அளவு ஆகியவை பொருத்தமாக இருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும்.

செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து, நான்கைந்து அடி நடந்து பார்த்து, சரியானதாகவும், நடப்பதற்கு வசதியாகவும் இருந்தால் தான் வாங்க வேண்டும். அதிக இறுக்கமான செருப்புகளை அணியக் கூடாது. விலை குறைந்த செருப்புகளை விட, விலை கூடுதல் என்றாலும், தரமான, பாதங்களுக்கு ஏற்ற செருப்புகளையே வாங்க வேண்டும்.

தோல் செருப்புகளை, தண்ணீரில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நனைத்தால், செருப்பின் ஆயுளும் குறையும், பாதங்களுக்கு பொருத்தம் இல்லாமல் அழகும் கெட்டு விடும். தரையில் வழுக்காமல், கிரிப் உள்ள செருப்புகளையே பயன்படுத்த வேண்டும். மேலும், அழுத்தம் இல்லாமலும், அதிக கனமாக இல்லாமலும், மிருதுவாகவும் செருப்பு இருக்க வேண்டும்.

மழைக்காலத்தில், ரப்பர் செருப்புகளை அணியக் கூடாது. ஏனென்றால், அது நடக்கும்போது, வழுக்கி விடுவதுடன், துணிகளில் சேற்றை வாரி இறைத்து விடும். வயதான பெண்கள், வாதநோய் ஏற்பட்டவர்களும், குளிரான
இடங்களிலும், ஈரத்தன்மைஉள்ள இடங்களிலும், செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது.

பொதுவாக பெண்களின் பாதங்கள் மென்மையானவை. ஆதலால், ஒருபோதும் இறுக்கமான செருப்புகளையோ, ஷூக்களையோ அணியக் கூடாது. அப்படி அணிந்தால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.

பிளாஸ்டிக் செருப்புகளை விட, தோல் செருப்புகளும், ஷூக்களுமே சிறந்தவை. கால்களில் நோய் உள்ளவர்கள், உடல் பலம் குறைந்தவர்கள் போன்றோருக்கு, பிளாஸ்டிக் செருப்புகளால் உடலில் அதிக உஷ்ணம் ஏறி, சோர்வு ஏற்படும். கண்களும் எரிச்சலடையும். மேலும், அதிக வியர்வையும் தோன்றும். எனவே, பிளாஸ்டிக் செருப்புகளை தவிர்த்தல் நல்லது.

எவ்வளவு அவசரமாக இருந்தாலும், செருப்புகளையும், ஷூக்களையும் துடைத்து, உள்ளே ஏதாவது இருக்கிறதா? என பார்த்து அணிய வேண்டும். செருப்பு, ஷூக்களுக்கு அடிக்கடி பாலிஷ் செய்ய வேண்டும். இதனால், செருப்புகளுக்கு அழகும், ஆயுளும் கிடைக்கும். பாலிஷ் செய்யும் போது, செருப்பில் இருக்கும் ஈரத் தன்மையும் நீங்கி விடும்.

உங்களுக்கு செருப்பு வாங்குவதற்காக, அளவை கொடுத்து, இன்னொருவரை அனுப்பாதீர். நீங்களே சென்று தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது.அடுத்தவர்களின் செருப்புகளை அணியக் கூடாது. இதனால், தோல் நோய் ஏற்படும். ரப்பர், பிளாஸ்டிக் செருப்புகளை அணியும் பெண்கள், அவற்றை தினமும் கழுவி சுத்தம் செய்து உபயோகிக்க வேண்டும்.

சொத்து ஆவணங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களும்...!

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இருநபர்களுக்கு இடையிலா ன கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சி யின் முக்கிய  அளவுகோலாக பார்க்கப்படு ம் வகையில் முக்கியத்துவம் பெற்று விட்டது.

.
எனவேதான், இத்தகைய பரிமாற்றங் களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடு த்து வருகிறது. மன்னராட்சி காலத் தில் இருந்தே சொத்து  பரிமாற்றங்க ளை ஆவணத்படுத்துவது தொடர்பான பணிகள் நடை பெற்றுள்ளன.
.
கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங் கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும்  மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன. இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண் டு பதிவுத் துறை  ஏற்படுத்தப்பட்டது . 1899 ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறை வேற்றப்பட்டது. இத னை  தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்ற ப்பட்டது.  
.
இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்த டுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப் பட்டு வருகின்றன.
.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண் டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம்  ஆவணங்கள் பதிவுசெய்யபடுகின்றன. இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவண ங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டு கள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே  சார்ந் திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல  மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங் கள் எழுதும் முறையில் பல் வேறு மாற்றங்கள்  ஏற்பட் டுள்ளன.
.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவண ங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும்  விற்பவரும்  முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர் களின் ஆலோசனையாக உள்ளது. இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில் 
.
இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த் தைகள் இன்னமும் புரியாதவையாக வே உள் ளன.
.
இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன் படுத்தப்படும் பட்டா, சிட்டா, அடங்கல், கிராம நத்தம், கிராம தானம், தேவ தானம், இனா ம்தார், விஸ்தீரணம், ஷரத்து, இலாகா, கிரையம், வில்லங்க சான்று, புல எண், இறங்குரிமை, வாரிசுரிமை, தாய் பத்திரம், ஏற்றது ஆற்றுதல், அனு பவ பாத்தியதை, சுவாதீனம் ஒப்படைப்பு, ஜமாபந்தி, நன் செய் நிலம், புன்செய்நிலம், மற்றும் குத்தகை போன்ற வார்த்தைக ளும், அவற்றின் விளக்கங்களும் கீழே கொடுக்க‍ப்பட்டுள்ள‍து அவற்றை படித்து தெரிந்து தெளிந்து கொள்ளுங்கள்
.
பட்டா:
 
ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில்  வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
 .
சிட்டா:
 
குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டு பாட்டில்  உள்ளது என்பது தொடர்பா ன விவரங்கள் அடங்கிய வருவாய் த்துறை ஆவணம்.
 

அடங்கல்:

நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத் தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில்  உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
 

கிராம நத்தம்:


ஒவ்வொரு கிராமத்திலும் குடியி ருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப் பட்டுள்ள  நிலம்.
 .

கிராம தானம்:

கிராமத்தின் பொது பயன்பாட்டுக் காக நிலத்தை ஒதுக்குவது.
.
தேவதானம்:
கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித் தல்.
 .
 

இனாம்தார்:

பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன் படுத்தும் சொல்.
 .


விஸ்தீரணம்:

நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.
 .


ஷரத்து:
பிரிவு.
 .


இலாகா:

துறை.
 .

கிரையம்:

நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவண படுத்துதல்.
 .


வில்லங்க சான்று:
 
ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனைசெய்த அதன் உரிமையா ளர்,  அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்ப னை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
.

புல எண்:

நில அளவை எண்.
 .


இறங்குரிமை:

வாரிசுரிமை.

 .
 

தாய்பத்திரம்:

ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதை ய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.


 .
ஏற்றது ஆற்றுதல்:

குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.
 .
 

அனுபவ பாத்தியதை:

நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.
 .


சுவாதீனம் ஒப்படைப்பு:

நிலத்தின் மீதான உரிமையை ஒப்ப டைத்தல்.
.


ஜமாபந்தி:

வருவாய் தீர்வாயம்.
 .
 
நன்செய்நிலம்:

அதிக பாசன வசதி கொண்டநிலம்.
 .


புன்செய்நிலம்:

பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
 .
 
குத்தகை:

ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.
.

இந்த வார்த்தைகளின் பயன்பாடு ருந்து வருகிறது.

Friday, 21 March 2014

எப்டிப்பட்ட ஆண்களை பெண்களும் எப்படியான பெண்களை ஆண்களும் எதிர்பார்கிறார்கள்…ஆய்வில் தகவல்



நல்லா கலரா, அழகா இருக்கிற பெண்ணா பாருங்க என்று கூறிய காலம் போய் இன்றைக்கு புத்திசாலியான பெண்தான் வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் இருந்து, வெளியாகும், “தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகை, உலகின், 30 நாடுகளை
 சேர்ந்த, 12 ஆயிரம் பேரிடம் கணக்கெடுப்பு நடத்தியது. இதன் மூலம், தற்கால ஆண், பெண் விருப்பங்கள் பற்றி, பல்வேறு, ருசிகர தகவல்கள் வெளிவந்துள்ளன.

அறிவான பெண்கள்

சமீப காலமாக, பெண்களை, அவர்களின் தோற்றத்தின் மூலம், ஆண்கள் மதிப்பிடுவதில்லை. மாறாக, பெண்களின் அறிவுத் திறன், பண்பான குணங்கள் போன்றவையே, ஆண்களை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன.

வீட்டு வேலையோ, அலுவலக வேலையோ இரண்டையுமே பேலன்ஸ் செய்வதில் புத்திசாலிப் பெண்களுக்குத்தான் தனி திறமை உண்டு. அழகுப் பதுமைகளாக இருக்கும் பெண்கள் எதற்கெடுத்தாலும் தங்களைத்தான் எதிர்பார்க்கின்றனர். எனவே அழகு என்பதை விட புத்திசாலியான பெண்கள்தான் வாழ்க்கைத்துணையாக வேண்டும் என்று ஆண்கள் கூறியுள்ளனர்.

அழகான ஆண்கள்

அதே சமயத்தில், ஆண்களிடம், வசதியை எதிர்பார்க்கும் பெண்கள், வெகுவாக குறைந்து விட்டனர். நல்ல உடற்கட்டுடன், அழகாக தோற்றம் அளிக்கும், ஆண்களுக்குத்தான் தற்கால பெண்கள், அதிக மதிப்பெண்கள் தந்துள்ளனர். ஆண்களுக்கு, நிகராக, பெண்களின், பொருள் ஈட்டும் திறன் அதிகரித்துள்ளதே இதற்கு காரணம். ஆண்களின் பணத்தை நம்பி, வாழ வேண்டிய அவசியம் பெண்களுக்கு குறைந்து போய் உள்ளதால், அவர்களது எதிர்காலம் பற்றிய, சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வாரிசுகளுக்கு, தன் கணவனால், வசதியான எதிர்காலத்தை தர முடியுமா என்றும், இக்கால பெண்கள் நினைப்பதில்லை.

பெண்களிடம் ஏற்பட்டு வரும், இந்த மாற்றம் காரணமாக, இனி ஆண்கள், “பணம்… பணம்’ என்று ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்க வேண்டி இருக்காது. தம் உடலை அழகாக பேணி வந்தாலே போதும் என்ற நிலை உருவாகி வருவதால், ஆண்கள் இனி, நிம்மதிப் பெருமூச்சு விடலாம். இவ்வாறு சர்வே முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஆண் மற்றும் பெண்களின் எதிர்பார்ப்புகள் மாறி வருகிறது என்பதையே இந்த கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது.
எப்டிப்பட்ட ஆண்களை பெண்களும் எப்படியான பெண்களை ஆண்களும் எதிர்பார்கிறார்கள்…ஆய்வில் தகவல் - See more at: http://www.cinebeeps.com/archives/16478#sthash.TIzcj7jm.dpuf

நடிகையை லிப்டுக்குள் மானபங்க படுத்திய வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு



இந்தி நடிகை ரியா சக்கரபோர்த்தி. இவர் ‘சோனாலி கேபிள்’ என்ற இந்திப்படத்தில் நடித்து உள்ளார். மேலும் டி.வி. நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ளார். இவர் கார்ரோட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகிறார்.


நேற்று மாடியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக லிப்டிற்காக காத்து நின்று கொண்டிருந்தார். அப்போது, டிப்–டாப் உடை அணிந்த வாலிபர் ஒருவர் அருகில் நின்று கொண்டிருந்தார்.


லிப்டுக்குள் நுழைந்ததும் நடிகையை அந்த வாலிபர் கட்டியைனைத்து மானபங்க படுத்த முயன்றுள்ளார் ஆனால் நடிகை அதற்குள் சுதாரித்து கொண்டு வாலிபருக்கு கீழ்பக்கமாக உதைகொடுத்து தப்பித்துள்ளார். பாதுகாவலர்கள் வருவதற்குள் அந்த வாலிபர் ஓடிவிட்டார்


இந்த சம்பவம் குறித்து நடிகை ரியா சக்கரபோர்த்தி நேற்று கார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


இந்த சம்பவம் குறித்து நடிகை ரியா சக்கரபோர்த்தி டுவிட்டர் இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் ‘‘நான் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் கட்டிடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. என்னை மானபங்கம் செய்த நபரை உடனடியாக போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்

Thursday, 20 March 2014

ஷாப்பிங்கில் கணவன்,மனைவிக்கிடையே சண்டை வராமலிருக்க - இப்படி செய்ய வேண்டும்...!



வீட்டில் செய்யும் வேலைகளிலேயே மிகவும் போர் அடிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அது மளிகைப் பொருட்களுக்கு செய்யும் ஷாப்பிங் தான். இந்த பிரச்சனை அனைத்து மாதமும் தவறாமல் வந்துவிடும்.


பிரச்சனை என்றதும் பெரிய பிரச்சனை என்று நினைக்க வேண்டாம், அந்த பொருட்கள் வாங்க சென்றால், கையில் இருக்கும் பணம் செல்லும் வழியே தெரியாமல் போய்விடும். ஆனால் சில வீட்டில் இருக்கும் பெண்கள், இந்த மளிகைப் பொருட்களை எளிதில் எந்த ஒரு பிரச்சனையுமின்றி அழகாக வாங்கிவிடுவர். இதற்கு காரணம் அவர்கள் போடும் ப்ளான் தான்.


ஏனெனில் அந்த மாதியான ப்ளான் போட்டால், மாத இறுதியில் எந்த ஒரு பணப்பிரச்சனையும் இல்லாமல் இருக்கும். ஆனால் அந்த ப்ளான் சரியாக இல்லையெனில் ஒரு வேலைக்கு இரண்டு வேலை என்பது போல் ஆகிவிடும். அதாவது ஒரு பொருளை வாங்கி, மற்றொரு முக்கியமான பொருளை வாங்காமல், பின் மறுமுறையும் கடைக்குச் செல்வோம். அவ்வாறு செல்லும் போது, பெண்களின் கை என்ன சும்மாவா இருக்கும். ஒரு பொருளுக்கு இரண்டு பொருளாக வாங்கிவிவோம். பின் பணம் என்ன நீண்ட நாட்களா இருக்கும்.

எனவே அத்தகைய பிரச்சனைகள் எதுவும் வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, உங்கள் பணத்தை சேகரிக்கலாமே!!!


முன்னரே ப்ளான் போடுதல்


எப்போதும் மளிகைப் பொருட்கள் வாங்க போகும் முதல் நாளே என்ன வாங்க வேண்டும் என்று யோசித்து லிஸ்ட்டை எழுதிக் கொள்ள வேண்டும். இதனால் எந்த ஒரு பொருளையும் மறக்காமல் இருப்பதோடு, நம்மிடம் இருக்கும் பணத்திற்கு ஏற்றவாறும் வாங்கலாம்.


பட்டியலை தயாரித்தல்


வாங்கும் மளிகைப் பொருட்களின் பட்டியலைப் போடும் போது இரண்டு வகையான பட்டியலை தயாரித்தல் நல்லது. ஏனெனில் முதல் முறை போடும் போது எதையாவது மறந்துவிடும் வாய்ப்பு உள்ளது. மேலும் முதல் பட்டியலில் அனைத்தையும் எழுதிவிட்டு, பின்பு மற்றொன்றில் வேண்டியவற்றை எழுதினால் நமது பட்ஜெட்க்கு ஏற்றவாறு இருக்கும்.

பட்டியல் பேப்பரை கையில் வைத்திருத்தல்


ஷாப்பிங் போகும் போது கையில் அந்த பட்டியலையும் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு பொருளையும் வாங்கியப் பின்பு அதில் ஒரு டிக் மார்க் போட்டுக் கொண்டால், எதை வாங்கினோம், எதை வாங்கவில்லை, சரியாகத் தான் வாங்கினோமா என்பது தெளிவாக தெரிந்துவிடும்.

வாழ்க்கைத்துணையுடன் சரியான ஒருங்கிணைப்பு


கடைக்கு மளிகைப் பொருட்கள் வாங்க செல்லும் போது சரியான ஒருங்கிணைப்பு இல்லையெனில் பின்பு ஷாப்பிங் செலவு தான் அதிகரிக்கும். பின் தேவையில்லாத சண்டைகள் வரும். ஆகவே இருவரும் ஒருங்கிணைந்து பட்டியலிட்டு வாங்கினால், பொருட்களும் தவறாமல் இருக்கும், பணமும் மிச்சமாகும்.


குடும்பத்தில் ஆலோசிக்க வேண்டும்


ஷாப்பிங் லிஸ்ட்டை தயாரிப்பது என்பது எளிதான விஷயம் இல்லை. அவ்வாறு தயாரிக்கும் போது குடும்பத்தில் உள்ளவர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்டு, பின்னர் தயாரித்தால், மாதத்தின் இறுதியில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்.

கிச்சனை பார்த்தல்


எந்த ஒரு மளிகைப் பொருளையும் வாங்கும் முன்பு, கிச்சனுக்கு சென்று பார்த்து, பொருட்கள் ஏற்கனவே இருந்தால், அவற்றை தேவையில்லாமல் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது அல்லவா? மேலும் தேவையில்லாமல் பொருட்களை சேகரித்து வைப்பது வேஸ்ட் தான்.

பட்டியலை வகைப்படுத்தவும்


மாதாமாதம் மளிகைப் பொருட்கள் மட்டும் தேவைப்படுவதில்லை. பால், காய்கறிகள் மற்றும் பல பொருட்கள் வாரம் ஒரு முறை அல்லது தினமும் வாங்க வேண்டியிருக்கும். ஆகவே அவற்றையும் மனதில் வைத்து மளிகைப் பொருட்களின் லிஸ்ட்டை எழுத வேண்டும்.

பட்ஜெட் போடுதல்


அனைத்து பொருட்களையும் வாங்குவதற்கு ப்ளான் போடும் முன், பட்ஜெட்டை பார்க்க வேண்டும். சொல்லப்போனால் பட்ஜெட்டைப் பொறுத்து ப்ளான் போடுவது நல்லது. இதனால் பணத்தை அளவாக செலவழிக்கலாம்.

காய்கறி தோட்டத்தில் உள்ள பூஞ்சைகளைப் போக்க சில டிப்ஸ்... - உங்களுக்காக..!



ஒவ்வொரு தோட்டத்திலும் காணப்படும் பிரச்னை செடிகளில் பூஞ்சை ஏற்படுவது தான். ஒருவேளை உங்கள் தோட்டத்திலும் இவை இருந்தால் நீங்கள் இதை குறித்து கவலைப் பட வேண்டாம். ஆனாலும் இவை நிச்சயம் கவனிக்கத்தக்க விஷயங்களாக அமைகின்றன.

எந்த ஒரு செடியும் பூஞ்சைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருக்காது. அது ரோஜாவாக இருந்தாலோ அல்லது ஏதேனும் அலங்கரிக்கும் செடியாக இருந்தாலோ கூட பூஞ்சைகளிடமிருந்து காப்பாற்றுவது கடினமானதாகும். ஆனால் இதை குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. பொதுவாகவே பூஞ்சை தான் இருக்கும் செடியிலிருந்து வேறு வகை செடிக்கு பரவக் கூடியது கிடையாது.

உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு பூஞ்சை பிடித்திருப்பதை நாம் தெரிந்துக்கொள்ள பல வழிகள் உண்டு. இலைகளில் சாம்பல் அல்லது வெள்ளை பொடி போன்று இருந்தாலோ அதை விரைவில் அகற்ற முற்பட வேண்டும். மிகுந்த முதிர்ந்த காலத்தில் அதன் இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். இதையும் நாம் கவனிப்பது நல்லது.

இத்தகைய பூஞ்சைகள் செடிப்பிரியர்களுக்கு மிகுந்த வேதனையை கொண்டு வரும். இதைக் கட்டுப்படுத்த நாம் பல வழிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நமது வீட்டில் வளர்க்கப்படும் காய்கறி செடிகளுக்கும் கூட இந்த குறைகள் ஏற்படலாம். இதை நாம் அப்படியே விட்டுவிட்டால் காய்கறிகள் விற்கும் விலைக்கு இவைகளும் நமக்கு பெரும் நஷ்டத்தை தந்துவிடும். இந்த பகுதியில் எவ்வாறு இத்தகைய பூஞ்சைகளை கட்டுப்படுத்துவது என்பதை நாம் பார்ப்போம்.


பூச்சிக்கொல்லிகள்

பூஞ்சைகள் காய்கறி தோட்டங்களை பாழ்படுத்தக் கூடியவையாகும். இவை காய்கறியின் சத்துக்களை எல்லாம் உறிஞ்சி விடும். நாம் முன் எச்சரிக்கையாக பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி காத்துக் கொள்வது சிறந்ததாகும். திரவமாக இருக்கும் சோப்பை எடுத்து சிறிது தண்ணீரில் கலக்கி உங்கள் செடிகள் மீது தெளித்தால் அவை இயற்கையான பூச்சிக்கொல்லியாக அமையும். இந்த குறிப்பு நிச்சயம் பயன்தரும்.


பூண்டின் மந்திரம்

பூண்டு மிகுந்த நற்குணங்களை கொண்ட பயிராகும். இது தோட்ட பாதுகாப்பிற்கும் மிகுந்த உதவியாக இருக்கிறது. பூண்டை அரைத்து, தண்ணீரில் கரைத்து செடிகள் மீது தெளித்தால் அது சிறந்த பூஞ்சை கொள்ளியாக அமையும். இந்த குறிப்பும் கூட சிறந்த வகையில் நமக்கு உதவியாக இருக்கும் மற்றும் தேவையான நேரத்தில் உடனடியாக கை கொடுக்கும்.


சமையல் சோடா

 பாத்திரம் கழுவும் சோப்பு, ஒரு காலன் தண்ணீர், சமையல் சோடா ஆகியவற்றை ஒன்றாக கலந்து அந்த கலவையை தெளித்தால் போதும், பூஞ்சைகளை ஒழித்து விட முடியும். சீக்கிரமாக மற்றும் எளிமையான முறையில் நாம் இதை தயார் செய்து செடிகளின் மேல் தெளிக்கலாம். இந்த கலவையை வாரத்திற்கு ஒரு முறை நாம் பயன்படுத்தினால் போதும் பூஞ்சைகளிடமிருந்து செடிகளை தப்புவிக்க முடியும்.


பூண்டு மற்றும் மிளகு கலவை

பூண்டு மற்றும் மிளகு கலவை அற்புதங்களை செய்ய வல்லது. பூண்டு, மிளகு, திரவமாக இருக்கும் சோப்பு மற்றும் ஒரு காலன் தண்ணீர் ஆகியவற்றை கலவையாக கலந்து எடுத்துக் கொண்டால், அந்த கலவை நமது செடிகளுக்கு சிகிச்சை கொடுப்பதற்கு உதவியாக இருக்கும். பூஞ்சைகள் இருக்கும் காய்கறி செடிகள் மீது இதை தெளித்தால் போதும் அவை விரைவில் குணம் பெரும்.


கந்தகம் உதவும்

 கந்தகம் அல்லது சல்பர் என்று கூறப்படும் இந்த பொடியினால் செய்யப்பட்ட எந்த பொருளும் பூஞ்சைகளை அழிக்க உதவும். இதை நாம் பூஞ்சைகள் வரும் முன் செய்தால் நலமாய் இருக்கும். இதை தெளிக்கும் போது வெப்ப சூழ்நிலை 90° பாரன்ஹீட் ஆக இருப்பது சிறந்தது. அதிக அளவு கந்தகத்தை நாம் பயன்படுத்துவதும் செடிகளை பாழ்படுத்தி விடும். ஆதலால் கவனமாக தெளிக்கவும்.


எண்ணெய் வைத்தியம்

 பூஞ்சைகளை எண்ணெய் தெளித்தும் விரட்டலாம். செடிகளின் மேல் எண்ணைய்களை தொடர்ந்து தெளிக்கவும். வேப்ப எண்ணெய் அல்லது ஜோஜோபா எண்ணெய் ஆகியவை செடிகளை பூஞ்சைகளிடமிருந்து பாதுகாக்கும். எண்ணெய அதிக சூட்டில் இருக்கும் போது தெளிக்கக்கூடாது. உபயோகிக்கும் முறையை உணர்ந்து கொண்டு இதை பயன்படுத்துவது சிறந்தது.

கள் பூஞ்சைகளால் தாக்கப்பட்டிருப்பதைக் கண்டு வேதனையடைவீர்கள். உங்கள் தோட்டம் விலையுயர்ந்தது! செடிகளுக்கும் உயிர் உண்டு. ஆதலால் உங்கள் அன்பையும் பராமரிப்பையும் அவற்றிற்கு காட்டுங்கள்.

பேஸ் புக், டுவிட்டரில் பயன்படுத்தும் 900 வார்த்தைகள் ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்ப்பு..!



லண்டன்: பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்கள் வருகைக்கு பிறகு அதில் மக்கள் புதிதாக உருவாக்கி பயன்படுத்தும் 900 வார்த்தைகள் ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆக்ஸ்போர்டு அகராதி குறிப்பிட்ட கால இடைவெளியில் சமூகத்தில் புழக்கத்தில் இருக்கும் புதிய புதிய வார்த்தைகளை தனது அகராதியில் சேர்த்து மேம்படுத்தி வருகிறது.

இணையதள யுகத்திற்கு பிறகு பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தி வருகின்றன.

கடந்த காலத்தில் எஸ்எம்எஸ்சில்  வார்த்தைகளை சுருக்கி பயன்படுத்திய இளைய தலைமுறைகள் இன்றைக்கு இணைய தலைமுறைகளாக மாற்றம் பெற்று புதிய புதிய வார்த்தைகளை புழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து ஆக்ஸ்போர்டு அகராதி தயாரிப்பு குழுவின் தலைவர் கேதரின் கான்னர் கூறுகையில், சமூக வலைத்தளங்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு பல்வேறு புதிய வார்த்தைகளை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

டிக்-டாக் என்ற வார்த்தை முன்பு கடிகாரத்தின் ஒலியை குறித்து வந்தது. தற்போது செய்திகளை முழுமையாக வரிசைக்கிரமமாக தரும் செய்தியாளரை அது குறிப்பிடும் சொல்லாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 இது போன்று பல்வேறு புதிய சொற்கள் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

இதுபோன்ற புதிய 900 வார்த்தை அகராதியில் இணைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

உலகிலேயே காஸ்ட்லி இதுதாங்க... 12 கோடிக்கு விலை போன நாய்..!



பீஜிங்: சீனாவில் நடந்த நாய் கண்காட்சியில் திபெத்திய வேட்டை இன நாய் ஒன்று ரூ.12 கோடிக்கு விலை போனது.

இதன் மூலம் உலகிலேயே காஸ்ட்லியான நாய் என்ற பெருமை அதற்கு கிடைத்துள்ளது. சீனாவின் ஜிஜியாங் மாநிலத்தில், ‘ஆடம்பர செல்ல பிராணிகள்‘ கண்காட்சி நேற்று நடந்தது.

உலகின் காஸ்ட்லியான பல்வேறு இன நாய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் ஷாங் என்பவர் கொண்டு வந்திருந்த திபெத்திய வேட்டை நாய், ரூ.12 கோடிக்கு விலை போனது. மிகவும் அரிய இனமாக கருதப்படும் திபெத்திய வேட்டை நாய்கள்.

பார்ப்பதற்கு சிங்கம் போல காட்சியளிக்கின்றன. சீனர்கள் இந்த நாயை மிகவும் கவுரவமாக கருதுவதால், குயிங்டாவ் நகரை சேர்ந்த தொழில் அதிபர் ரூ.12 கோடி கொடுத்து நாயை வாங்கி உள்ளார்.

ஒரு வயதுடைய அந்த நாய், தங்க நிற முடியுடன் காணப்படுகிறது. 31 இன்ச் உயரமும் 90 கிலோ எடையும் கொண்டுள்ளது.

உலகிலேயே காஸ்ட்லி நாய் என்ற பெருமையும் நாய்க்கு கிடைத்துள்ளது.  தான் வளர்த்த நாய்க்கு ரூ.12 கோடி கிடைத்த மகிழ்ச்சியில் ஷாங் கூறுகையில், ‘அரிய பாண்டா கரடிகளை போல இந்த வகை நாய்கள் கருதப்படுகின்றன.

 இதனால் அதிக விலை கிடைத்துள்ளது‘ என்றார். கடந்த 2011ம் ஆண்டு நடந்த கண்காட்சியில் இதே வகை நாய் ரூ.9 கோடிக்கு விலை போனது.

இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆசியா மற்றும் திபெத் பழங்குடியின மக்களால் வேட்டைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நாய்கள், மற்ற இனங்களை விட மிகவும் விசுவாசம் உள்ளவை என கூறப்படுகிறது.

கண்ணீர் வராமல் வெங்காயம் வெட்ட ஆசையா...?



அடிக்காமல் கண்களில் இருந்து கண்ணீர் வருமா? நிச்சயம் வரும். அது எப்படி என்று கேட்கிறீர்களா? ஆம், வெங்காயம் அழ வைக்காதா என்ன? வெங்காயமானது எத்தகைய கல் நெஞ்சக்காரர்களையும் அழ வைக்கும் திறன் உடையது. எப்படி மாமியார் மருமகளை எளிதில் அழ வைப்பார்களோ, அதுப் போன்று வெங்காயம் அனைவருக்கும் ஒரு மாமியார். சரி, இவ்வாறு வெங்காயம் நறுக்கினால் எதற்கு கண்ணீர் வருகிறது என்று யாராவது யோசித்ததுண்டா? இல்லை, அல்லவா.

வெங்காயம் நறுக்கினால் கண்களில் இருந்து வெளிவருவதற்கு, வெங்காயத்தில் கண்களுக்கு எரிச்சலைத் தரும் நொதிப்பொருள் ஒன்று உள்ளது. அந்த நொதிப் பொருள், காற்றில் கலந்து, கண்களை சேர்வதால் தான், கண்களில் இருந்து தண்ணீர் வருகிறது. எனவே இத்தகைய பிரச்சனைக்கு தீர்வே இல்லையா என்று கேட்கலாம். இதற்கு நிச்சயம் தீர்வு உள்ளது.

இந்த உலகில் பிரச்சனை என்று ஒன்று இருந்தால், அதற்கு நிச்சயம் தீர்வு என்ற ஒன்றும் இருக்கும். அதுப் போலத் தான், வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வராமல் இருப்பதற்கும், ஒருசில வழிகள் உள்ளன. அத்தகைய வழிகளை பின்பற்றி வந்தால், வெங்காயம் நறுக்கும் போதும் கண்களில் இருந்து கண்ணீர் வருவதைத் தவிர்க்கலாம். சரி, அத்தகைய வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

கூர்மையான கத்தி

வெங்காயத்தை நறுக்கும் போது கூர்மையான கத்தியைப் பயன்படுத்த வேண்டும். இதனால் வெங்காயத்திலிருந்து வெளிவரும் நொதியின் அளவு குறைந்து, கண்ணீர் வராமல் இருக்கும்.


தண்ணீர்

வெங்காயம் நறுக்கும் போது தண்ணீரில் வைத்துக் கொண்டு வெட்டலாம் அல்லது தண்ணீரில் ஊற வைத்து, பின் அதனை எடுத்தும் வெட்டலாம். இதனாலும் கண்ணீர் வராமல் இருக்கும்.

ஃப்ரிட்ஜ்

வெங்காயம் வெட்டுவதற்கு 10-15 நிமிடம் ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீசரில் வைத்து எடுக்க வேண்டும். ஆகவே வெங்காயம் வெளியேற்றும் திரவம் போன்ற நொதியானது காற்றில் கலக்காமல் இருக்கும். இதனால் கண்களில் தண்ணீர் வராமல் இருக்கும்.

ஃபேன்

வெங்காயம் வெட்டும் போது, ஃபேனுக்கு அடியில் உட்கார்ந்து நறுக்கினால், அதிலிருந்து வெளிவரும் நொதியானது காற்றில் கலந்து கண்களை அடையாமல், ஃபேன் சுற்றுவதால் வெளியே தள்ளப்பட்டுவிடும்.

ஓடும் நீர்

வெங்காயத்தை தண்ணீரை திருப்பி விட்டு, அதில் வைத்து வெட்டினாலும் கண்ணீர் வராது.

வினிகர்

வெங்காயத்தை வைத்து நறுக்கும் பலகையில் சிறிது வினிகரை தேய்த்து வெட்டினால், வினிகர் வெங்காயத்தில் இருந்து வெளிவரும் நொதிகளை அழித்துவிடும்.

உப்பு

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் உப்பு சேர்த்து, வெங்காயத்தைப் போட்டு ஊற வைத்து, நறுக்கினாலும் அழுவதைத் தடுக்கலாம்.


மெழுகுவர்த்தி

வெங்காயம் வெட்டும் போது அருகில் மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு வெங்காயம் நறுக்கினால், வெங்கயாத்திலிருந்து வெளிவரும் நொதியானது காற்றில் கலந்து, கண்களை கலங்க வைப்பதற்கு முன், மெழுகுவர்த்தியில் இருந்து வெளிவரும் வெப்பக்காற்றானது தடுத்துவிடும்.


சூயிங்

கம் நிறைய மக்கள் சூயிங் கம்மை வாயில் போட்டு மென்று கொண்டு, வெங்காயத்தை நறுக்கினால், கண்களில் இருந்து கண்ணீர் வருவதைத் தவிர்க்கலாம் என்று சொல்கின்றனர்.

அதிக நேரம் கணனி பார்ப்பவருக்கு ஏற்படும் கண் பிரச்சினையை போக்க சில டிப்ஸ்...!



கம்ப்யூட்டர் என்பது இன்று அனேகம் பேருக்கு மூன்றாவது கை மாதிரி. அது இன்றி ஒரு நிமிடம் கூட நகராது. உணவு, உறக்கமெல்லாம் கூட இரண்டாம் பட்சம்தான். கம்ப்யூட்டர்தான் வாழ்க்கை பலருக்கும். அந்தளவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிற நிலையில்,


இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரம் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்கிற பிரச்னை வரலாம் என எச்சரிக்கிறார் கண் மருத்துவ நிபுணர் பிரவீன் கிருஷ்ணா.


அதென்ன ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’? அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? தீர்வுகள் என்ன? எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். ‘‘அதிக நேரம் கம்ப்யூட்டர் உபயோகிக்கிறவங்களுக்கு கண்கள் வறண்டு, கண்ணீரே இல்லாமப் போகலாம்.


 அடிக்கடி தலைவலி, கண்கள் இழுக்கிற மாதிரி உணர்வு, கண்கள் துடிக்கிறது, எரிச்சல், பார்வை மங்கின மாதிரி உணர்வு… இதெல்லாம் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமோட அறிகுறிகளா இருக்கலாம்.

சதா சர்வ காலமும் கம்ப்யூட்டரே கதியா இருக்கிறவங்க, ‘20 – 20 – 20’ விதியைப் பின்பற்றியே ஆகணும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவுல உள்ள காட்சியைப் பார்க்கணும். உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்ச்சு, மூடின கண்கள் மேல வச்சு எடுக்கலாம். கண்கள் ரொம்ப வறண்டு போனா, கண் மருத்துவரைப் பார்க்கணும்.


வறட்சியோட அளவைப் பொறுத்து, தேவைப்பட்டா, கண்களுக்கான செயற்கை கண்ணீர் மருந்துகளைப் பரிந்துரைப்பாங்க’’ என்கிற டாக்டர் பிரவீன், கம்ப்யூட்டர் வேலையில் சேர்வதற்கு முன்பே, கண் பரிசோதனையை மேற்கொண்டு, ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்துகிறார்.


‘‘கிட்டப்பார்வையும் இல்லாம, தூரப்பார்வையும் இல்லாம கம்ப்யூட்டருக்கு நடுத்தர பார்வை தேவை. கண்ணாடி தேவைப்படும்போது, தூரப்பார்வைக்கும் கிட்டப்பார்வைக்குமான கண்ணாடி கம்ப்யூட்டருக்கு சரி வராது. கம்ப்யூட்டர் வேலைக்கான பிரத்யேக கண்ணாடிகள் இருக்கு.


ஸ்பெஷல் கோட்டிங்கோட, நடுத்தரப் பார்வைக்கான அதைக் கேட்டு வாங்க வேண்டியது அவசியம். கம்ப்யூட்டருக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியா இருக்கணும்.


பாதங்கள் தரையைத் தொடற மாதிரி உட்காரணும். 90 டிகிரி கோணத்துல உட்கார்றது சரியா இருக்கும். கம்ப்யூட்டருக்கு ‘ஆன்ட்டி ரெஃப்ளெக்ஷன் மானிட்டர்’ போடறதும் கண்களைப் பாதுகாக்கும்.  பொதுவா 40 பிளஸ்ல இருக்கிறவங்களுக்கு,


 வெள்ளெழுத்தோட சேர்ந்து, இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்னையும் வரும். அந்தவயசுல வரக்கூடிய பிரச்னையா ஒதுக்காம, கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமுக்கும் சோதனை செய்து, தேவையான சிகிச்சைகளை எடுத்துக்கிறது அவசியம்.’’

இவற்றை பின்பற்றினால் 'அதில்' நீங்க கில்லாடிதான்...!



 தடம் பார்த்து நடப்பவன் மனிதன், தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்’ என்று சொல்வார்கள். எல்லோருக்கும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையும், மற்றவர்கள் நம்மை விரும்ப வேண்டும் என்ற எண்ணமும் இருக்கத்தான் செய்யும் வெற்றிக்கு முயற்சியும், தன்னம்பிக்கையும் போதும். வெற்றி பெற்றால் மற்றவர் உங்களை திரும்பிப் பார்க்கலாம். ஆனால் எல்லோரும் உங்களை விரும்பியும், நெருங்கியும் வர வேண்டுமென்றால் 6 அடிப்படை விஷயங்கள் அவசியம். அவை இங்கே தரப்படுகின்றன.

நம்பிக்கை:

நம்மிடம் இருக்கும் சிறந்த பழக்க வழக்கங்களே பிறரை நம்மை நோக்கி ஈர்க்கும். முதலில் நமக்கு நம் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். நான் அழகான வ(ன்)ள் என்ற எண்ணம் உங்கள் மனதில் எப்போதும் இருக்கட்டும். அழகு என்பது சருமத்தில் மட்டுமில்லை. சருமத்தை பராமரித்து அழகுபடுத்திவிடலாம். கவர்ச்சியை விட நம்பிக்கை மேலானது. நம்பிக்கையின் பலனையும், ஈர்ப்பையும் உங்கள் வெற்றி தான் மற்றவர்களுக்கு உணர்த்தும்.

நேர்த்தியான உடை:

‘நான் நல்ல நிறமாக இல்லை. எலும்புப் தோலுமாக இருக்கிறேன். எனக்கு எந்த உடை போட்டாலும் நன்றாக இருக்காது’ என்று எண்ணாதீர்கள். நேர்த்தியாக உடை அணியுங்கள். உடை அணிவது ஆளைக் கவர்வதற்கல்ல என்றாலும் பார்ப்பவர்களை மதிக்கத் தூண்டுவதும் நாம் அணியும் உடைதான். அது உங்களுக்கு வசதியானதாகவும் இருக்கட்டும். நல்ல மரியாதை, நல்ல நட்பு எல்லாவற்றையுமே நல்ல ஆடைகள் உருவாக்கித்தரும். நேர்த்தியான ஆடை உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

கனிவான பழக்கம்:

வீட்டுக்குள்ளேயே கிணற்றுத் தவளையாக முடங்கிக் கிடந்தால் இந்த உலகத்தின் அதிசயங்கள் உங்களுக்கு தென்படாமலே போகும். பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டால் தான் வெற்றியின் முகம் உங்களுக்கு காட்சி தரும். எனவே ஓய்வு நேரத்தை நண்பர்களுடன் இணைந்து சமூக சேவை செய்யும் விதமாக வெளியே கழித்தால் பலரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

அப்போது உங்களுக்கு புதிதாக பலர் அறிமுகமாகலாம். நீங்களும் முதலில் உங்களை அறிமுகம் செய்து பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பழக பழகத்தான் நம் பலமும், பலவீனமும் தெரியும். பிறகு நம் நடையை மாற்றி வெற்றி நடைபோடலாம்.

நட்பை தேர்வு செய்யுங்கள்:

வெற்றிக்குத் துணை நம்பிக்கை மட்டுமல்ல நட்பும் தான். யாருடன் சிநேகிதம் கெள்கிறோமோ அவர்களின் பழக்கம் நமக்கும் ஒட்டிக் கொள்ளும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதனால் நட்பு கொள்வதில் அதிக கவனம் அவசியம். அதேபோல அருகில் இருப்பவர்கள் உடன் பணிப்புரிபவர்கள் ஆகியோருடன் நட்புறவுடன் இணக்கமாக பழகுவதும் வாழ்க்கையில் வெற்றிக்கு உதவும். உங்களின் அழைப்பை மதிப்பவருடனும், மரியாதையுடன் பழகுபவருடனும், உங்கள் நலனில் அக்கறை கொள்பவருடனும் நட்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

விமர்சனத்தை எதிர்கொள்ளுங்கள்:

நீங்கள் நிறைவான தோற்றத்தில் இருக்கும்போது பலரும் உங்களைப் பற்றி பேசிக் கொள்வார்கள். அதுபோல குறையான தோற்றத்தில் இருந்தாலும் பலரும் விமர்சிப்பார்கள். புகழ் பேச்சில் மயங்காமலும், குறை காணும் விமர்சனங்களில் கலங்காமலும் இருங்கள்.


விலக்க வேண்டியவை:

வெற்றிக்காக விலக்க வேண்டிய விஷங்கள் ஏராளம் உண்டு. முதலாவது எதிர்மறையாக பேசுபவர்களை விட்டு விலகுங்கள். அடுத்ததாக நேரத்தையும், செல்வத்தையும் விரயம் செய்யும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். நண்பர்களுடன் அதிகமாக அரட்டையடிப்பது, தூங்கிக் கழிப்பது, தியேட்டரில் கழிப்பது போன்றவற்றை விலக்குவதன் மூலம் நேரத்தையும், செல்வத்தையும் மிச்சப்படுத்தலாம். இந்த ஆறு இருந்தால் வெற்றி உங்களைச் சேரும். மற்றவர்களும் உங்களிடம் விரும்பி நட்பு பாராட்டுவார்கள்.
புகழும் பேச்சில் மயங்காதீர்கள்;
விமர்சனத்தில் கலங்காமல் இருங்கள்!
கண்டிப்பாக வெற்றி உங்களை தேடிவரும்... 

Wednesday, 19 March 2014

மொட்டை மாடி "ஜொள்ளு மாமா"



 நாற்பத்தைந்து வயதான மாமா, காலை 6:00 மணிக்கு, மொட்டை மாடியில் ஏறினார் என்றால், 8:30 மணி வரை, வயது வித்தியாசமின்றி, காலனி பெண்களை பார்த்து, "ஜொள்ளு' விட்டுக் கொண்டிருப்பார்.


வயதானவர்களும், மாமாவின் பார்வைக்கு தப்பாததால், காலனிவாசிகள் அனைவரும் சேர்ந்து, "ஜொள்ளு மாமா' என, பெயர் வைத்து விட்டனர். இதையறிந்து வெட்கமடைந்த மாமி, மாமாவை திருத்த, எத்தனையோ வழிமுறைகளை கையாண்டும், பலன் பூஜ்ஜியம்தான்.


ஒருநாள், மாமா பெயருக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில், "மதிப்பிற்குரிய பெரியவரே... தினமும் காலை 6:00 மணி முதல் 8:30 மணிவரை, எங்கள் வீட்டுப் பெண்களை, "கலைக் கண்ணோடு' தாங்கள் பார்த்து மகிழ்வதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.


உங்கள் வீட்டு மாமி, மகாலட்சுமி போல் இருக்கிறார். என்ன செய்வது... அவரின் அருமை உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

அவரை நாங்கள் கண்டு மகிழலாம் என்றால், எங்காவது கடைக்கு வரும் போது தான் பார்க்க முடிகிறது. எனவே, பரந்த மனப்பான்மை உடைய நீங்கள், ஒவ்வொரு நாளும், ஒருவர் வீடு என்ற கணக்கில், இந்த காலனி முழுவதும் அனுப்பி வைத்தால், சர்வ லட்சணம் பொருந்திய மாமியை நாங்களும்,


"கலைக் கண்ணோடு' கண்டு மகிழ வசதியாக இருக்கும். வரும் நாட்களில், மாமி எங்கள் வீட்டிற்கு வருவார் என, நம்புகிறோம். வாழ்க மாமா! வளர்க அவரது, கலை ரசனை! இப்படிக்கு, காலனிவாசிகள்...' என்று கடிதம் முடிந்திருந்தது.


கடிதத்தை படித்த மாமா ஆடிப்போய், திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆகி விட்டார். இப்போ... கடை மற்றும் ரேஷனுக்கு போவதென்றால் கூட, உடனே பையை தூக்கிக் கொண்டு ஓடுகிறார். எப்படியோ, மாமா திருந்தியதில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். மாமாவுக்கு தெரியாத ஒரு ரகசியம் உங்களுக்கு சொல்லட்டுமா? இந்த கடிதம் எழுதியதே எங்க மாமிதான்! சூப்பர் மாமிதான் என்கிறீர்களா? 

குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி? சிறப்பு கட்டுரை...!



குழந்தைகள் அறிவின் வாசலை கண்டுபிடிப்பவர்கள். அந்த கண்டுபிடிப்பு என்ன என்பதை பற்றி நம்மால் புரிந்து கொள்ளமுடியாது. குழந்தைகள் உலகம் மிக விந்தையானது. வேடிக்கையானது.

விநோதமானது. எவராலும் எளிதாக நுழையமுடியாது. அதனால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளமுடியும். அவர்கள் அவ்வளவு ஆற்றல் உள்ளவர்கள்.

“குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு.

 உங்கள் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளைத் திணிப்பது தவறு.

நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால் ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை.”

என்ற வரிகளுக்கேற்ப குழந்தைகளை நாம் உருவாக்கினபோதும் அவர்கள் நமது அடிமைகள் அல்ல. நம் குழந்தையே ஆனாலும் நாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கக்கூடாது.

‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற பழமொழியெல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? பேசி புரிய வைத்து அவனை நல்லவனாக வளர்க்கலாம். நண்பனாகப் பழகுவதன் மூலம் ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளச்செய்யலாம். செய்தால் வளர்ந்தபிறகு நம்மை அணைப்பான். இல்லாவிட்டால் அவனும் ‘அடிக்கிற கை அணைக்கும்’ என்று அடிப்பான்.]

படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்?

சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் “ரிங் மாஸ்டரை”ப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வழிப்படுத்துவது யாரை மகிழ்விக்க, “குழந்தையை நல்லா வளர்திருக்கிறாங்க” என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா?

சேட்டை செய்யும் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது?

குழந்தைகள் மீதான வன்முறை :

குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்து பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் “எதுசரி” “எதுதவறு” என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். “சேட்டை” என்றால் என்ன? நாம் சந்தோசமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம்.

நாம் வேறு மனநிலையில் இருக்கும் போது குழந்தை சும்மானாச்சுக்கும் மண்ணைத் தொட்டால் கூட “சனியனே, “சனியனே” “பேயா பொறக்க வேண்டியது புள்ளையா பொறந்திருக்கு” என்று திட்டுவோம். ஆக “சேட்டை” என்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல. நம்மை மையப்படுத்தி இருக்கிறது. முதலில் அதை உணர்வோம்.

அடுத்து, குழந்தை தன்னையோ, மற்றவரையோ, மற்றவைகளையோ பாதிக்காமல் விளையாட அனுமதிக்க வேண்டும். சேட்டை செய்த பிறகு அடிக்காமல் முன்பே “விதிகளை” சொல்லிவிட வேண்டும். விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாய்க் கண்டிக்கவேண்டும். நீங்க குழந்தையா இருந்தபோது சேட்டை செய்தீர்களா? இல்லையா?

அடிக்காமல் வளர்ப்பது எப்படி?
அடிப்பதைத் தாண்டி வேறு எதையுமே யோசிக்க மாட்டீர்களா? அடித்து சரிபடுத்த அவர்கள் என்ன மத்தளமா? கண்டிப்பாக என்பது “இந்தச் செயல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்துவது” சில குழந்தைகள் “நான் உன் கூட பேசமாட்டேன்” என்று சொன்னாலே தங்களது தவறுகளை திருத்திக்கொள்ளும்.

இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான உளவியல் (சைக்காலஜி) உண்டு. பெற்றோர்களுக்கும் அவரவர் குழந்தைகளைப்பற்றி நன்கு தெரியும். பொறுமையின்மையின் காரணமாக, வேலைப்பளுவின் காரணமாக, நேரமின்மையின் காரணமாக, இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றன. அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

குழந்தை உரிமை மீறல் என்கிறீர்களே? குழந்தைக்கு என்ன உரிமை? குழந்தை உரிமை என்றெல்லாம் இருக்கா?

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. இன்றைய குழந்தை நாளைய மனிதனல்லவா? இப்படித்தான் நிறைய நபர்களுக்கு சந்தேகம் உள்ளது. உதாரணமாக ஒரு 8 மாத குழந்தையை அதன் தாய் இடுப்பில் வைத்து சோறுஊட்டும் போது அந்தக் குழந்தை தனக்குத் தெரிந்த மழலையில் வேண்டாம் என்று சொன்னாலும் அந்தத்தாய் எப்படியாது இன்னும் இரு கவளத்தை அந்தக் குழந்தைக்குத் திணித்துவிடுவார். அப் போதுதான் அந்தத்தாய்க்கு மனநிறைவு.

 மகிழ்ச்சி. தன் குழந்தைக்கு வயிறுநிறைய சோறு ஊட்டி விட்டதாகத் திருப்தி. ஆனால் அந்தக் குழந் தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாமல் தான் சாப்பிட்டதை சிறிறு நேரத்திலேயே வாந்தி எடுத்துவிடும் சூழலில் ‘பார் பிடிவாதத்தை. அப்படியே அது அப்பனை கணவனையும் சேர்த்துத் திட்டி தன் குழந்தைக்கும் இரண்டு அடி வைப்பார் தாய்.

இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது. ஒரு தாய் தன் அளவுக்குமீறிய அன்பினால் செய்யக்கூடிய வன்முறையைக் காட்டுகிறது. வாந்தி எடுத்தால் தன் குழந்தை எங்கே இளைத்துவிடப் போகிறதோ என்ற அதீத பயத்தினால், அக்கறையினால் அந்தக்குழந்தைக்கு இலவசமாக இரண்டு அடியும் கொடுக்கிறார்.

 ஏற்கனவே வாந்தி பண்ணியதால் மூக்கிலும் வாயிலும் ஏற்படும் எரிச்சலோடு, அடிபட்டதால் அந்தக் குழந்தை மேலும் மேலும் வன்முறைக்குள்ளாகிறது. இந்த செயல் அன்பினால் ஏற்பட்ட வன்முறை.

மற்றோர் வன்முறை அதிகாரத்தால் நிகழக்கூடியது. ஒரு குடும்பத்தில் குடித்துவிட்டு வந்த தந்தை தூங்கிக்கொண்டிருந்த தன் மகனை கடைக்கு அனுப்பித் தனக்கு சாப்பாடு வாங்கிவரச் சொல்கிறார். அந்த குழந்தை, தன் தகப்பன் கேட்ட உணவு கடையில் தீர்ந்துவிட்டால், கடையில் இருப்பதை வாங்கி வருகிறான், இதற்காக மகனை கண்மண் தெரியாமல் விளாசித் தள்ளுகிறார் தந்தை. இது அதிகாரத்தினால் நடக்கும் வன்முறை. தகப்பன் குடித்தது முதல் தவறு. தன் குழந்தைகளுக்கு தான் குடித்ததாக காட்டியது இரண்டாவது தவறு.

தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் தூக்கத்தை அர்த்தமில்லாமல் கெடுத்தது மூன்றாவது தவறு. அவனை அடித்தது மிக மோசமான தவறு. ஆகிய இத்தனை தவறுகளும் விளைவதற்கு காரணம் அதிகாரம். என்னால் என்னமும் செய்யமுடியும் என்கிற போக்கு, நான்தான் இந்த வீட்டில் முடிவெடுக்கும் நபர் என்ன எண்ணத்தில் எழும் சிந்தனை. இம்மாதிரி குழந்தைகளுக்கு அனுதினமும், நிறைய நேரங்களில், எல்லா நபர்களாலும் குழந்தைகளுக்கான வன்முறை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இதெல்லாம் வன்முறையா? நாங்கள் என்ன நினைத்தோம் என்றால் குழந்தையை ஒழுங்காகவும் நல்ல பிள்ளையாகவும் வளர்ப்பதற்கு அடித்து வளர்க்கிறோம் என்று? இப்படி ஒவ்வொரு காரியத்திற்கும் பார்த்துப் பார்த்து செய்ய முடியுமா?

கலில் கிப்ரான் என்ற கவிஞர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.

“குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளைத் திணிப்பது தவறு. நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

 ஏனென்றால் ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை.” என்ற வரிகளுக்கேற்ப குழந்தைகளை நாம் உருவாக்கினபோதும் அவர்கள் நமது அடிமைகள் அல்ல. நம் குழந்தையே ஆனாலும் நாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கக்கூடாது. ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற பழமொழியெல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? பேசி புரிய வைத்து அவனை நல்லவனாக வளர்க்கலாம். நண்பனாகப் பழகுவதன் மூலம் ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளச்செய்யலாம். செய்தால் வளர்ந்தபிறகு நம்மை அணைப்பான். இல்லாவிட்டால் அவனும் ‘அடிக்கிற கை அணைக்கும்’ என்று அடிப்பான்.

நாம் என்ன சொல்லிக்கொடுக்கிறோமோ அதைத்தானே குழந்தைகள் செய்வார்கள். ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்து தான் செய்யவேண்டும். நிலத்தில் விதையைத் தூவி விட்டால் மட்டும் போதாது. தினசரி நம் கண்காணிப்பு தேவைப்படுகிறதல்லா? குழந்தைகள் விதையை விட முக்கியமானவர்கள். நல்ல பலன் தரும் விதைகளாக, விருட்சங்களாக வளர குழந்தையைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்க்கவேண்டும். பக்குவமாய் சொல்லிக்கொடுத்து, பேசி வளர்க்கவேண்டும்.

குழந்தைகளை திட்டி கண்டித்து வளர்க்கலாமா? இல்லை அதுவும் கூடாதா?

சரி குழந்தைகளை அடிக்க கூடாது, திட்டி கண்டித்து வளர்க்கலாமா? இல்லை அதுவும் கூடாதா?

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு சிறுமியை அவள் தாய், ‘நீ எதுக்குத்தான் லாயக்கு. நீ பொறந்ததே வேஸ்ட்’ என்று திட்டிக்கொண்டே இருந்தால் அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக்குள்ளேயே தங்கிவிடும். சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால், தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே எந்தக் காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகி விடக்கூடும்.

 அப்புறம் அந்தப்பெண்ணின் தாழ்வு மனப்பான்மையை சரிசெய்வதே பெரும்பாடாகிவிடும். இம்மாதிரியான மனநிலையை, பாதிப்புக்குள்ளாகும் சொற்களை, குழந்தைகளிடம் பேசுவது மிகப்பெரிய குற்றம். நாம் இந்தத் தவறைச் செய்கிறோம் என்று தெரியாமலேயே நிறைய பெற்றோர்கள், குழந்தைகளோடு பழகுபவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் இத்தகைய சொற்களால் மன அளவில் பாதிக்கப்படும் குழந்தைகள் நம் சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள்.

இப்படியெல்லாம் இருக்கா? சரி நாம் கண்டிக்காம விட்டுட்டா ரொம்ப அதிகமாகப் பேசி அனைவரின் மத்தியிலும் கெட்ட பேரெடுக்குமே?

திரும்பத்திரும்பச் சொல்கிறேன், கண்டிப்பது என்பது வேறு. அந்தக் குழந்தையை மனரீதியாக தண்டிப்பது வேறு. கண்டிப்பது என்பது ஒரு செயலைச்செய்யும் போது நல்லது கெட்டது என்ன என்பதை புரியவைப்பது. அப்படியே அந்தக்குழந்தை தவறு செய்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பின் அனுபவத்தைப் புரிய வைப்பது.

உதாரணமாகத் தீயைத் தொட்டால் சுடும் என்பதை விளக்கிய பின்னும் அந்தக் குழந்தை அதைத் தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டு சுட்டுக்கொண்டால் கூட அதன் விளைவுகளை, அதன் பாதிப்புகளை, காயம் ஆறியபிறகே உணர்த்தவேண்டும்.

யாரேனும் ஒருவர் பிரச்சனையில் மாட்டிக்கொண்டிருக்கும் போதுதான் ‘எனக்கு அப்பவே தெரியும். இப்படியெல்லாம் ஆகுமென்போம். நம் அறிவாற்றலை வெளிப்படுத்தாமல் பக்குவமாக, மனிதமனம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில், புரிய வைக்கவேண்டும். விளக்க வேண்டும். ஒரு பிரச்சனைக்கான தீர்வு என்பது பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்பதுதான்.

நாம் என்ன செய்கிறோம் என்றால் இருட்டுக்குள் போனால் பிரச்சனையாகிவிடும். ஆகவே இருட்டுக்குள்ளே போகவே கூடாது என்பதைத்தான் நாம் கற்றுக்கொடுக்கிறோம். மாறாக இருட்டுக்குள்ளே போய் பிரச்சனை வந்தால் எவ்விதம் பாதுகாத்துக்கொள்வது, எப்படி தப்பிப்பது என்பதை சொல்வதில்லை. இதற்குப்பெயர் தான் ‘மதிப்பீட்டுக்கல்வி’ (வேல்யூ எஜீகேசன்) என்று சொல்வார்கள்.

உங்களது அடுத்த கேள்வி அதிகமாப் பேசி கெட்ட பெயரை குழந்தைகள் எடுப்பார்கள் என்பதுதானே. நாம் பேசும் பேச்சு எல்லோருக்கும் பிடிக்கிறதா? வாய் தவறிப் பேசும் சில பேச்சுக்கள் நமக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் ‘இது தவறு’ ‘இது சரி’ என்று எங்கே நாம் திருத்திக்கொண்டோம்? ஒவ்வொரு முறையும் நாம் பேசுவதால் ஏற்படும் பிரச்சனைக்குப் பின்புதானே.

அந்த அனுபவத்தைக் கொண்டு குழந்தைகளைப் பேசவிட்டுப் புரியவைக்கவேண்டும். கருத்து சுதந்திரமே நாம் நம் குழந்தைகளுக்குக் கொடுத்ததில்லை. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்குக் கொடுத்ததே இல்லை. குழந்தைகள் பேசும் அளவிற்கு வந்ததும் பெரியவர்களாகிய நாம் அமைதி காத்து, பேச்சைக் குறைத்து குழந்தைகளைப் பேச அனுமதிக்கவேண்டும்.

பேசும்போதே அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றை சரி செய்ய வேண்டும். அதுதான் சரியான அணுகுமுறை. ரூசோவின் வார்த்தைகள் எனக்கு நினைவிற்கு வருகிறது. ‘உன் பேச்சு சுதந்திரத்திற்காக என் உயிரையும் தரத்தயாராயிருக்கிறேன்’ என்கிறார், அவர் எதிரிகளைப் பார்த்து, எதிரிகளின் பேச்சு சுதந்திரத்திற்காக தன் உயிரையும் தரத்தயாராயிருந்தபோது நாம் நம் குழந்தைகளின் பேச்சு சுதந்திரத்தைப் போற்றவேண்டும்தானே.

பெண் குழந்தைகளைப் பேச அனுமதிப்பதில்லையா? அவர்கள்தானே நிறையப் பேசுகிறார்கள்? அப்படியே பேசினாலும் கண்டிப்பது தாய்க்குலங்கள் தான்.

ம்ம்ம். தாய்குலங்களுக்கு, எங்கே தங்கள் குழந்தைகள் வளர்ந்து உரிய வயதில் திருமணமாகிப் போகிற குடும்பங்களில் இப்படிப் பேசி, அந்த வீட்டில் ‘வளர்த்திருக்கிறதைப் பார்’ என்று தங்களைத் திட்டுவார்களோ என்ற ஐயத்தினால் இப்போதிருந்தே அடக்கி ஒடுக்கி வளர்க்கிறார்கள். தங்கள் வளர்ப்பைப் பற்றின விமர்சனத்திற்கு பயந்து இப்போதே பேசவிடாமல் தடுப்பது எந்தவகையைச் சார்ந்தது?

கருத்து சுதந்திரம் இல்லாததால்தான் தன் மீது நடக்கும் வன்முறைகளைக் கூட, மௌனமாக ஏற்றுக்கொள்ளும் போக்கினை குழந்தைகள் பெற்று எவ்வித எதிர்ப்பையும் காட்ட மறுக்கிறார்கள். இதுவே நாளடைவில் சமூகத்தில் நடைபெறும் பலவிதமான கேடுகளை எதிர்க்கத் திராணியற்று வன்முறைகளை வளர்க்கும் போக்கிற்கு மௌனமாக ஒத்துழைக்கிறார்கள். அதனால், வீடுகளில் நடக்கும் வன்முறைகளுக்கு ஓர் அளவே இல்லாமல் போய்விட்டது.

என்ன? வன்முறையா? குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் வன்முறையாளர்களா? பெற்ற குழந்தைகளை ஒழுங்காக வளர்க்க நாங்கள் என்ன பாடுபடுகிறோம்? வன்முறை செலுத்துகிறோம் என்கிறீர்கள்?

சரி. நான் அன்றாடம் நடக்கும் சில செய்திகளை சொல்லிக்கொண்டே வருகிறேன். இது வன்முறையா? இல்லையா என்று பாருங்கள்.

பெண் குழந்தைகளை உடலளவிலும் மன அளவிலும் பெரும்பாதிப்பை உண்டாக்கும் குழந்தைத் திருமணங்கள் நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் கரூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஊட்டி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நடந்து வருவதாக சமூக நலத்துறை பட்டியலிட்டிருக்கிறது. புள்ளவிபரங்கள் வெளியிட்டிருந்தால் எங்கே பிரச்சனையாகுமோ என்று வெளியிடவில்லை. இது ஒரு வன்முறையில்லையா?

குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 15 மாதக் குழந்தை விற்கப்பட்டுள்ளது. இதற்காக பெறப்பட்டுள்ள தொகை அரிசி, மஞ்சள் கிழங்கு. (தினமணி 10-5-05) இது போன்ற பல செய்திகளைச் செய்திதாள்களில் காணமுடியும் இது வன்முறையில்லையா?

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் நடுத்தரக் குடும்பங்களில் 1 கோடி கருக்கலைப்புகள் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கருவில் உள்ள குழந்தை பெண் குழந்தை என்பதால் இவை நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த உலகத்தில் ஆண்குழந்தைகள் தான் இருக்கவேண்டும் என்ற கருத்தாக்கத்தால் எழுந்து இந்த வன்முறை. இவை வன்முறையில்லாமல் வேறென்ன?

ஒரு வருடத்திற்குத் திருட்டுத்தொழில் செய்ய 50 ஆயிரத்திற்கு பெற்ற மகனை விற்ற செய்தி (தினத்தந்தி 27-10-05) எதை வெளிப்படுத்துகிறது.? குழந்தை தனது சொத்து என்ற அடிப்படையில் நடந்த இந்த நிகழ்வு வன்முறையில்லையா?.

குழந்தைகளை ஆசையோடும் அன்போடும் அரவணைத்து வளர்ப்பவர்கள் பெற்றோர்கள் என்பதுதான் நம் பொதுவான கருத்து. ஆனால் பெற்ற பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு நடக்கும் நிகழ்வுகள் ஏராளம். இவைகளை வன்முறை என்று சொல்லலமா? கூடாதா?

குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 6 முதல் 7 லட்சம் சிறுமிகள் என்கிறது யுனிசெஃப் அமைப்பு. இவை வன்முறைதானா? இல்லையா?

ஆக, குழந்தைகளுக்கு அங்கிங்கெணாதபடி எல்ல இடங்களிலும் வன்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதன் அடிப்படையான காணத்தைத் தோன்டும் போதுதான் சங்கிலித்தொடர் போன்று சமூகப் பிரச்சனையாகவும், அரசியல் பிரச்சனையாகவும் வடிவமெடுக்கின்றன. பாரபட்சமான, ஏற்றத்தாழ்வான சாதிய அடுக்குமுறைகளும் இதற்குக் காரணமாகின்றன என்று புலப்படுகிறது. இவற்றைக் களைய வேண்டும் என்றால் பல கட்டங்களில் நம் போராட்டம் தொடரவேண்டும்.

ஒட்டு மொத்தமாக குடும்பத்தில் உள்ள வன்முறைகளை சொல்கிறீர்கள்? ஆனால் எங்கள் வீட்டில் அவ்வாறு நடப்பதில்லை…

எவ்வளவு ஆழமாக நம்புகிறீர்கள். பெரியவர்கள் வீடுகளில் சண்டை போடுவது கூட குழந்தைகளின் மனநிலையை மிக ஆழமாக பாதிக்கிறது. நான் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு குழந்தையிடம் படம் வரையச்சொன்னேன். தன் அப்பாவும் அம்மாவும் சண்டையிடுவதால் தனக்குப் படிப்பும் வரவில்லை, இருக்கவும் பிடிக்கவில்லை என்று குழந்தை சொல்வதான கார்ட்டூன் அது. அந்தக் குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்த போது எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளாள் என்று தெரிந்தது.

“யார் யாரோடு சண்டை போட்டாலும் கடைசியில் பாதிக்கப்படுவது நான் தான். எனக்குத்தான் அடி கிடைக்கும். திட்டு கிடைக்கும். அப்போதெல்லாம் நான் அழுவேன். அழுதால் அதற்கும் அடி கிடைக்கும். அதனால் கஷ்டப்பட்டு அடங்குவேன். தொண்டையெல்லாம் அமுக்கி வலிப்பது போல இருக்கும். நெஞ்சுவலிக்கும். நிற்க வைத்து ஜெயிலுக்குள் இருப்பவர்கள் கிட்ட கேள்வி கேட்பது போல் கேட்பார்கள். நிறைய தடவை நினைப்பேன். சுனாமி வந்தப்ப இவங்க செத்து போயிருக்க கூடாதா?… என்று. அப்புறம் உடனே சாமிகிட்ட மன்னிப்பும் கேட்பேன். நான் அவங்க கிட்ட அடியும் உதையும் வாங்கறப்ப எல்லாம் எங்கயாவது ஓடிப்போலாம் போல இருக்கும்.

அப்படி போனா பொம்பளைப் பிள்ளங்கள யாரோ பிடிச்சுக்கிட்டு போயிருவாங்கன்னு எங்க பக்கத்து வீட்டு பெரியம்மா சொல்லும். நான் எங்கப்பாரு அடிக்கும் போதெல்லாம் கெஞ்சுவேன். என் சத்தம் எதையும் காதில வாங்க மாட்டாங்க. எனக்கு எங்கம்மாவும் அப்பாவும் அன்பு செய்ய மாட்டாங்களான்னு இருக்கும்.

பக்கத்துல உட்கார்ந்து பேசமாட்டாங் களான்னு இருக்கும். அவங்க மடியில் படுத்து கத்தணும் போல இருக்கும். கோபமா இருக்கும்போது அவங்களைப் பாத்தாலே எனக்கு பயம். இதனால சரியாவே படிக்க முடியலை. பள்ளிக் கூடத்திலே டீச்சரும் படிக்காட்டி அடிப்பாங்க. எங்கம்மாவும், எங்கப்பாவும் கையில அடிச்சாங்கன்னா எங்க டீச்சர் குச்சியில அடிப்பாங்க. எல்லா பிள்ளைகளும் சிரிக்கும். சிரிக்கிறப்ப செத்து போகலாம்னு இருக்கும். ஏன் பொறந்தோம்னு இருக்கு. நான் யாருக்கும் பிரயோசனமில்லை. ஒண்ணு சுனாமில நா செத்திருக்கணும்” என்று கேவிக்கேவி அழுதாள் அந்தக் குழந்தை.

மனசே தாங்கவில்லை. இப்படிப்பட்ட சின்னச்சின்ன விசயங்கள் கூட அந்தக் குழந்தைகளை எப்படிப் பாதிக்கிறது. ஒரு வார்த்தையைக் கூட தாங்க முடியாத அளவு அவ்வளவு மெல்லியதா இவர்கள் உள்ளம்? பூ என்று சொல்வார்களே, அதைப்போன்றதா? எங்களின் சொல்லும் செயலும் உங்களை அவ்வளவாகவா பாதிக்கிறது? எங்களின் நடவடிக்கை உங்களை உட்சுருக்கி சுக்குநூறாக நொறுக்கி விடுகிறதா? என் போன்றோர் திருந்தாத வரையில் ஒட்டுமொத்த பெற்றோர்கள் சார்பாக உங்களிடம் மன்னிப்பு மட்டும் தான் கேட்கமுடிகிறது என்னால். ஆனால் இதை வாசிக்கும் ஒவ்வொரு நபரும் கண்டிப்பாகத் திருந்துவார்கள். எனக்கு நம்பிக்கையிருக்கிறது.

யார் குழந்தைகளின் சுதந்திரத்தை யோசிக்கப்போகிறார்கள்?

மனதுக்கு துயரமாகத்தான் உள்ளது. ஆனால், இவ்வளவு பெரியவர்களாகிய நமக்கே சுதந்திரம் கிடைக்கலை. யார் குழந்தைகளின் சுதந்திரத்தை யோசிக்கப்போகிறார்கள்?

இங்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு தெரிந்து என்னென்ன சுதந்திரங்கள் உள்ளன? (பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கல்வி கற்க, இந்தியாவில் எங்கும் சுதந்திரமாக போய்வர… இப்படி கொஞ்சம் தெரியும். ஆனா எங்க…. (!?) இதெல்லாம் இருந்தும் நம்மால் செய்ய முடிகிறதா என்ன?)

உங்கள் ஆதங்கமா இது? சரி, சுதந்திரம் என்பதை இப்படியாகப் புரிந்துகொள்ள வேண்டும். குடைபிடித்துப் போவது சுதந்திரம் என்றால் அந்தக் குடையின் கம்பி அடுத்தவரது கண்ணைக் குத்தாதவரை என்பதாக அர்த்தம் கொள்ளவேண்டும். எல்லா சதந்திரமும் அனுபவிக்க முடியாதவரை நம்மைத் தடுப்பது எது? என்பதை நாம் யோசிக்கவேண்டும். நமது கல்வி அவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும்.

விஞ்ஞானத்தைப் படித்தவர்கள் அந்தப்படிப்பின் தன்மையும் பயனும் உண்மைகளும் தெரிவதற்கு பதிலாக பாம்புப் பால்குடிக்கும் என்று புத்துக்கு பால்வார்ப்பது, போன்ற மூட நம்பிக்கைகளை வளர்ப்பதில் பெரும்பாலும் முன்னணியில் நிற்கும் அளவிற்கு தான் கல்வி முறைகள் உள்ளன.

கல்வி என்பது தீயவற்றை எதிர்க்கும் சிந்தனையை வளர்த்தெடுக்கவும், மனிதம் வளர்க்கும், மனம் வளர்க்கும், உடல் வளர்க்கும், சுதந்திரமான, அடிமைத்தனம் அற்ற, மனித ஆளுமைகளை வளர்க்கிற கல்வியாக இருக்கவேண்டும்.

குழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொள்ளாதவரை நமக்கு நாமே பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பது நிச்சயம். ஒவ்வொரு குழந்தைக் கல்வியாளர்களிடமும் கேட்டுப் பாருங்கள். தன்னிடம் படிக்கும் மாணவர்கள் மிக உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்று நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதாகத்தான் அவர்களின் எண்ணம் இருக்கும். ஆனால் வெளிப்படுத்தும் விதம்தான் மாறுபடுகிறது. மாணவர்களைத் ‘திருத்துவது’ என்பது அடித்து திருத்துவது, தண்டித்து திருத்துவது, பிற மாணவர்கள் மத்தியில் மனம் புண்படுகிறவரை திட்டித் திருத்துவது அல்ல.

அதன் விளைவு எதுவாக இருக்கும்? ஒரு மாணவன் எந்த நிலைக்கு வரவேண்டும் என்ற ஈடுபாட்டில் ஆசிரியர்கள் யோசித்தார்களோ அந்த நிலை மாறி அம்மாணவன் தன் ஆசிரியரை ஒரு எதிரியாகப் பாவிப்பான். வகுப்பில் சரியாகக் கவனிக்காத மாணவனை ஒரு ஆசிரியர் எல்லா மாணவர்கள் மத்தியிலும் சத்தம் போட்டு திட்டி ‘வெளியே போ” என்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அம்மாணவன் மிகச் சாதாரணமாக வகுப்பை விட்டு வெளியேறினால் ஆசிரியரின் நோக்கம் வீணாகிவிடும். மாறாக, அம்மாணவனைத் தனியாக அழைத்து நேரத்தின் முக்கியத்துவத்தையும், அவன் வீட்டில் எந்த அளவு கஷ்டப்பட்டு அவனைப் படிக்க வைக்கிறார்கள் என்பதையும், வகுப்பு நேரத்தில் கவனிப்பு எந்த அளவிற்கு பிரயோசனமானது என்பதையும் உணர்த்தினால் நிச்சயமாக சிறிதளவு பயன் இருக்கும். அம்மாணவனின் உள்ளத்தில் ஆசிரியரைப் பற்றிய மதிப்பும் மரியாதையும் எண்ணமும் உயரும். ஏனென்றால் நாம் சொல்லக்கூடிய கருத்துக்களைப் பிறர் ஏற்கவேண்டும் என்றால் கேட்பவர் மத்தியில் கருத்து சொல்பவர்களைப் பற்றிய மதிப்பீடு சிறந்த முறையில் இருக்கவேண்டும்.

சொன்னபடி கேட்காத பிள்ளையை என்ன செய்வது?

கொஞ்சநாளாக நானும் குழந்தைகளை அடிப்பதை நிறுத்தினேன். எவ்வளவு கோபம் வந்தாலும் பரவாயில்லை என்று என்னைக் கட்டுப்படுத்தினேன். ஆனால் என் மகன் சொன்னபடியே கேட்பதில்லை. இவனை என்ன செய்யலாம்?

அதை உங்கள் குழந்தையிடமே கேட்டுப்பாருங்கள். பலன் கிடைக்கும். நான் உன்னை அடிக்கக் கூடாது என்று நினைக்கிறேன். நீ இப்படி செய்தால் கண்டிப்பாக அடிப்பேன். உனக்கு அடி கொடுக்கட்டுமா? என்று கேட்டுப்பாருங்கள்… குழந்தைகள் எப்போதும் நிறைய விசயங்களை உள் வாங்குகிறார்கள். உங்களிடம் ஏற்பட்ட மாற்றத்தை இந்நேரம் உணர்ந்திருப்பார்கள். உட்கார்ந்து பேசினால் போதும். நாம் நம் குழந்தைப்பருவத்தைக் கொஞ்சம் திரும்பி பார்ப்பது அவசியம்.

நாம் நம் சிறுவயதில் என்னவெல்லாம் செய்திருப்போம். எப்போது பார்த்தாலும் தெருவில் ஆடிக்கொண்டிருக்கவில்லையா? வெயிலும், மழையும், பனியும் நம்மை பாதிக்குமா? எப்போது பார்த்தாலும் ஒரே துள்ளல்தான். இந்த நிலையை நாம் நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோமா? எப்போது பார்த்தாலும் படிப்பத்தான். விளையாடுவது கூட அடைக்கப்பட்ட கூண்டுக்குள் தான். போதாதற்கு டி.வி. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம்முடைய குழந்தைப் பருவம் எவ்வளவு நன்றாக இருந்தது? இப்போதுள்ள குழந்தைகளைப் பாருங்கள். எவ்வளவு இன்பத்தை இழக்கிறார்கள்? இவர்கள் பெரியவர்களானதும் இதைவிட இன்னும் இறுகலாகி இயந்திரங்களைப் போல ஒரு வாழ்க்கையை மேற்கொள்வார்கள். விளையாட்டு என்ற பதமே நம் அகராதியிலிருந்து இல்லாமல் போய்விடும்.

பெரியவர்களுக்குத்தான் எதையும் எளிதில் சொல்லிப் புரியவைக்க முடியாது. எல்லாவற்றிற்கும் ஒரு உதாரணம் வேண்டும். அதை விளக்கிச்சொல்ல வேண்டும். காரணம் சொல்லவேண்டும்.

குழந்தைகள் அறிவின் வாசலை கண்டுபிடிப்பவர்கள். அந்த கண்டுபிடிப்பு என்ன என்பதை பற்றி நம்மால் புரிந்து கொள்ளமுடியாது.

குழந்தைகள் உலகம் மிக விந்தையானது. வேடிக்கையானது. விநோதமானது. எவராலும் எளிதாக நுழையமுடியாது. அதனால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளமுடியும். அவர்கள் அவ்வளவு ஆற்றல் உள்ளவர்கள்.

பெட்ரோல் பங்கில் ஏமாறாமல் இருப்பதற்கு! ! ! !



தயவு செய்து நண்பர்களுடன் இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்....

படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் மேலே இருந்து பெட்ரோல் நிரப்புமிடத்தில் நீங்கள் பெட்ரோல் போட்டுக்கொள்கிறீர்களா...?

உங்களுக்கான எச்சரிக்கை இது...

நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள்...

இது போன்ற இடங்களில் மீட்டர் பெட்ரோல் நிரப்பும் நாசில் மீது இருக்கும்...

பெட்ரோல் நிரப்பும் நபர் உங்களிடம் எவ்வளவு என்று கேட்பார்...

நீங்கள் 100.00 ரூபாய் அல்லது 200.00 ரூபாய் என்று கூறுவீர்கள்...

மீட்டரில் இரண்டு வரிசைகளில் எண்கள் ஓடும்...

முதலில் உள்ளது லிட்டர் அளவு...

அதற்குக் கீழே உள்ளது தொகை...

பெட்ரோல் நிரப்பத் தொடங்குகையில் 0.0000 என்று இரண்டு வரிசைகளிலும் இருக்கும்...

நீங்கள் நூறு ரூபாய் என்று கூறினால்
பெட்ரோல் நிரப்பத் தொடங்கியதும்
லிட்டர் அளவு வருமிடத்தில் 1.0000 என்று வந்ததும் பெட்ரோல் நிரப்பும் நபர் நிறுத்தி விடுவார்...

நமக்கு அது ஒரு லிட்டர் என்பது தெரியாமல் நகர்ந்துவிடுவோம்...

அவ்வளவுதான் 100.00 ரூபாய்க்கு 30.00 ரூபாய் உங்களிடமிருந்துஉங்கள் அனுமதியுடன் திருடப்பட்டுவிட்டது...

200.00 ரூபாய்க்கு 60.00 ரூபாய் உங்களிடமிருந்துஉங்கள் அனுமதியுடன் திருடப்படும்...

நீங்கள் கூறும் 100.00-இன் மடங்குகளுக்கு ஏற்ப நீங்கள் ஏமாறும் தொகை 30.00-இன் மடங்குகளில் அதிகரிக்கும்...

ஏற்கனவே பெட்ரோல் விலை சுமை போதாதென்று இது வேறு...

ஆண்களும்,பெண்களும் கவலைப்படும் ஒரே பிரச்சனை...தலை பிரச்சனை தாங்க...!



கூந்தல் உதிருவதற்கான பல்வேறு காரணங்கள்  இருந்தாலும்  முக்கியமான ஒன்று, பொடுகு.

சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு புண் போன்றவை ஏற்படும்.
பொடுகு தொல்லை போக சில வழிமுறைகள்:


மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிட ங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.


வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தது வந்தால் , உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.


தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து சீயக்காய் தேய்த்து குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.


வேப்பிலை கொழுந்துடன்  துளசி சேர்த்து ஆகியவற்றை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.


வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.


எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து  சீயக்காய் போட்டு   குளித்தாலும் பொடுகு நீங்கும்.


தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.


தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான சூடு நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.


துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

Tuesday, 18 March 2014

பாப்கார்ன்: ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..! - உங்களுக்காக...



சில மாதங்களுக்கு முன் இங்குள்ள மால் ஒன்றில் திரைப்படம் பார்க்கப் போயிருந்தோம்.

‘மாம், பாப்கார்ன்?’

‘சரி’ என்றேன்.

மெகா சைஸ் பாக்கெட். ‘இவ்வளவு எப்படிடா சாப்பிடறது?’

‘சும்மா சாப்பிடும்மா. காரன் லோ காலரி. உடம்புக்கும் நல்லது’

விலை என்னவோ என்று மனதிற்கு நினைத்துக் கொண்டேன். கேட்டால் கோபிப்பான் மகன்.

பக்கத்திலிருந்தவர் சொன்னார் தன் மனைவியிடம்: ‘ஒரு பெரிய பாக்கெட் நூறு ரூபா’. ரெண்டுபேரும் ஷேர் பண்ணிக்காலாம், ஓகே?’

எனக்கு மனதுக்குள் ‘திக்’. நூறு ரூபாயா? இந்த விலையில் கிலோ கணக்கில் சோளம் வாங்கி வீட்டிலேயே பாப்கார்ன் செய்யலாமே!

‘இதுல இருக்குற ருசி வருமா, நீ வீட்டுல பண்ணினா?’ என் மனதைப் படித்தாற்போல என் மகன் கேட்டான்.

‘இதுல ஏதோ போடுவான் போல’ என்றேன்.

‘அதையெல்லாம் இப்ப நினைக்காதே. பாப்கார்ன் தின்று கொண்டே படத்தைப் பார்’ என்று அந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தான் அவன்.

கொஞ்ச நாளில் மறந்தும் விட்டேன்.

போனவாரம் ஒரு மின்னஞ்சல். பாப்கார்ன் பற்றிய எச்சரிக்கையைத் தாங்கி வந்தது. படிக்கும்போதே ‘பக்,பக்’ என்றது.

இதோ உங்களுக்கும்:

 நுரையீரலுக்கு வேட்டு வைக்கும் பாப்கார்ன் !!

மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர் ஆகட்டும்…மெகா ஷாப்பிங் மால்கள் ஆகட்டும்…

நிரம்பி வழிகிற பெரிய்ய்ய்ய்ய்ய பாப்கார்ன் பாக்கெட்டுடன் வலம் வருவது குட்டீஸ், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லாருக்கும் இன்று ஒரு ஃபேஷன். பாக்கெட் 100 ரூபாய் என்றாலும் வாங்கத் தயங்குவதில்லை.

அதன் மணமும் சுவையும் ஒரு காரணம் என்றால், ‘சோளப்பொரிதானே… உடம்புக்கு ரொம்ப நல்லது’ என்கிற நினைப்பு இன்னொரு காரணம்.

‘நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குது’ என்பது போல இதன் பின்னே நிறைய பிரச்னைகள்!

சோளம் உடலுக்கு நல்லதுதான்.

நார்ச்சத்து நிறைந்ததுதான்.

கலோரி குறைவான, ஆரோக்கியமான தீனிதான்…

சந்தேகமே இல்லை.

ஒரு கப் பாப்கார்னில் இருப்பது வெறும் முப்பதே கலோரிகள்…

வைட்டமின் பி1, பி5, சி, பாஸ்பரஸ், மாங்கனீசு என போனஸாக ஏகப்பட்ட சத்துகள்! இதெல்லாம் இயற்கையான முறையில் சோளத்தைப் பொரித்து சாப்பிடுகிற வரையில் மட்டுமே!

கடைகளிலும் தியேட்டர்களிலும் மிஷின் வைத்துப் பொரித்துக் கொடுக்கிற பாப்கார்ன், வீட்டிலேயே உடனடியாக தயாரிக்கக்கூடிய இன்ஸ்டன்ட் பாப்கார்ன், மைக்ரோவேவ் பாப்கார்ன் போன்ற எல்லாம் இதற்கு விதிவிலக்கு.

100 கிராம் அளவுள்ள இன்ஸ்டன்ட் பாப்கார்ன் பாக்கெட்டை பொரித்தால் கிடைப்பது, 510 கலோரிகள்… 55 கிராம் கார்போஹைட்ரோட், 58 கிராம் கொழுப்பு அமிலங்கள், 10 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் புரதச்சத்து… அவ்வளவுதான்!

சோளத்தைப் பொறுத்தவரை கடலை வறுக்கிற மாதிரி அப்படியே பொரித்தால், மணமோ, சுவையோ இருப்பதில்லை.

அதனால்தான் எண்ணெய், வெண்ணெய், மசாலா சேர்த்துப் பொரித்து விற்பனை செய்கிற கடை அயிட்டங்களுக்கும், இன்ஸ்டன்ட் பாக்கெட்களுக்கும் அத்தனை மவுசு.

இவற்றில் கொழுப்பும் கலோரியும் அதிகம் என்கிறபோதே, பாப்கார்ன் ஆரோக்ய உணவு என்கிற கருத்து உடைபட்டுப் போகிறது.

இன்ஸ்டன்ட் பாப்கார்ன் பாக்கெட்களை தவிர்க்கச் சொல்கிற அறிவுரைகள் ஒரு பக்கம் தொடர, மைக்ரோவேவ் பாப்கார்ன் பாக்கெட்கள் இன்னும் ஆபத்தானவை என பீதியைக் கிளப்புகின்றன லேட்டஸ்ட் ஆராய்ச்சிகள்.

இன்ஸ்டன்ட் பாப்கார்னிலேயே மைக்ரோவேவில் செய்யவென பிரத்யேக பாக்கெட்கள் கிடைக்கின்றன.

தட்டையாகக் காட்சியளிக்கிற அந்த பாக்கெட்டை அப்படியே மைக்ரோவேவில் வைத்தால், சில நொடிகளில் உள்ளே உள்ள சோளப்பொரிகள் பொரிந்து, பாக்கெட் பூரித்து உப்பிப் பெரிதாகும்.

பாப்கார்ன் பொரிகிறபோது அதிலிருந்து கிளம்புகிற வெண்ணெய் வாசம், யாரையும் மயங்க வைக்கும்.

அந்த மயக்கத்துக்குக் காரணமான ‘டைஅசிட்டைல்’ ரசாயனம்தான் பாப்கார்ன் பாக்கெட்களில் ஒளிந்திருக்கிற எமன் என்பது பலருக்கும் தெரியாது!

‘‘மைக்ரோவேவ் பாப்கார்ன் பாக்கெட்டில் மட்டுமில்லாம, குளிர்பானங்கள் உள்ளிட்ட நிறைய உணவுப் பொருட்கள்ல ‘டைஅசிட்டைல்’ சேர்க்கப்படுது.

இது மஞ்சள் நிறத்துல பவுடராகவோ, திரவ வடிவத்துலயோ இருக்கும். மார்ஜரின் மற்றும் எண்ணெய் உணவுத் தயாரிப்பாளர்கள், இதை உபயோகப்படுத்தி, சம்பந்தப்பட்ட உணவுக்கு செயற்கையான வெண்ணெய் மணத்தையும் சுவையையும் கொண்டு வர்றாங்க.

அதை சேர்க்காத பட்சத்துல, அந்த உணவுகள் ருசிக்கிறதில்லை. மேல சொன்ன செயற்கை வெண்ணெய் ருசிக்கான பொருளைத் தயாரிக்கிற தொழிற்சாலைகள்லயும், மைக்ரோவேவ் பாப்கார்ன் தயாரிப்புத் தொழிற்சாலைகள்லயும் வேலை பார்க்கிறவங்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படறது நிரூபணமாயிருக்கு.

மைக்ரோவேவ் பாப்கார்னை அடிக்கடி சாப்பிடறவங்களும் இதுக்கு விதிவிலக்கில்லை.

டை அசிட்டைலை தொடர்ந்து சுவாசிக்கிறதோட விளைவுதான் இது’’ என அதிர வைக்கிறார் ஆராய்ச்சியாளர் ராதாகிருஷ்ணன்.

டைஅசிட்டைல் கலக்கப்பட்டுள்ள தின்பண்டங்களை, குறிப்பாக சூடுபடுத்தி உண்ணக் கூடியவற்றைத் தவிர்ப்பதே பொதுமக்களுக்கான ஆரோக்ய அறிவுரை என்கிறார் இவர்.

‘‘சுவையும் மணமும் குறைவா இருந்தாலும் வீட்லயே சாதாரண முறையில் தயாரிக்கக்கூடிய பாப்கார்னே பாதுகாப்பானது.

மெகா சைஸ் பாக்கெட்ல விற்பனையாகிற பாப்கார்ன் பாக்கெட்டுகளோட ‘கமகம’ வாசனை வேற ஒண்ணுமில்லை.

பிரச்னையை ‘வா வா’ன்னு கூப்பிடற டைஅசிட்டைலேதான்…’’ என எச்சரிக்கிறார் அவர்.

படித்தவுடன் இனிமேல் வெளியே பாப்கார்ன் வாங்கி சாப்பிடவே கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன், நீங்க?